Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 3 ஜூலை, 2013

ETA சமுதாய நல அறக்கட்டளை – பெரம்பலூர் கிளை -லெப்பைக்குடிக்காட்டில் தொடக்கவிழா! -

பேரன்புடையீர்,
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்.வப.)
இ.டி.ஏ. குழும நிறுவனங்களின் மேலாண்மை இயக்குநர் மதிப்புமிகு அல்ஹாஜ் செய்யிது எம்.ஸலாஹுத்தீன் அவர்களது நெறிகாட்டலில் இ.டி.ஏ.குழும நிறுவனங்களின் மேலதிகாரிகளால் அல்ஹாஜ் எம்.அக்பர்கான் அவர்களை நிர்வாக அறங்காவலராகக் கொண்டு உருவாக்கப்பெற்ற சமுதாய நல அறக்கட்டளை (Community Welfare Trust) மருத்துவச் சேவையை மிகவும் சிறப்பாகச் செய்து வருகிறது.
ஒரு மருத்துவர், ஒரு செவிலி, ஒரு மருந்தாளுநர், ஓர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோரைக் கொண்ட குழு தினமும் இலவச நடமாடும் மருத்துவமனை (Mobile Medical Care Unit) மூலம் ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லாத குக்கிராமங்களுக்குச் சென்று சாதி, சமய, இனப் பேதமற்று மக்களுக்கு இலவசமாக மருத்துவப் பரிசோதனை செய்து இலவசமாகவே மருந்துகளும் அளித்துவருகின்றது.

இதுவரை நெல்லை மாவட்டத்தில் 30 குக்கிராமங்களில் 25000 பேர், இராமநாதபுரம் மாவட்டத்தில் 27 குக்கிராமங்களில் 6000 பேர்,
பெங்களூரு இராமநகரத்தில் 7000 பேர் பயன் பெற்றுள்ளனர்.

இன்ஷா அல்லாஹ் 4ஆம் கிளையாக வரும் 04-07-2013 வியாழக்கிழமை முதல் பெரம்பலூர் மாவட்டத்தில் லெப்பைக்குடிகாட்டை மையமாகக் கொண்டு சமுதாய நல அறக் கட்டளையின் மருத்துவத் தொண்டு தொடங்கவுள்ளது.
விழாவில் கலந்துகொண்டும் துஆ செய்தும் வாழ்த்தியருள விழைகிறோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக