Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 ஜூலை, 2013

த.மு.மு.க போராட்டம் : தடை செய்து மூக்குடைபட்ட தமிழக அரசு..... (ஒரு நேரடி ரிப்போர்ட்)


பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் {அண்ணா பிறந்த நாளில் இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட போதெல்லாம் முஸ்லிம் கைதிகள் மட்டும் விடுதலை செய்யப்படவில்லை}, முஸ்லிம்களுக்குத் தமிழக அரசு வழங்கியுள்ள இட ஒதுக்கீட்டு அளவை அதிகரித்தல், தமிழக அரசின் திருமணப்பதிவுச் சட்டத்தில் திருத்தங்கள் செய்தல் என்கிற 3 கோரிக்கைகளை வைத்து (ஜூலை 6, 2013) பேரணி நடத்தக் கோரிய அனுமதியை ரத்து செய்தது தமிழக அரசு.

த.மு.மு.க நீதிமன்றத்திற்குச் சென்ற போது அங்கும் நீதி கிடைக்கவில்லை.

தடையை மீறிப் பேரணி செல்வதென அவர்கள் முடிவு செய்தனர். காவல்துறை கெடுபிடி தொடங்கியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிருந்தும் வந்த வேன்கள், லாரிகள் எல்லாம் திண்டிவனம் தொடங்கி ஆங்காங்கு நிறுத்தப்பட்டன, நகரத்திற்குள்ளும் அடையாறு, பூந்தமல்லி எனப் பல்வேறு நுழை வாயில்களில் பஸ்கள் நிறுத்திச் சோதனைகள் இடப்பட்டன.

அப்படியும் தடையை மீறி ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் கூட இருந்தவர்கள் மீது அடக்குமுறை மேற்கொண்டு கலைக்கப்படுவார்கள் என்பதுபோலச் செய்திகள் பரவியதை ஒட்டி மனித உரிமை அமைப்புகள் சார்பாகச் சிலர் பார்வையாளர்களாக வந்தால் நல்லது எனச் சிலர் கருத்துத் தெரிவித்தனர். 

சுமார் 11 மணி வாக்கில்தான் நண்பர்களைத் தொடர்பு கொள்ள முடிந்தது. பேரா. மு.திருமாவளவன், தோழர் நட்ராஜ், சுற்றுச் சூழல் ஆர்வலர் வி.சீனிவாசன், வழக்குரைஞர் கி. நடராசன் ஆகியோர் உடன் வரச் சம்மதித்தனர். 

சுமார் 2.30 மணி வாக்கில் ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு எதிரில் அண்ணாமலைப் பல்கலைக் கழக தூரக் கல்வி அலுவலகத்திற்கு வேளியே கூடினோம். கடுமையான போலிஸ் குவிப்பு. கைது செய்து அகற்றப்பயுவோர்களைக் கொண்டு செல்ல ஏராளனமான MTC பஸ்கள் குவிக்கப்பட்டிருந்தன. பத்திரிக்கையாளர்கள் சிலர் காமராக்களுடன் நின்றிருந்தனர். 

பேரணிக்கு அனுமதி இல்லை எனவும், நீதிமன்றமும் அனுமதி மறுத்துவிட்டது எனவும், எனவே இங்கு கூடுவது சட்ட விரோதம் எனவும் மைக்கில் போலீசார் அறிவித்துக் கலைந்து செல்லுமாறு எச்சரித்துக் கொண்டிருந்தனர்.

சுமார் 200 த.மு.முகவினர் அங்கு நின்றிருந்தனர். திடீரென அவர்கள் சுற்றி வளைக்கப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டனர். அதே நேரத்தில்பெருந்திரளில் மக்கள் எழும்பூர் ஆதித்தனார் சிலை அருகில் உள்ள ரவுண்டானவைச் சுற்றித் திரண்டிருப்பதாக யாரோ சொன்னார்கள். 

போலீஸ் காவல் இருந்ததை ஒட்டி ராஜரத்தினம் ஸ்டேடியத்தைப் பின்புறமாகச் சுற்றி வந்து ம.தி.மு.க அலுவலகம் முன்பு போலீஸ் வாகனங்களுக்கு மத்தியில் எங்கள் டூ வீலர்களை நிறுத்திவிட்டு அப்படியே நகர்ந்து ரவுன்டானாவை ஒட்டிப் பல்லாயிரக் கணக்கில் கூடியிருந்த த.மு.மு.க தொண்டர்கள் மத்தியில் கலந்துகொண்டோம். 

ஏகப்பட்ட போலீஸ் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் ஒன்றும் தீவிரம் காட்டாமல் அமைதியாகவே தடிகளுடன் நின்றிருந்தனர். கருப்பு வெள்ளைக் கொடிகள் அப்பகுதியை நிறைத்திருந்தன. "நாரே தக்பீர் ! அல்லாஹூ அக்பர்" என்கிற முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன. 

சுமார் 3.30 மணிவாக்கில் த்.மு.மு.க தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் வந்தார். வேன் ஒன்றில் ஏறி நின்று முழக்கங்களை இட்டார். தொண்டர்கள் அவ்வழியே செல்லும் பொது மக்கள், குறிப்பாகப் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தனர். 

எனக்குச் சரியாக மதிப்பிட இயலவில்லை. சுமார் 5,000 பேர்கள் இருக்கலாம். ஆங்காங்கு நிறுத்தப்பட்டுள்ள காலி பஸ்களில் ஏறி அமைதியாகக் கைதாகுமாறு தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். கைதானவர்களை ஏற்றிக் கொண்டு பஸ்கள் ஊர்ந்தன.

சுமார் 5 மணி வாக்கில் பேராசிரியர் மைக்கில் மீண்டும் பேசினார். மேலும் அங்கு கூடி இருந்தவர்களைக் கைது செய்து கொண்டு போகத் தம்மிடம் வாகனங்கள் இல்லை எனப் போலீசார் கைவிரிப்பதாகவும் எனவே மற்றவர்கள் அமைதியாகக் கலையுமாறும் வேண்டிக்கொண்ட பின் கூடியிருந்தோர் கலைந்தனர்.

த.மு.மு.க 1995ம் ஆண்டு தொடங்கப்பட்டது என நினைக்கிறேன். அதிலிருந்து அவர்களின் செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருவன். அமைதியான வழியில் தமது கோரிக்கைகளுக்காக உறுதியாகப் போராடுபவர்கள் அவர்கள். எந்தக் காலத்திலும் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏதும் அவர்களால் ஏற்பட்டதாக நான் அறிந்ததில்லை. சிறைக் கைதிகள் தொடார்பான கோரிகை எல்லாம் மிக நியாயமானவை. 

பேசாமல் பேரணியை நடதிவிட்டுப் போக அனுமதி அளித்திருந்தால் ஊர்வலமாகச் சென்று மனு அளித்துவிட்டுச் சென்றிருப்பார்கள்.

இப்படித் தடை செய்து தமிழக அரசு மூக்கை உடைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை.

எப்படியோ த.மு.மு.க தொண்டர்கள் உற்சாகமாக வீடு திரும்பினர். 

ம.தி.மு.க அலுவலகம் முன்பிருந்த கடையில் ஒரு சூடான டீயையும் போண்டாவையும் சாப்பிட்டுவிட்டு நாங்களும் கலைந்தோம்.

நன்றி மார்க்ஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக