Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 பிப்ரவரி, 2016

முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது – ஆய்வு முடிவு.


முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதில் ஊடகங்களுக்கு பெரும்பங்கு இருக்கிறது – ஆய்வு முடிவு.

முஸ்லிம்களுக்கு எதிரான மனோநிலையை வளரக்ககூடிய செய்திகள் மக்களின் மனதில் முஸ்லிம்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்ற எண்ணத்தை விதைகின்றது என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று கூறியிருக்கிறது.
அமெரிக்காவின் IOWA State University நடத்திய பல தொடர்ச்சியான ஆய்வுகளில் அமெரிக்க தேர்தல்களில் இஸ்லாமிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் வேட்பாளர்களுக்கே அதிக ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த மக்கள் இஸ்லாமிய நாடுகளின் மேல் போர் தொடுப்பதையும் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்களின் மேல்
கட்டுப்பாடு விதிப்பதற்கும் ஆதரவு அளிக்கின்றனர் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.
இந்த ஆய்வில் பங்கெடுத்தவர்களை முஸ்லிம்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் செய்திகளையும், முஸ்லிம்களை நடுநிலையாக சித்தரிக்கும் செய்திகளையும், மற்றும் முஸ்லிகளை நல்ல அடிப்படையில் சித்தரிக்கும் செய்திகளையும் பார்க்கச்செயதனர். அதன் பின் இவர்களிடம் அரசியல் மற்றும் ராணுவ கொள்கைகள் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதில் முஸ்லிம்களை பற்றி நல்லவிதமாக காட்டப்பட்ட செய்திகளை பார்த்தவர்கள் முஸ்லிம் நாடுகளின் மீது போரை விரும்பாதவர்களாகவும் முஸ்லிம்களை மோசமாக சித்தரிக்கப்பட்ட செய்திகளை கண்டவர்கள் முஸ்லிம் நாடுகள் மீது போர் தொடுப்பதையும் அமேரிக்கா வாழ் முஸ்லிம்கள் மீது கட்டுப்பாடு விதிப்பதையும் விரும்புபவர்களாக இருந்தனர் என்று கண்டறிந்தனர்.
ஊடகவியலாளர்கள் முஸ்லிம்கள் குறித்த மோசமான செய்திகளையே வெளியிடாமல் அவர்களை குறித்த நல்ல செய்திகளையும் வெளியிட வேண்டும் என்று இந்த ஆய்வுக்குழு வேண்டுகோள் விடுத்தது, மேலும் முஸ்லிம்களின் பெயரில் அசம்பாவிதங்கள் ஏதும் நடத்தபட்டால் அதனை குறித்த முஸ்லிம் சமூகத்தின் கருக்குக்களையும் கேட்க வேண்டும் என்றும் அந்த ஆய்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் முஸ்லிம்கள் குறித்த மற்ற சமூகத்தினரின் மோசமான கருத்துக்களை களைய அவர்கள் மற்ற சமூகத்தினருடன் நெருங்கிப்பழக வேண்டும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக