கின்னஸ் சாதனைக்காக காத்திருக்கும்
நினைவுச் சின்னம் ?
கிராமங்களிலும்
நகரங்களிலும் ஏற்படும் அடிப்படை பிரச்சனைகளுக்கு MLA – வோ , MP – யோ நேரடியாக வந்து
அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுக்க இயலாது என்பதற்காக உள்ளாட்சி அமைப்பு
ஏற்படுத்தப்பட்டது. குடிநீர் , சாக்கடை மற்றும் சுகாதாரமான சூழ்நிலையை நிறைவேற்றிட
உள்ளுர் பிரதிநிதிகளை தேர்ந்த்தெடுக்கின்ற பொன்னான
வாய்ப்பு உள்ளுர் மக்களுக்கு கிடைத்தது.
அது எந்தளவிற்கு சாத்தியமானது என்றால், கின்னஸில் இடம் பிடிக்கின்ற வகையில், செயல்படுத்தப்படும்
திட்டங்கள் நினைவுச் சின்னங்களாகவே இருப்பது கத்தியமானது. மக்களின் வரிப்பணத்தில் நலத்திட்டங்கள்
செயல்படுத்த இடமே கொடுப்பது இல்லை என்று கூறுவது உண்மை என்றாலும், தொடங்கி முடிக்கப்பட்ட
திட்டங்களை யாருக்காக? எதற்காக? முடக்கப்பட்டுள்ளது என்பது மட்டும் விடைதெரியாமல் இருக்கிறது.
லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு 15 வார்டு உறுப்பினர்களும், ஒரு தலைவர் ஆக மொத்தம்
16 உள்ளாட்சி பொருப்பாளர்கள் இருக்கும் போது தயாராய் இருக்கும் திட்டத்தை ( கழிவறை
) மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்காமல் பாழடைய வைக்கிறார்கள் ஏன்? கடந்தகால ஆட்சியில்
செயல்படுத்தப்பட்டதாலா? (அ) இந்த ஆட்சியில் தற்போது இருப்பவர்களுக்கு ??? கிடைக்கவில்லை என்பதாலா ?
பெரம்பலூர்
மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியில் லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு வரிவசூலில் முக்கியமான
இடம் பிடிக்கிறது. சுற்றுவட்டார கிராம மக்கள் தினந்தோறும் லெப்பைக்குடிக்காட்டிற்க்கு
ஆயிரக்கணக்கில் வந்து போகிறார்கள். அவர்களின் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்ய ( சிறுநீர்,
மலம் கழிக்க ) இடம் என்று தேடினால் தற்போது ( எப்போதும் ) திறந்த வெளியாகவே உள்ளது.
ஆண்களுக்கு ஒரு வகையில் சாத்தியப்பட்டாலும் பெண்களின் நிலை நினைத்துப் பாருங்கள். அடிப்படை
வசதிகள் கூட இல்லாத பேரூராட்சி அந்தஸ்தை ரத்து செய்துவிட்டு கிராம பஞ்சாயத்தாகவே ஆக்கி
விடலாம்.
உள்ளாட்சி
பிரதிநிதிகள் தங்களால் செயல்பட முடியவில்லை என்றால் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டியதுதானே.
எதையும் செய்ய மாட்டார்கள் இவர்கள் சுயலத்தின் சூத்திரதாரா்கள் அல்லவா. அடக்குமுறையாலும்,
அதிகார பலத்தாலும் நடந்த ( லெப்பைக்குடிக்காடு )உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்
இருக்கும் வரை இன்னும் என்னென்ன கொடுமை நடக்கப்போகிறதோ? இறைவன் போதுமானவன்.
நன்றி குளோபல் செய்திகள் 1 JULY 2013
புகைப்படம் உதவி நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக