Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 14 ஜூலை, 2013

முஸ்லிம் இனப்படுகொலை மோடிக்கு நாய்க்குட்டி காரில் சிக்கிய கவலை போன்றதாம்!-மோடியின் திமிருக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம்!

2002-ஆம் ஆண்டு இந்திய வரலாறு காணாத வகையில் நிகழ்ந்த முஸ்லிம் இனப்படுகொலையை நாய்க்குட்டிக்கு ஒப்பிட்ட இனப்படுகொலைகளை தலைமை தாங்கிய நடத்திய மோடிக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு, மோடி அளித்த நேர்முகம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மோடியின் கீழ்த்தரமான, கொடூரமான உவமைக்கு எதிராக காங்கிரஸ், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், சி.பி.எம், சி.பி.ஐ உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவுச் செய்துள்ளன.

காந்திநகரில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியின் விபரம்:குஜராத் கலவரம் தொடர்பாக பலரும் தங்கள் மீது குற்றம் சாட்டியபோது விரக்தியடைந்தீர்களா? என்று செய்தியாளர் கேட்டதற்கு மோடி அளித்த பதில் வருமாறு:நான் ஏதாவது தவறு செய்திருந்தால்தான், நான் குற்றம் செய்ததாக நினைத்திருப்பேன். “நாம் பிடிபட்டு விட்டோம். நாம் திருடிவிட்டதால் சிக்கிக்கொண்டு விட்டோம்’ என்பது போல் நினைக்கும்போதுதான் எரிச்சலும், விரக்தியும் ஏற்படும். ஆனால், எனது விஷயம் அப்படிப்பட்டது அல்ல. நடந்த சம்பவங்களுக்காக (குஜராத் கலவரம்) வருத்தப்படுகிறீர்களா? என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு எனக்கு விரிவான நற்சான்றிதழை அளித்துள்ளது.
எனினும், ஒரு காரை நாமே ஓட்டிச் சென்றாலும் சரி, மற்றொருவர் ஓட்டும்போது பின் இருக்கையில் நாம் அமர்ந்திருந்தாலும் சரி, ஒரு நாய்க்குட்டி கார் சக்கரத்தில் சிக்கிக் கொண்டால் நமக்கு மனவேதனை ஏற்படுமா? ஏற்படாதா? என் நிலையும் அதுபோன்றதுதான். நான் முதல்வராக இருக்கிறேனோ, இல்லையோ, அடிப்படையில் நான் ஒரு மனிதன். எங்காவது கெட்டது நடந்தால், அது வருத்தம் தருவது இயற்கைதான். கலவரம் நடந்தபோது, அதை ஒடுக்குவதற்காக நான் எடுத்த நடவடிக்கைகள் சரியானவைதான். ஆண்டவன் நமக்கு அளித்துள்ள சிந்திக்கும் ஆற்றல், நான் பெற்றுள்ள அதிக அளவிலான அனுபவம், அந்தச் சூழ்நிலையில் எனக்குக் கிடைத்த வசதிகள் ஆகியவற்றைச் சிறப்பான அளவுக்குப் பயன்படுத்தினேன். அதையே சிறப்புப் புலனாய்வுக் குழுவும் ஆராய்ந்தது. நான் அப்போது எந்தத் தவறும் செய்யவில்லை.
நாட்டு அரசியலை இரு துருவங்களாக்கும் நபர் என்று என் மீது வைக்கப்படும் விமர்சனத்தைப் பொறுத்தவரை, அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் இரு துருவங்களாக உள்ளன. இத்தகைய தன்மை ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பாகும். நான் ஒரு தேசியவாதி, தேசபக்தன். நீங்கள் என்னை ஹிந்து தேசியவாதி என்று அழைத்தால் அதில் எந்த தவறும் இல்லை. அதே நேரத்தில் நான், வளர்ச்சிக்காகப் பாடுபடும் நபராகவும் பார்க்கப்படுகிறேன். இந்த இரண்டு பிம்பங்களிலும் எந்த முரண்பாடும் இல்லை. இரண்டுமே ஒன்றுதான் என்றார் மோடி.
மோடியின் கீழ்த்தரமான, கொடூரமான பேட்டிக்குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜய் மக்கான் கூறுகையில்,’மோடியின் ஒப்பீடு இந்திய நாகரீகத்திற்கு உகந்தது அல்ல’ என்றார். சமாஜ்வாதிக் கட்சியின் செய்தி தொடர்பாளர் கமால் ஃபாரூக்கி கூறுகையில்,’நாய்களை விட கேவலமாக முஸ்லிம்களை விமர்சித்த மோடி மன்னிப்புக்கோரவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். சி.பி.ஐ தலைவர் டி.ராஜா கூறுகையில்,’இந்திய குடிமக்களை ஏமாற்றிவிடலாம் என்ற மோடியின் தந்திரமே இந்த சர்ச்சைக்குரிய பேட்டி’ என்று கூறியுள்ளார். ஐக்கிய ஜனதா தளம் செய்தி தலைவர் சிவானந்த திவாரி கூறுகையில்,’மோடிக்கு சைக்கோ அனாலிஸிஸ் நடத்தவேண்டும். இத்தகையதொரு நபர் பிரதமராவது கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும்.’ என்றார்.

நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து:

  1. நாய் என்று விமர்சித்த பேயே!
    இவனுடைய அழிவு ரொம்ப தூரம் இல்லை.
    அல்லாஹ் இவனுக்கு தக்க பாடத்தை புகட்டுவானாக! ஆமீன்!!!

    பதிலளிநீக்கு