Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 ஏப்ரல், 2013

காவல்துறையில் இளநிலை அறிக்கையாளர் பணி பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு 8ம்தேதி கடைசி நாள்

பெரம்பலூர்,: காவல்துறையில் காலியாக உள்ள இளநிலை அறிக்கையாளர் பணியிடத்திற்கு பரிந்துரையை சரிபார்க்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடைசி நாள் வரும் 8ம்தேதியாகும்.
தமிழ்நாடு அரசு காவல்துறை துணைத்தலைவர் சி.ஐ.டி சிறப்பு பிரிவு துறையில் இளநிலை அறிக்கையாளர் (ஜீனியர் ரிப்போட்டர்) காலிப்பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன. இதற்கு கல்வித்தகுதி பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சியுடன் ஸ்டெனோ கிராபர் ஆங்கிலம் சுருக்கெழுத்து
முதுநிலை கிரேடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் 01.07.2012ம் தேதியன்று குறைந்த பட்ச வயதுவரம்பு 18 வயதுக்குள்ளும் (அனைத்து பிரிவினருக்கும்) அதிகபட்ச வயது வரம்பு எஸ்சி, எஸ்சிஏ, எஸ்சிஓ வகுப்பினர் 35 வயதும், எம்பிசி, பிசிஎம், பிசி வகுப்பினர்32 வயதும், ஜிடி 30க்குள்ளும் இருக்க வேண்டும்.
தகுதியுடைய ஆண் பதிவுதாரர்கள் மட்டும் வரும் 8ம்தேதிக்குள் வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் அசல் கல்விச்சான்றிதழ்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று பதிவினை சரிபார்த்துக் கொள்ளலாம்.
இத்தகவலை கலெக்டர் தரேஸ் அகமது தெரிவித்துள்ளார்.


Thanks:Dinakaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக