நமது ஊர் ஜமாலி நகர் பகுதியில் இருக்கும் மேல்நிலை குடிநீர்த் தொட்டியின்
புகைப்படம்தான் இது! ஆறு மாதங்களுக்கு முன் ஜனவரி 7 ஆம் தேதி இந்த
புகைப்படத்தோடு ஒரு பதிவை செய்தியாக கொடுத்திருந்தேன் இதோ அந்தப் பதிவு
“லெப்பைக்குடிக்காடு பேரூராட்சிக்கு உட்பட்ட
தண்ணீர்தொட்டியின் தற்போதய புகைப்படம்தான்
இது. இதை கூர்ந்து கவனித்தால் மேலே
ஏறப்பயன்படும் படிக்கட்டிலே கைப்பிடிகள் உடைந்து
மேலே செல்லமுடியாத வகையில் இருப்பதை காண
முடியும். நமது ஊரின் கிழக்கு பகுதி முழுவதும்
பெரும்பான்மையான பகுதிக்கு இன்று வரையில்
இந்த நீர்தேக்கத்தொட்டியில் இருந்துதான் தண்ணீர்
விநியோகிக்கப்படுகிறது. இந்த தண்ணீர்தொட்டியை
சுத்தம் செய்ய பணியாளர்கள் அனுப்பப்டுகிறார்களா?
அல்லது தண்ணீர்தொட்டி சுத்தம்
செய்யாமலேயே தான் விநியோகித்துக்கொண்டு
உள்ளனரா? பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என்ன
செய்துக்கொண்டு உள்ளனர். பேரூராட்சி மன்ற
கூட்டம் நடைபெருகிறதா? பேரூராட்சி
செயல்படுகிறதா? நமதூரில் நிறைய இணைய
செய்திகள் நடத்தும் தோழர்கள் இதுபோன்ற
அத்தியாவசிய தேவைகளை பொதுமக்களின்
பார்வைக்கும், பேரூராட்சியின் பார்வைக்கும்
கொண்டுச்சென்று ஆக்கப்பணிகளை மேற்கொண்டால்
உபயோகமாக இருக்கும்”.
இதுதான் அன்று நான் பதிவிட்டது ஆறு மாத காலத்திற்க்கு மேலாகியும் இன்னும் இது சரிசெய்யப்படவில்லை! இதற்க்குப் பிறகு பேரூராட்சிக்கு வந்த நிதி அனைத்தும் தலைவர்,துணைத் தலைவர் கவுன்சிலர்கள், நிர்வாக அதிகாரி மத்தியில் கருத்து ஒற்றுமை இன்றி திரும்ப அனுப்பப்பட்டுள்ளது! கடைசியாக 15,00000/- பதினைந்து லட்சம் நிதி வந்ததும்! அதில் 3,00000/- மூன்று லட்சம் இந்தக் கைப்பிடி சுவருக்காக ஒதுக்கப்பட்டும் போர்டு மீட்டிங் போடப்படாததால் அதுவும் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதோ என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது! இத்தனை மாதங்களாக இந்த குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படாமல் தண்ணீர் வினியோகிக்கும் பட்சத்தில் மக்கள் கண்டிப்பாக சுகாதாரக்கேடால் பாதிக்கப்படுவது உறுதி! இதற்கு முடிவுக் கேள்விக்குறியாக உள்ளது?
குறிப்பு : இது சம்மந்தமாக நமது இணையத்தளத்தில் நாம் அன்றே மே 20 2012 அன்று இதை சுட்டிக்காட்டி உள்ளோம் . அதனுடன் லிங்கை கீழே செடுக்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக