Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 30 ஜூலை, 2013

தந்தையே! நீங்கள் தான் எகிப்து தேசத்தின் சிறந்த தலைவர் - முஹம்மத் மூர்சியின் மகன் உமர் மூர்சி பெருமிதம்!

இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்ட முஹம்மத் மூர்சியின் மகன் உமர் மூர்சி அவர்கள்    http://edition.cnn.com என்ற இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, சட்டத்திற்குப் புறம்பாக அதிபர் பதவியில் இருந்து வெளியற்றப்பட்ட என் தந்தை, மீண்டும் மக்களால் திரும்பவும் பதவியில் கொண்டு வரப்படுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது என்றார்.

எகிப்தில் தொடங்கி இருக்கும் புரட்சி தன்னம்பிக்கை மற்றும் உறுதியுடன் சென்று கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமின்றி, எகிப்திய மக்களை இராணுவத்தின் பீரங்கியை கொண்டோ அல்லது காவல்துறையின் தடுப்புகளை கொண்டோ அவர்களை பயமுறுத்தி, போராட்டத்தில் இருந்து விளக்கிவிட முடியாது. ஏனென்றால், எகிப்திய மக்கள் ஜனநாயகத்தை விரும்ப தொடங்கி விட்டார்கள். அதேநேரத்தில், சர்வாதிகாரத்தை வெறுக்க தொடங்கி விட்டார்கள்.

இந்த, இராணுவத்தின் ஆட்சி கவிழ்ப்பு புரட்சிக்கு எதிரானது, ஜனநாயகத்திற்கு எதிரானது. அரசியல் மற்றும் மக்கள் விருப்பத்திற்கு எதிரானது. மில்லியன் கணக்கான மக்கள் அதிபர் தேர்தலில் வாக்களித்து இவர் தான் எகிப்தின் சிறந்த தலைவர் என்று தேர்ந்தெடுத்தனர். ஆனால், ராணுவம் தன்னுடைய அதிகார பலத்தால் ஜனநாயகத்தை கைப்பற்றிவிட்டது.

மேலும், உமர் மூர்சி கோபத்துடன் கூறுகையில், என்னுடைய தந்தையை பதவியில் இருந்து இறக்கிவிட்டு, அனைத்து பதவிகளிலும் ஆட்களை நியமிக்க தயாராகி கொண்டிருக்கிறது. இடைக்கால பிரதமர் ஹசம் எல் - பெப்லவி கூறுகையில், 70% அமைச்சர்கள் மற்றும் அமைச்சர் பதவிகள் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன என்று கூறினார். இதை, அரசு நடத்தும் பத்திரிகை நிறுவனம் அல் - அஹ்ராம் செய்தி வெளியிட்டது.

மேலும், ஜூன் 30ம் தேதி மக்கள் மூர்சிக்கெதிராக புரட்சியில் ஈடுபட்டு, பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கோரினார்களே என்றதற்கு, நிச்சயமாக அதை புரட்சி என்று சொல்ல மாட்டேன். வரலாறும் அதை புரட்சி என்று பதிவு செய்யாது. அது, ஜனநாயகத்திற்கு எதிராக திட்டமிடப்பட்ட சதி என்று தான் கூற வேண்டும் என்றார்.

நான் ஒன்றை நினைவுபடுத்தி கொள்கிறேன், துருக்கி பிரதமர் ரசீப் தயீப் எர்டோகன் அவர்கள் கூறுகையில், எகிப்தில் ராணுவம் மக்கள் புரட்சி என்ற பெயரில் ஜனநாயகத்தையும், , நாட்டில் உள்ள மக்களையும், எதிர்கால சந்ததியையும் கொலை செய்துள்ளது என்றார்.

மேலும், உமர் மூர்சி கூறுகையில் ஜனவரி 25, 2011இல் நடைபெற்ற மக்கள் புரட்சி, எகிப்தில் நீண்டகாலமாக சர்வாதிகார ஆட்சி செய்து வந்த ஹோஸ்னி முபாரக்கை ஆட்சியில் இருந்து அகற்றியது. உண்மையில், அந்த நாள் எகிப்திற்கு ஜனநாயகத்தின் பாதையில் ஒரு புதிய அலையை ஏற்படுத்தியது.

ஆனால், ஆட்சியில் தான் முபாரக் இல்லை, மற்ற அனைத்து துறைகளிலும் முபாரக்கின் கருவிகள் தான் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன என்பதை இந்த ஆட்சி கவிழ்ப்பு நிரூபித்துவிட்டது. இதையும், எகிப்திய மக்களாகிய நமக்கு அகற்ற வேண்டிய கடமை உள்ளது. ஏனென்றால், நாம் அமைதியாகத்தான் போராடி கொண்டு இருக்கின்றோம். ஆனால், நம் மீது வன்முறையை ஏவி விடுகிறார்கள். இந்த நேரத்தில் புரட்சியின் மூலம் தான் முபாரக்கின் கைப்பாக்களை எதிர் கொள்ள முடியும் என்றார்.

அதுமட்டுமின்றி, ஆயிரக்கணக்கான முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பை சார்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் முக்கிய தலைவர்களும் அடங்குவர். இவர்களை, எங்கு வைத்து இருக்கின்றோம் என்று கூட ராணுவம் அறிவிக்கவில்லை. ஆனாலும், மக்கள் ராபா அல் - அதவியாவில் மட்டுமின்றி, எகிப்தின் அனைத்து இடங்களிலும் இந்த ரமலான் மாதத்தில் போராடி கொண்டிருக்கின்றனர்

இறுதியாக அவர் கூறுகையில், தந்தையே! நீங்கள் தான் எகிப்து தேசத்தின் சிறந்த தலைவர். நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர். நீங்கள், எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம். உங்கள் குடும்பம், இந்த மக்கள் அனைவரும் பெருமை அடைகிறோம். இறைவன் உங்களுக்கு உதவி செய்வான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக