Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தன்மாணம் காப்போம் நூல் முடி அஜரத் நமது விளக்கம்


நாம் நூல் முடி அஜரத் தேவை என்ற கட்டுரைக்கு விளக்கம் கேட்டு அபு ஹசனுக்கு கடிதம் எழுதி இருந்தோம் அவர் நமது இனையத்திற்கு எழுதிய கடிதம்.

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
வாசகர் அனைவருக்கும், அஸ்ஸலாமு அலைக்கும்.
நூல் முடி அஜரத் தேவை.
       நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவர் அல்லாஹுவுக்கு இணை கற்பித்து விட்டார்கள்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல் அஹ்மத்-16781.
       நபி (ஸல்அவர்கள் கூறினார்கள்யார் தாயத்தை தொங்க விடுகின்றாரோஅவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான்யார் சிப்பியை தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறை வேற்றமாட்டான்அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரழி). நூல் அஹ்மத்-16763.
        வணக்கத்திற்குறியவன் நாயன் அல்லாஹுவைத் தவிர வேறு யாருமில்லை என்று ஈமான் கொண்டு,சாட்சியும் அளித்துள்ள நாம்அல்லாஹுவுக்கு பயந்தவர்களாக அல்லாஹுவின் மீது மட்டும் நம்பிக்கை கொண்டு வாழ்வு நடத்த உறுதியோடு இருப்போமாக.
       என்று தொடங்கும் இக்கட்டுரையின் சொந்தக்காரன் இதோ அபூ ஹசன். இதை எழுதும் போது, ஒர் முஸ்லீமாக இருந்து எழுதியுள்ளோனே தவிர, யாதொரு இயக்கத்தின் வால் பிடித்து எழுதவில்லை.
அல்லாஹுவின் மார்க்கத்திலிருக்கும் நாம், நமது மார்க்கத்தை தவறுதலாக போதிப்பவர்களையும், அதை விளங்கிக் கொள்பவர்களையும் கண்டு, அவர்களுக்கு உபதேசிக்க எண்ணம் கொண்டு கட்டுரையை எழுதியுள்ளேன். கட்டுரையில் வரும் சம்பவம் அனைத்தும் உண்மை.
       கட்டுரையில் சுட்டிக்காட்டும் செய்தி தாயத்து கட்டுவது பற்றியது. சுட்டிக்காட்டப்படும் செய்தியை ஆய்வு செய்து, வாழ்க்கைக்கு உகந்ததாக ஒவ்வொரு வரும் தம் வாழ்வில் ஆக்கிக் கொள்ளனும் என்பதுதான் எமது நோக்கம். எமது பிரச்சாரம் பெரிதாக ஆக்கித்தந்த அல்லாஹ்வின் மகிமை உணருகின்றேன்.. 
       கட்டுரையில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ஆலிம், வெள்ளிக்கிழமை பயான் வகுப்பின் பெண் பொறுப்பாளி, ஆலீமிடம் கேள்வியை கேட்டவர். அதாவது இரண்டு உள்ளூர் பெண்கள். ஒரு ஆலிம். ஆக, பங்களிப்பவர்கள் மூன்று பேர். பயானுக்கு வந்தவர்கள் சுமார் 40 பேரில் எனது உறவுக்காரர்கள் 6 பேர்.
       இப்போது நான்கு நபர்களை அடையாளம் காட்டியுள்ளேன். இவர்களை நேரில் சென்று விசாரிக்கையில் உண்மைகள் அனைத்தும் தெரிந்துவிடும். இந்த நால்வரும் அந்தரங்கத்தில் சம்பவத்தை ஒத்துக் கொள்ளும்போது,அப்பறம் எதற்காக இந்த லெப்பைக்குடிகாடு நகர ஜமாதுல் உலமா தலைவர் கணம் கணம் ஹஜரத் அமானுல்லாஹ் அவர்கள் மறுக்கின்றார். மேலும், எனது உறவுக்காரர்கள் 6 பேர் சாட்சியமாக இருக்கின்றார்கள்.
       ஒரு பெரிய ஜும்மா பள்ளிவாசலில் இமாமான இவர், நிகழ்ச்சியின் உண்மையை, மறைக்கப் பாடுபட வேண்டியதன் நோக்கமென்ன?  தாயத்து விலை மார்க்கட்டுக்கு துணை போகவா? இவர் யாருக்கு முட்டு கொடுக்கின்றார் என்று சொல்லுங்கள். தாயத்துக்கா, உலமாவுக்கா, மார்கத்துக்கா?
       லெப்பைக்குடிகாடு நியூஸ் ஆசிரியர் வாயிலாக மேன்மை தாங்கிய மவுளவி ஹஜ்ரத் கணம் கணம் அமானுல்லாஹ் அவர்களுக்கு தெரிவிப்பது. சம்பவம் நடக்கவில்லை என்று இனையதளம் மூலமாகவும், பிரசுரம் மூலமாகவும் உண்மையை மறைக்க (பொய் சொல்ல) நீங்கள் எடுக்கும் முயற்சி, விஷயத்தை பெரிது படுத்திவிட்டது. நெட்டில் மட்டும் அறிய வந்துள்ளதை விளம்பரப் படுத்தி தெரு மக்களுக்கும் காட்டிய உங்கள் முயற்சிக்கு நன்றியையும், அல்லாஹுவின் ஆற்றலை அல்ஹம்துலில்லாஹ் என்றும் கூறி மகிழ்கின்றேன். இருப்பினும், உங்கள் பின்னால் நின்று தொழபவர்களை கவலையோடு சிந்தியுங்கள். பின் தொடர்ந்து தொழுபவர்களின் தொழுகைகளை அல்லாஹ்விடம் கொண்டு செல்ல உதவியாக இருங்கள். நன்நம்பிக்கை யாளர்கள் மட்டும் தொழவைக்க தகுதியுடையவர்கள்.
       நேரில் வந்து நிரூபிக்க தயாரா? ஹஜரத்தின் கூவல்.
       நடு ரோட்டிலே கொலை (மார்க்கக் கொலை) நடக்குது, ஊர் மக்கள் எல்லாரும் பார்க்கின்றார்கள். ஆனால் போலீசில் சாட்சிக்கு கூப்பிட்டா ஒருத்தரையும் காணோம். இதே நிலையில் தான் இதுவும் இருக்கும் என்று தலைவா யூகித்து விடாதே.
       மார்க்க விசயமாக இருப்பதாலும், பெண்கள் சம்பந்தப்பட்டிருப்பதாலும், நிதானம் காட்டுகின்றேன். தடயங்கள் எம்மிடம் இருக்கிறது. சாட்சியும் இருக்கிறது. எமது நோக்கம் தாயத்து தடை பற்றிய  போதனை. அது மக்களிடம் சென்றடைந்து விட்டது.
       இக்கட்டுரைக்குப்பின், ஆலிம்களிடமிருந்து மக்கள் எதிபார்ப்பது, தாயத்தை கட்டிக் கொள்ளலாமா, தூர எறியலாமா.? என்பதே. அதை மிஞ்சியுள்ளோர்களும் அறிய ஆலிம்கள் உதவுங்கள்.
       ஹஜரத் அவர்களே, கட்டுரையின் முகப்பில் இரண்டு ஹதீஸுகள் வந்துள்ளது. இந்த இரண்டும் சரியானதா இல்லையா என்பதை மட்டும் எழுதிவிட்டு இதன் தீர்ப்பை அல்லாஹுவிடம் விட்டுவிடுகின்றேன்.
99:7 فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ
99:7எனவேஎவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார்.
99:8 وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
99:8அன்றியும்எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும்(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

அன்பான வேண்டுகோள்:- இந்த தருனத்தை பயன் படுத்தி தாயத்தை தடை செய்வோம் என ஒரு மாபெறும் மார்க்க சொற்பொழிவு லெப்பைக்குடிகாடு ஜமாதுல் உலமா சபை தலைவர் ஏற்பாடு செய்தால், அனைத்து நமதூர் பெண்கள், விளக்கமாக அறிந்து, பயனடைவார்கள். ஷிர்கிலிருந்தும் விடுபடுவார்கள். அதன் கூலியை உலமா சபை அல்லாஹுவிடத்தில் பெறுவர்.   
---அபூஹசன்.

______________________________________________________________________________
அன்புள்ள நமதூர் மக்களுக்கு 
கடந்த 5 நாட்களாக நமதூர் மக்கள் மத்தியில் நமது இனைய தளத்தில் மேல் உண்மைக்கு புறம்பாக நடத்துகிறோம் என்று சிலர் குற்றம் சுமத்தியுள்ளனர். அதனை நாங்கள் நிரூபிப்பதா அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்வதா என்ற தருவாயில் இருக்கிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர் என்ற முறையில் நாங்கள் அன்று பயானுக்கு சென்ற பலரிம் விசாரித்ததில் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால் ஒரு பெண் மட்டும் அதற்கு மாற்றமாக கூறுகிறார். சாட்சிக்கு வரும் நிலையிலும் அவர் இல்லை! எனவே ஒருவர் மீது குற்றம் சுமத்தி அதை நிருபிக்க முடியாத பட்சத்தில், குற்றம் கூறியவர் மீது தான் குற்றமாகும் என்று எங்கள் முன்னோர்கள் இஸ்லாம் கூறியதை வழியுருத்தினார்கள். அதன் வரிசையில் வந்த நாங்கள் குற்றவாளிகளாக நிருபனமாகிறோம். நாங்கள் கூறிய இந்த குற்றச்சாட்டின் மூலம் யாராவது பாதித்திருந்தால் மறுமையின் அச்சத்தோடும், உள்ளத்தூய்மையோடும் மனதார மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம். அல்லாஹ்விற்காக எங்களை பொருந்திக் கொள்ளுங்கள்.
குற்றம் செய்தவர்கள் யார் என்று அவர்களுக்கே தெரியும் இதன் பொருப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறோம்.
இதன் மூலம் கிழக்கு பள்ளி இமாமும், அபு ஹசனும் மக்களுக்கு செய்த நன்மை ”தாயத்து கட்டுவது இஸ்லாத்தில் ஆகுமானதா? தடைசெய்யப்பட்டதா?” என்ற மக்கள் மனதில் எழும் கேள்விதான். இதனை தெளிவு படுத்தும் கட்டாயத்தில் ஆலிம்களும் இமாம்களும் உள்ளனர்.

உலகில் வாழ்ந்து சென்ற பல சாதனையாளர்கள் பல்வேறு அவமானங்கள் இழிவுகள் சோதனைகளுக்குப் பிறகே வரலாற்று ஏடுகளை ஆக்கிறமித்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட வெற்றியாலர்களின் உதாரணங்கள் ஆடு மேய்க்கக் கூட தகுதியில்லாத நீயெல்லாம் என்ன சாதிக்க போகிறாய்? என்று வசைமொழி வாங்கிய கலிபா உமர் ரலி அவர்களில் ஆரம்பித்து, நீக்ரோ கருப்பினத்தை சார்ந்தவன் என தனது சமூகத்தால் தாழ்வாக கருதப்பட்ட மால்கம் எக்ஸ் வரை முன்னோடிகளின் வாழ்வு தொடர்கிறது!
இவர்கள் எல்லாம் சோதனைகளைக் கண்டு ஒதுங்கிப் போய் இருந்தால் உலகில் வாழ்ந்த, வாழ்ந்துக் கொண்டிருக்கிற, இனியும் வாழப்போகிற எந்த சமூகங்களுக்கும் சீர்திருத்தம் என்பது சாத்தியமில்லாமலே போயிருக்கும். இது அனைத்து ஜமாத்துக்களுக்கும் இயக்கங்களுக்கும் பொருந்தும்.

இந்த இணையத்தளம் இதுநாள் வரை யாருக்கும் சாதகமாகவோ! அல்லது பாதகமாகவோ! செயல் பட்டது இல்லை பொதுவாக யார் மேலும்  எந்த ஒரு குரோதம், பழி தீர்க்கும் என்னமோ இதில் இருக்காது என்ற எண்ணத்தில் அடிப்படையில் தான் இதனை தோற்றுவிக்கப் பட்டது.
ஏன் மாற்றுமத சகோதரர்களுக்கு கூட இஸ்லாமிய அழைப்பு பணியை எங்கள் அறிவுக்கு எட்டியவண்ணம் கொடுத்துள்ளோம்! மாறாக மார்கத்திற்கு பங்கம் விளைவிக்கும் வண்ணம் யார் நடந்தாலும் (அது இஸ்லாமிய எதிரிகலாகட்டும், இஸ்லாமிய போர்வையில் இருந்துக்கொண்டு மக்களை வழிகெடுக்கு ஆசாமியாகட்டும்) அவர்களுக்கு எதிராகத்தான் இறைவன் மேல் முழு நம்பிக்கை வைத்து பயணித்து வந்தோம். பயணித்து வருகிறோம், இனியும் பயணிப்போம் இன்ஷா அல்லாஹ்.......
 நமது ஆசிரியர் குழுமம்.

9 கருத்துகள்:

  1. Abu Hasan avargale..
    intha sambavam unmai endral, engu nadanthadu..??? eppodu nadanthadu..??
    entha AALIM bayan seithargal..??? pen poruppalar yar..??? 6 saatchigal yar..???
    ithai yen therivikka villai..???

    பதிலளிநீக்கு
  2. மெளலவி N.அமானுல்லாஹ் ஹஜ்ரத் , கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜித் இமாம்17 ஏப்ரல், 2013 4:01 PM

    அஸ்ஸலாமு அலைக்கும்

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

    கட்டுரை வெளியிட்ட அபு ஹசனுக்கு,

    நடைபெறாத ஒரு சம்பவத்தை நடந்ததாகவும் அதற்கு உருவம் கொடுத்து சிறந்த ஒரு கற்பனை செய்து அழகான கதையையும் எழுதி இருக்கிறீர்கள். உங்களுடைய கற்பனை வளத்தை பாராட்டுகிறோம். (நீங்கள் சார்ந்த கூட்டமும் இப்படித்தான் கற்பனைகளை பரப்பிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை விளங்கிக் கொண்டோம்.)

    இந்த சம்பவம் உண்மையாக இருப்பின் நேரில் வந்து நிரூப்பிகத் தயாரா?

    அப்படி நிரூப்பிக்காத பட்சத்தில் நீயும், இதை வெளியிட்ட இந்த தளமும் பொய்யானவர்கள் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

    இணையத்தில் வெளியிட்ட ஆசிரியருக்கு,

    எந்தச் செய்தியாக இருப்பினும் அந்த செய்தி உண்மையானது தானா? என தீர விசாரித்தப்பின் உண்மையை மட்டும் வெளியிடவும்.

    திருக் குர்ஆனும், ஹதீஸும் கூறும் அறிவுரை:-

    பாவிகள் உங்களிடம் ஏதேனும் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் (அதை உடனே அங்கீகரித்து) அறியாமையால் (குற்றமற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கிழைத்து விடாதிருப்பதற்காக (அதன் உண்மையை அறிவதற்காக அதனை தீர்க்க விசாரணை செய்து) தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (அவ்வாறு நீங்கள் செய்யவில்லையெனில்) பின்னர் நீங்கள் செய்தவைகளை பற்றி நீங்கள் கைசேதப்படக்கூடியவர்களாக ஆகி விடுவீர்கள். (அல்-குர்ஆன் 49:6)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :-

    கேட்ட செய்தியெல்லாம் (ஆராயாமல்) அறிவித்து விடுவதே அவன் பொய்யன் என்பதற்கு போதுமானதாகும். அறிவிப்பாளர் :அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லீம்.

    கற்பனையான தகவலை ஆராயாமல் செய்தி வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.

    இந்த சம்பவம்(நடக்கவில்லை என்று) மறுப்பு செய்தி வெளியிடவும்.

    கருத்து தெரிவிப்பவர்கள் கவனத்திற்கு:-

    கருத்து தெரிவிக்கும் முன் அத்தகவல் உண்மை தானா? என்பதை ஆராய்ந்து பின் இஸ்லாமிய முறைப்படி நாகரீகமான் முறையில் கருத்து தெரிவியுங்கள்.

    இப்படிக்கு
    நகர ஜமாஅத்துல் உலமா
    லெப்பைக்குடிக்காடு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்Lbk Map18 ஏப்ரல், 2013 12:15 PM
    அஸ்ஸலாமு அலைக்கும்

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


    ஜி நீங்கள் சொல்வது சரிதான் நானும் தெரியாமல் தீர விசாரிக்காமல் கமன்ட் எழுதிடேன்

    மன்னிக்கவும்.

    ஜி நீங்கள் சொல்வது சரிதான தவறு யார் செய்தாலும் தவறுதான் இந்த விசையத்தை அனைவரும் ஒப்புக்கொள்ளவேண்டும் .ஆமின்

    ஒரு சின்ன கேள்வி (இருவருக்கும் )

    முதல்ல ஜி க்கு

    > ஜி இது நடக்கவே இல்லைனு நீங்க சொல்றிங்க இது உண்மையாக இருந்தால் சந்தோசம்

    ஆனால் இது நடந்ததா இந்த தளம் சொல்லுது யார் உண்மையை சொல்றார்கள் ?

    > ஜி நீங்க சொல்வதை இந்த தளம் நிருபித்து விட்டால் நீங்கள் இந்த கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜித் இமாம் தலைமை பதவியை விட்டு விலக தயாரா ?

    >ஏன் என்றால் நீங்கள் இமாமாக இருக்ககூடிய இந்த கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜிதில்

    சிருக்கான தவறு நடந்தால் நீங்கள் தான் பொறுப்பு .

    இரண்டாவது இந்த தளத்துக்கு வருவோம்

    > எனக்கு தெரிந்து இந்த தளம் தவறான விசையத்தை போட்டது இல்லை அப்படி தவறு செய்திருந்தால் அதற்கு மன்னிப்பையும் கேட்டுவிடுவார்கள் சந்தோசம் .

    >சரி விசையதுக்கு வருவோம் நீங்கள் உண்மையாளராக இருந்தால் இந்த சிருக்கு நடந்ததர்க்கான ஆதாரம் தர உங்களுக்கும் தெகிரியம் உண்டா .

    > நீங்கள் நிருபிக்காவிட்டால் இந்த தளத்தை இந்த நிமிடத்தில் இருந்து நிறுத்திவிட தயாரா

    நீங்கள் உண்மையாளராக இருப்பின் இதை நிருபிக்கவேண்டும்

    > யாருக்கும் பயப்பட வேண்டாம் அல்லாஹுவை தவிர அவனே யாவரையும் காப்பவன்.


    by

    map.lbk

    மெளலவி N.அமானுல்லாஹ் ஹஜ்ரத் , கிழக்கு ஜூ ம்ஆ மஸ்ஜித் இமாம் உங்கள் ஜமாது தான் உண்மைய சொன்ன மையத்தை தூக்க மாட்டோம் ,கல்யாணத்துக்கு கலந்துக்க மாட்டோம் , ஊரை விட்டு ஒதுகிடுவோம்னு சொல்றிங்களே அப்பறம் எப்படி வருவாங்க இப்படியெல்லாம் செய்யமாட்டோமுனு சொல்லுங்க இன்ஷா அல்லாஹ் அந்த 6 பேரு மட்டும் இல்ல அதுக்கும் மேல வருவாங்க.

    எல்லாம் பயப்படுராங்கனு நினைகிறேன்.
    by

    Map.lbk

    பதிலளிநீக்கு
  3. சகோதரர்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,

    சகோதரர் அபு ஹசன் அவர்கள் எழுதிய இரண்டு கட்டுரையும் நமதூரில் ப்ளாகில் செம ஹிட் பதிவு.அதுவும் தாயத் விஷயம் நமதூறு ஜமாஅத் இம்மாம்கள் தாயத் அணிவது தவறு என்று நோட்டிஸ் அடித்து விநியோகம் செய்யும் அளவிற்கு தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது என்பதை நினைத்து அல்லாஹ்விற்கு இத் தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இப்பொழுது தான் நமதூர் இணைய தளம் வெற்றிப் பாதையை நோக்கி செல்வதாக நான் உணர்கிறேன்.தொடர்ந்து இது போல் பல விழிப்புணர்வு பதிவுகளை எழுதி மக்களை தீமையிலிருந்து மீட்டெடுக்கும் வாய்ப்பை அல்லா ரப்புல் ஆலமீன் நம் அனைவருக்கும் வழங்குவானகா.

    அப்புறம் சில சகோதரர்கள் தேவை இல்லாமலும் பதிவுக்கு சம்மந்தம் இல்லாமலும் யாரு நீ உன் அட்ரெஸ் என்ன மரியாதைய ப்ளாக மூடிட்டு போய்டு என்று தொடர்ந்து கமெண்ட் பதிவதை பார்த்து வருகிறேன்.பதிவில் குறை இருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்வார்கள் .அதை விட்டு விட்டு தேவை இல்லாத கமெண்ட் பதிவதால் எந்த பயனும் இல்லை.

    இப்படிக்கு உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
  4. அஸ்லாமு அழைக்கும்

    என் அன்பான லப்பைகுடிக்காடு
    நகர ஜமாத்துல் உலாமாகளுக்கு நன்றியும் ,பாராட்டையும நான் கூறுகின்றான்.

    1.தாயத்து கட்டிக்கொள்வது தவறு,
    நூல் முடிவது தவறு மார்கத்திற்கு புறமானது என்று மக்களுக்கு தெளியு படுத்தி உள்ளார்காள்.

    2. அதே போல் அபு ஹசன் அவர்கள் எழுதிய (3.4.13) அன்று திருமண நாகரீகம் என்றத் தலைப்பில் உள்ள திருமணதில் மார்கத்திற்கு புறமான வீண் விரையத்தையும்.
    மக்களுக்கு தெளியு படுத்த வேண்டும்.


    7:31. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை (திரு குரான் ).

    3:104. மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.(திரு குரான் )

    விண் விரயம் செய்பவன் சைத்தானின் நண்பன் ஆவான் (திரு குரான் )
    by
    abu saaliha

    பதிலளிநீக்கு
  5. இவ்வளலு நடந்த பேறாகும் ஜமாஅத் என்ன செஞ்சுகிட்டு இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுக்கு முன்னால் என்ன செஞ்சுச்சு அதை தான் செய்யும்.

      நீக்கு
  6. தாயத்து..............

    நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்துப் பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், “ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவரிடத்தில் தாயத்து இருக்கிறது” என்று சொல்லி தன்னுடைய கையை நுழைத்து அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர், ” யார் தாயத்தைத் தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் ” என்று கூறினார்கள்.

    அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)

    நூல்: அஹ்மத் 16781

    abu saaliha

    பதிலளிநீக்கு