பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சி துணைத்தலைவரும் லப்பைக்குடிக்காடு பேரூர் அ.தி.மு.க நகர செயலாருமான முகமது பாரூக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் கூறி இருப்பதாவது....
குன்னம் வட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியின் மேற்குப் பகுதி வெள்ளாற்றின் கரையின் ஓரம் கட்டப்பட்டு உள்ள 89 மாடி வீடுகளை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுப்பணித்துறையின் மூலமாக 89 வீடுகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
லப்பைக்குடிக்காடு பேரூராட்சி பொது மக்கள் பாதிப்பு அடையா வண்ணம் தமிழக அரசிடமும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடமும், அதிகாரிகளிடமும், மேற்படி வீடுகளை இடிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
நன்றி தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக