பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
மில்லத் அறக்கட்டளை சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்.
உங்களது பணிகளை நாம் கண்டு கொண்டு வருகின்றோம். லெப்பைக்குடிகாடு வாழ் ஏழை பிள்ளைகளின் உயர்கல்வி படிக்க உங்கள் சக்திக்கு ஏற்ப உதவி செய்து வருகின்றீர்கள். நல்லவைகள் செய்ய ஆட்கள் முன் வரமாட்டார்கள், ஆனால், நடக்கும் வேலையை முடக்க புகழ்ச்சி செய்து கெடுப்பார்கள். இல்லையாயின் குறை சொல்லி விரட்டுவார்கள். இவைகள் சதாரண மனிதனின் சுபாவமாக இருந்தாலும், வெள்ளாற்று நீரை அறுந்திய நம்மவர்களுக்கு கொஞ்சம் கூடுதல் குசும்பு சுபாவம். புகழ்சி, இகழ்சி அனைத்தையும் செவியுராமல் சேவைகளை செய்து அநேக முஸ்லீம் ஏழை மாணவ செல்வங்கள் கல்வி உதவி பெற்று பலனடைய வேண்டும், இதன் மூலம் நமதூரில் ஏழை குடும்பங்கள் குறையவேண்டும் என்ற எண்ணத்துடன் மில்லத் அறக்கட்டளை தொடர்ந்து நடக்க அல்லாஹுவிடம் துஆ செய்து கொள்வோம்.
தர்மங்களாவன. 1.ஜகாத், 2.ஸதக்கா, 3.ஸதகாத்துல் பித்ரு, 4.ஸதகாத்துல் ஜாரியா, போன்ற அரபுச்சொற்கள் முஸ்லீமாகிய நம் மக்களிடத்தில் புழக்கத்த்திலுள்ளது. இவைகள் யாவும் தர்மங்களை குறிக்கும் சொல்லாகும். முதல் மூன்று வகை தர்மங்களும் பொருளாதாரம் குன்றிப்போய் கஷ்டப்படும் ஏழைகளிடம் தர்மநிதி சேருகிறது. அதாவது செல்வந்தரிடமிருந்து புறப்பட்ட செல்வம் அல்லாஹ் வகுத்த எட்டு சாரார்களில் ஒருவரிடமோ, ஒருவகுப்பாரிடமோ, பலரிடமோ, பலவகுப்பாரிடமோ சேருவதுதான் இவ்வகை தர்மங்களாகும்.
அல்குர்ஆன் வசனம் 9:60. தானங்கள் (1)தரித்திரர்களுக்கும், (2)ஏழைகளுக்கும், (3)தானத்தைவசூல் செய்யும் ஊழியர்களுக்கும், (4)இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள்ஈர்க்கப்படுவதற்காகவும், (5)அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், (6)கடன்பட்டிருப்பவர்களுக்கும், (7)அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), (8)வழிப்போக்கர் களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன்,மிக்க ஞானமுடையோன்.
நான்காம் வகையான, ஸதகாத்துல் ஜாரியா எனும் நிரந்தர தர்மம் பொது மக்களை சென்றடைகிறது. இத்தர்மத்தால் உருவாக்கப்பட்டவை, பொது சொத்தாக இருக்கும்.
1.ஜகாத். இது ஒரு வகை கட்டாயமான தர்மம். தனது சொத்தின் மீது சுயமாக சொத்து வரி கணக்கீடு செய்து, கணக்கிட்டதை அந்த எட்டு சாரார்கள் மத்தியில் வழங்குவதாகும். இது கட்டாயமான தர்மமாகும். அதன் அளவீடு சொத்தின் மதிப்பில் 2½% என்று தொடங்கி இடத்திற்கு ஏற்ப விழுக்காடு மாறுகிறது. இது அல்லாஹுவின் கட்டளை.
2.ஸதக்கா. கடமையாக்கப்பட்ட தர்மமாக ஜகாத் இருக்கையில், தானாக முன் வந்து தனது கையில் இருக்கும் பொருளாதாரத்திலிருந்து ஒரு பகுதியை ஒதுக்கி, இந்த எட்டு சாரார்கள் மத்தியில் வழங்கப்படும் உபரி தர்மம் ஸதக்கா ஆகும். இப்படிப்பட்ட தர்மத்தை செய்கிறவர்களுக்கு தக்க கூலியை இம்மையிலும், மறுமையிலும் வழங்குகின்றான். அல்லாஹ் தனது திருமறையில் பல இடங்களில் மக்களுக்கு உபதேசித்து, கூலியை உறுதிசெய்து அதிகமாக ஸதக்கா செய்ய ஆர்வ மூட்டுகின்றான். இதை வழங்குபவர்கள் ஜகாத் வழங்க கடமை பெற்றவர் என்பது கட்டாயமில்லை.
3.ஸதகாத்துல் பித்ரு. தன்னைப் போல ஏழைகளும் உண்டும், உடுத்தியும் நோன்புப் பெருநாளை கொண்டாடச் செய்யும் வகையில் ஏழைகளுக்கு அளிக்கும் தர்மமே ஸதகாத்துல் பித்ரு எனப்படுவதாகும். இது குழந்தை முதல் முதியோர் வரை ஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் தலை கணக்கிட்டு கொடுப்பது குடும்ப பொருப்பாளரின் கட்டாய கடமையாகும். அந்த எட்டு சாராரும் பித்ராவை பெற தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இதையும் வழங்குபவர்கள் ஜகாத் வழங்க கடமை பெற்றவர் என்பது கட்டாயமில்லை. ஆனால், பித்ராவை பெறுபவரைத் தவிர்த்து, அனைவர் மீதும் வழங்க இது கடமை யாக்கப்பட்டுள்ளது.
4.ஸதகாத்துல் ஜாரியா. இதன் பொருள் நிரந்தர தர்மம். அதாவது, ஜகாத்து செய்தபின், மிஞ்சிய யிருக்கும் செல்வத்திலிருந்து பொதுமக்களின் பொது உபயோகத்திற்காக அளிக்கும் தர்மமே நிரந்தர தர்மம் ஆகும். அல்லாஹுவின் பொருத்தத்தை நாடி, தன் பெயரை விளம்பரப் படுத்துவது குறிக்கோளில்லாமல் பள்ளிவாசல் அமைத்தல், கல்விக்கூடம் அமைத்தல், தெரு விளக்கிடுதல், தண்ணீர் வசதி செய்தல் போன்ற பல நிரந்தரமான பயனை பொது மக்களுக்கு செய்வதாகும். இப்படிப்பட்ட காரியங்களுக்கு தனது சொத்திலிருந்து மூன்றில் ஒரு பங்கிற்கு மிகாமல் பொருளாதாரம் ஒதுக்கும்படி நபி(ஸல்) வரைமுறை செய்துள்ளார்கள்.
தர்மங்களின் விளக்கப்படி பொருளாதாரத்தில் வசதி படைத்தோர் பொருள் இல்லாதவர்களுக்கு வழங்குவது மட்டுமே தர்மமாகும். இதையே பொருளாதாரத்தில் வசதி படைத்தோரிடமிருந்து தர்ம நிதியை வசூலித்து அதை இல்லாதவர்களுக்கு வழங்கவும் செய்வதும் தர்மமாக ஆகும்.
மாறாக, ஒருவர் தனது பொருளாதாரத்தின் பகுதியை இன்னொருவருக்கு வழங்கினால் அது அன்பளிப்பாக கருதப்படும். தர்மத்தின் அமல்களின்படி, அன்பளிப்பின் அளவின் படி அல்லாஹ் அதனதன் கூலியை வழங்குவான்.
மில்லத் அறக்கட்டளை பிரமுகர்கள் மக்களிடமிருந்து சேகரம் செய்வது தர்மமான ஜகாத், .ஸதக்கா, ஸதகாத்துல் பித்ரு, ஸதகாத்துல் ஜாரியா, போன்ற நிதிகளை வசூலிப்பதல், வழங்கியோரின் கடமையை பூர்த்தி செய்கிற போது, முறையான இடத்தில் நிதியை சேர்க்க கடமை பட்டுள்ளார்கள். அப்படி சேர்காத பட்சத்தில், அமானிதம் பேனாதவர் ஆகிவிடுவார்கள். அல்லாஹ்விடத்தில் பதில் கூறக்கடமைப் பட்டுள்ளார்கள்.
நமதூர் குடும்ப நிகழ்ச்சியில், மில்லத் அறக்கட்டளை ஊக்கப் பரிசு வழங்கியதாக இருப்பின், அவைகள் யாவும் அன்பளிப்பு, ஆனதால், அவர்களது தர்ம வசூலிலிருந்து அன்பளிப்புக்காக செலவிட அனுமதியில்லை. ஏனெனில், நிதி சேருமிடம் அந்த எட்டு சாரர்களிடமல்ல. மாறாக, தவறி தர்மத்தை செலவு செய்திருப்பார்களேயாயின், அன்பளிப்பு நிதி என்று தனியாக இனி வசூல் செய்து தவற்றை சரிசெய்து தர்மநிதியை சரியாக கணக்கிட்டுக் கொள்ளவேண்டும். அல்லாஹ் யாவற்றையும் மன்னிப்பவனாக இருக்கின்றான்.
மின்னஞ்சல் மூலமாக
AGM BASHA.
kadaisile kuttuna oosi nallailla
பதிலளிநீக்குmr agm avarkale
ungalal solla mudiuma
inda site nadaturatu muslim than yendru
illa neenga nadathuratha nanga ninaikkalama
yen yendral kulappam irunthal ungal pangu irukkum illaya.
(telivana badil please
only details not islam)
wassalam
lbk kulumam Sharjah
hadeesla badil kidakalaya
பதிலளிநீக்குippadi mottai site nadattha islatthil anumathi unda mr agm basha avarkale
nerana badil
tala sutthura badil vendam
lbk kulumam sharjah
அஸ்ஸலாமு அலைக்கும்
பதிலளிநீக்குஅன்புள்ள சைட் நடத்துனருக்கு லப்பைகுடிகா ட்டின் மக்களின் நலன் கருதி அன்பான வேண்டுகோள் என்ன என்றால்
1 நீங்கள் உண்மையில் லப்பைகுடிகாடுதானா ?
2 நீங்கள் உண்மையில் முஸ்லிம் தானா ?
3 உங்கள் வீட்டின் பெயரை தகப்பனார் பெயரை தெளிவாக போடவும் ,
தயவு செய்து தெளிவான பதில்
இப்படிக்கு
பொது நலன் வேண்டி
அக்பர் பாஷா
துபாய்