"பிரிவு என்பது எவ்ளோ பெரிய வலி என்பது வெளிநாட்டில் வேலை பார்க்கும் ஒவ்வொருக்கும் தெரியும்.
தன் தாயை பிரிந்து, தன் தகப்பனை பிரிந்து, மனைவியை பிரிந்து, பெற்ற புள்ளையை பிரிந்து, குடும்பத்துக்காக நாம் படும் கஷ்டம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் தெரியும்.
சகோதரர்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் நாமெல்லாம் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ கழித்து நமது தாய்யயும், தகப்பனையும், மனைவியையும், புள்ளையையும், பார்ப்போம் என்ற நம்பிக்கையில் தான் நாம் இங்கு வேலை பார்க்கின்றோம். ஆனால் நமது சகோதரர்கள் சிறையில் ஒரு வருடம் அல்ல இரண்டு வருடம் அல்ல 10 வருடம் சிறையில் தன் தாய்யயும், தகப்பனையும், மனைவியையும், பெற்ற புள்ளையையும் பிரிந்து அவர்கள் படும் கஷ்டத்தை சொல்லி மாளாது. அவர்களை பற்றி நினைக்கும் போதெல்லாம் என் கண்களில் கண்ணீர் வந்து கொண்டே இருக்கும்.
சகோதரர்களே! தயவு செய்து இயக்கங்கள் பாராமல் நமது சகோதரர்களை விடுதலை செய்ய ஒன்று சேருங்கள். இன்ஷா அல்லாஹ் அவர்கள் விடுதலைக்காக துஆ செய்து கொண்ட இருங்கள்.
"இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரின் அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபட்டிருக்கிறரின் தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கிறான். ஒரு முஸ்லிமின் ஒரு துன்பத்தை நீக்குகிறவரைவிட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான். ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறவரின் குறைகளை மறுமை நாளில் அல்லாஹ்வும் மறைக்கிறான். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி 2442
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக