Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 21 ஜூலை, 2013

வெளிநாட்டில் சாதா(ரண) வாழ்க்கை

வெளிநாட்டில் சாதா(ரண) வாழ்க்கை
தேநீருப் பின் வழமையான அரட்டைகள் துவங்கியபோது உடனிருந்த ஒரு நண்பர் அரட்டையைத் தவிர்த்தார். வளைகுடா வாழ்வில் இப்படியான மனப்போக்கு மாற்றங்கள் புதிது கிடையாது. ஒரு தொலைபேசி அழைப்பு தாயகத்திலிருந்து ஏதாவது விரும்பத்தகாத செய்தியைத் தாங்கி வந்தால் போதும், அன்றைய பொழுதின் பெரும்பங்கை மன உளைச்சலில் கழிக்கலாம். விரும்பத்தகாத செய்திகள் என்றால் ஏதோ பங்குச் சந்தையும், நிலச் சொத்து மதிப்பீடும் பாதாளத்தில் வீழ்ந்து நட்டத்தை உண்டாக்கியதாகத்தான் இருக்கவேண்டுமென்பது இல்லை, பரீட்சையில் மகனோ மகளோ சரியான மதிப்பெண் பெறவில்லை என்பது முதல், அம்மாவுக்கும் மனைவிக்கும் நடக்கும் பனிப்போர்கள் வரையில் ஏதாவது சின்னச்சின்ன செய்திகள்கூட மனஉளைச்சலைத் தரலாம். நண்பருக்கும் தொலைபேசிச் செய்தி ஏதாவது வந்திருக்கும் என்ற அனுமானத்தில் நண்பரின் உற்சாகக்குறைவின் காரணத்தை தோண்டித் துருவிக் கேட்காமல் நானும் அரட்டைகளைத் தவிர்க்க முற்பட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குப் அவராகவே உற்சாகக் குறைவின் காரணத்தைச் சொன்னார்.

பெரிதாக ஒன்றுமில்லை, நான்கு பேர்கள் தங்கும் அறையில் இவரது கட்டிலுக்கும் இன்னொருவர் கட்டிலுக்கும் இடையில் இருந்த இடத்தில் இவர் வண்ணான் மடிப்புடன் துணிகளை அடுக்கிவைப்பதை வழமையாக்கியிருக்கிறார். அடுத்த படுக்கைக்காரர் ஊருக்குப் போவதற்காக வாங்கி வந்த பெரிய பெட்டியை வைக்க இடமின்றி அந்த இடைப்பட்ட இடத்தில் வைத்துவிட்டு இவரது துணிகளை இவருடைய கட்டிலின் மேல் வைத்திருக்கிறார். நான்கு நபர்கள் பங்குபோட்டுக்கொள்ளும் அறையில் இது எனது இடம் என்ற உரிமை கொண்டாட முடியாத நிலையில் நண்பர் இருந்தபோதும், தன்னிடம் ஒரு வார்த்தை அனுமதி கேட்காமல் தான் புழங்கிய இடத்தைப் பெட்டியால் மற்றவர் நிறைத்ததை இவரால் அப்போதைக்கு தாங்கிக்கொள்ள இயலவில்லை. வேறு வழியில்லாமல் அமைதியாக தனது பெட்டியில் கிடைத்த இடத்தில் துணிகளை அடைத்துவிட்டு வந்திருக்கிறார்.

அறைப்பங்கீடு தொடர்பான இப்படி ஏதாவது நிகழ்வை வாரத்தில் இரண்டு மூன்று முறைகள் கேட்கவேண்டியதாகி இந்த உரையாடல்களும் துபாயின் வாழ்க்கை முறைகளுள் ஒன்றாகிப்போனது. இப்படிப்பட்ட சகிப்புத் தன்மையை மனதில் ஏற்கச் செய்யும் அற்புதமான அந்த அறை வாழ்க்கையை துபாயில் 'பெட் ஸ்பேஸ்' என்பார்கள்.

எழுபதுகளின் இறுதியிலிருந்தே இந்த 'பெட் ஸ்பேஸ்' என்னும் படுக்குமிடவாழ்க்கை முறை துபாயில் இருந்தது, ஆனால், அது நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் தங்குமிடங்களிலும், தொழிலாளர் முகாம்களில் மட்டும் இருந்தது. வெளியிலென்றால் நான்கைந்து நண்பர்கள் சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுப்பார்கள், அதற்கான கால அவகாசம் கிடைத்தது. இப்பொழுது அப்படியல்ல; அறிந்தோர், தெரிந்தோர், நண்பர்கள், ஒரே நிறுவனத்தில் பணிபுரிவோர் இவர்களிடையே மட்டும் புழங்கியிருந்த வழமை கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அறிமுகமில்லாத புதிய மனிதர்களுடனும் அறையைப் பங்குபோட்டுக்கொள்ளும் அளவிற்கு மக்களை கட்டாயப்படுத்துகிறது.

போதிய வருமானம் இருந்தும் தனது வசதிகளைக் கொஞ்சம் குறைத்துக்கொண்டு வாழ்ந்து அதிகமான பணத்தைச் சேமிக்கலாம் என்னும் எண்ணத்தில் இப்படி படுக்குமிடங்களைத் தேடுபவர்களின் சதவீதம் குறைவானது. வேறு வழியில்லாமல் இந்த கட்டாய வாழ்க்கைமுறையை ஏற்றிருப்போரே அதிகமான சதவீதம் உள்ளனர்.

பிரம்மச்சாரியாக துபாய்க்கு வருகின்ற நடுத்தர வர்க்கத்தினர் முதலில் தேடுவது அறைப்பங்கீட்டைத்தான். செய்தித்தாள் விளம்பரங்களில் படுக்குமிடத்திற்கான விளம்பரம் வந்திருந்தால் அது உயர்நடுத்தரவர்க்கத்திபரிடம் இருந்துதான் வந்திருக்கிறது என திட்டவட்டமாகச் சொல்லலாம். செய்தித்தாள் விளம்பரங்களில் பெரும்பாலும் ஒரு அறையை இருவர் அல்லது அதிகபட்சமாக மூவர் பங்குபோட்டுக்கொள்வதான விளம்பரங்கள் வெளிவரும். இது ஒருவகையான படுக்குமிடம். இந்த வகையில் சிரமங்கள் அத்தனை இருக்காது. ஒரு அறையை இரண்டு பேர் பங்கிட்டுக்கொள்வதென்பது துபாய் பிரம்மச்சாரிய வாழ்க்கையில் ஆடம்பரமென்றால் அது பொய் கிடையாது. இருவரே அறையில் இருப்பதால் வாடகைக்கான தொகையும் அதிகமாகவே இருக்கும். அத்தனை தொகையைக் கொடுத்து வாடகைக்கு எடுக்கும் அளவிற்கு வசதியிருக்கும் உயர்நடுத்தரவர்க்கத்திடம் வாகன வசதி இருக்கும், கணினி, அகலப்பாட்டை, அறைத்திரையரங்கம் (ஹோம் தியேட்டர்), ஒலிஒளி அமைப்பு, தொலைக்காட்சி என சகல வசதிகளுடன் எந்தப் பிரச்சனையும் இல்லாத வாழ்க்கைமுறை உயர்நடுத்தரவர்க்கத்து அறைப்பங்கீடு.

இதற்கு சற்றே மாறுபட்டது நடுத்தரவர்க்கத்தினரின் அறைப்பங்கீடு. மேற்சொன்ன பங்கீடுகள் புதிய அடுக்குமாடிக்குடியிருப்புகளில் இருக்குமென்றால், நடுத்தரவர்க்கத்தினரின் வாழ்க்கை பழைய கட்டடங்களில் ஒருபடுக்கையறைக் குடியிருப்பின் கூடத்தை இன்னொரு அறையாகப் பாவித்து அதை இரண்டுபேருக்கு வாடகைக்குவிட்டு, முறையான அறையில் இரண்டு பேர் தங்கிக்கொள்ள நான்கு பேராக மொத்தக் குடியிருப்பையும் பகிர்ந்துகொள்ளும் வழமை. இந்த வகையில் இருக்கும் ஒரே சிக்கல் குளியலறைப் பிரச்சனைதான். தங்கியிருக்கும் நால்வருக்கும் அலுவலக நேரம் ஒரே சமயத்தில் இருக்குமானால், அவர்களுக்குள்ளாகவே குளியலறை நேரத்தைப் பங்குபோட்டுக்கொண்டு அவரவர் நேரத்தில் அவரவர் சென்று காலைக்கடன்களை முடிக்கவேண்டியிருக்கும். இந்த வகைப் பங்கீட்டிற்கு புதியவரை அனுமதிக்கும் முன் கேட்கப்படும் கேள்விகளுள் முதல் கேள்வி, 'வேலை நேரம் எப்போது துவங்குகிறது?' என்பதுதான். அதன் பிறகே புதியவருடன் அரையைப் பங்கிட்டுக்கொள்வதா வேண்டாமா என்பதை மற்றவர் முடிவு செய்வர் .


உங்கள் மகன் , சகோதரன் , கணவர் அனுப்பும் பணத்தை செலவு செய்யும் முன்  .............................
அன்பு தாய்மார்களே  , சகோதரிகளே , சிந்திப்பீர் .
உண்ணுங்கள் , பருகுங்கள் , வீண்வெரயம் செய்யாதீர்கள் . --- AL-QURAN 


மின்னஞ்சல் மூலமாக
பாஷா ஹாஜா மொய்தீன்

1 கருத்து: