Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 4 பிப்ரவரி, 2016

ஃபாசிஸத்தை மாய்ப்போம்-தேசத்தை காப்போம். சவூதியில் நடைபெற்ற காந்தி நினைவு நாளில் சமூக நல அமைப்பு சூளுரை!


ஃபாசிஸத்தை மாய்ப்போம்-தேசத்தை காப்போம். சவூதியில் நடைபெற்ற காந்தி நினைவு நாளில் சமூக நல அமைப்பு சூளுரை!

சவூதி அரேபியா கிழக்கு மாகாண இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் சார்பில் தம்மாம் ரோஸ் ரெஸ்டாரண்டில் நடைபெற்ற காந்தி நினைவு நாள் நிகழ்ச்சிக்கு பொது செயலாளர் காயல் மக்தூம் நைனா தலைமையேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சிஹாத் கிளை தலைவர் மல்லி அஸ்கர் வரவேற்றார். இந்தியா ஃபிரட்டர்னிடி ஃபோரம் தம்மாம் கிளை தலைவர் நாஞ்சில் பைசல் அறிமுக உரையாற்றினார்.

இந்திய தவ்ஹீத் ஜமாத் சவூதி பொறுப்பாளர் அபுபக்கர்(எ)தொண்டியப்பா,டான்ஸ்வா பொது செயலாளர் சுரேஷ் பாரதி,தம்மாம் முத்தமிழ் மன்றத்தின் பொறுப்பாளர் நாஞ்சில் கபீர் ஆகியோர் காந்தி படுகொலை நிகழ்வுகளை குறிப்பிட்டு பேசினர்.
இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தேசிய துணை தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி சிறப்புரையாற்றினார்.
அவர் தமது உரையில் தேச தந்தை காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவுக்கு சிலை வைப்பதும்,பாராட்டு விழா நடத்துவதும்,கோவாவில் ஒரு கைதியின் கதை என்னும் பெயரில் நூல் வெளியிடுவதையும் தேச விரோத செயலாக மத்திய,மாநில அரசுகள் அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்.
காந்தியை சுட்டுக்கொன்ற ஃபாசிஸம் தான் எழுத்தாளர் கல்புர்கியையும்,மாணவர் ரோகித் வெமுலாவையும் சாகடித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
சுதந்திர இந்தியாவில் பாசிஸத்தின் முதல் கொலையாக காந்தியும் இறுதி கொலையாக ரோஹித் வெமுலாவும் இருக்கட்டும்.இனியொரு இழப்பு எந்தவொரு இந்தியனுக்கும் நேராமல் இருக்க பாசிஸத்தை இனம் கண்டு அதனை மாய்த்திட போராடுவோம் என்றார்.
பல்வேறு ஜாதி,மதம்,இனம்,மொழி கலந்த வேற்றுமையில் ஒற்றுமையே நமது தேசத்தின் வலிமை என்பதை உணர்ந்து கொண்ட நாம் சமத்துவம்,சகோதரத்துவம்,சகிப்புத்தன்மை போன்றவற்றிற்கு எதிரான பாசிஸத்தை மாய்த்து தேசத்தை காக்க காந்தியின் நினைவு நாளில் ஒவ்வொரு இந்தியனும் சூளுரைக்க வேண்டுமென்றார்.
கடையநல்லூர் சைபுல்லாஹ் நன்றி கூறினார்.முன்னதாக காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்த குறுந்தகட்டை கீழை ஜஹாங்கீர் அரூஸி வெளியிட இண்டர்நேஷனல் இந்தியன் ஸ்கூல் பெற்றோர் கழக பொறுப்பாளர், சமூக ஆர்வலர் திரு.வாசு பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் மாநில தலைவர் காயல் அபுபக்கர்,ஜமா அத்துல் இஸ்லாம் சார்பாக ஜனாப்.அன்சாரி,தம்மாம்,கோபார்,சிஹாத் பகுதிகளின் இந்தியன் சோஷியல் ஃபோரம் பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோபார் கிளை தலைவர் அதிரை அபுபக்கர் மற்றும் தம்மாம் கிளை பொது செயலாளர் யாசர் அரபாத் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
தகவல் உதவி: முஹம்மது யூனுஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக