Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 19 மார்ச், 2016

ஏன் இப்படி?

அவர் ஒரு முஸ்லிம் எழுத்தாளர். 
சில சிறுகதைகளை எழுதியுள்ளார் என்றெண்ணுகின்றேன். 
அவரது முகநூலில் ஒரு பதிவு. 
தன்னுடைய ரோல்மாடல் 'வாத்தியார்' (எம்ஜிஆர்) 
அவரை மறக்கவே இயலாது என எழுதியிருந்தார்.

மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மீப்பெரும் அருட்கொடை பேச்சு. 
நம்பிக்கையாளனின் நாவு இறைவனைப் புகழ்வதற்காகவே!.

இறைவனைப் புகழவேண்டிய நாவில் இன்னொருத்தனைப் 
புகழுவதை ஒரு முஃமினால் சகித்துக்கொள்ளவே இயலாது.

அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் மக்கள், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்ப்பவர்கள் மீது அன்பு செலுத்துவதை நீங்கள் காணமுடியாது!.
அத்தகையோர் அவர்களுடைய தந்தையராயினும் அல்லது அவர்களுடைய தனயர்களாயினும் அல்லது அவர்களுடைய சகோதரர்களாயினும் அல்லது அவர்களுடைய குடும்பத்தினராயினும் சரியே!
அவர்களின் இதயங்களில் அல்லாஹ் ஈமானை நம்பிக்கையைப் பதித்து வைத்துவிட்டான். (அல்குர்ஆன் 58:22)
இறைவனின் வெறுப்போடு வாழ்ந்து சென்றவர்களை நேசிப்பதும் 
'முஸ்லிம் எழுத்தாளர்களால்' இயலுகின்றது!.

இஸ்லாமிய வெறுப்போடு வாழ்பவர்களை தங்கள் தலைவர்களாக 
பின்பற்றவும் முடிகின்றது.

மேற்கண்ட இறைவசனத்திற்கு உரையெழுதுகையில் 
அல்லாமா மௌதூதி (ரஹ்) அவர்கள் ஒரு நபிமொழியை 
குறிப்பிடுகின்றார்கள்.

துறை சார்ந்து அது பலவீனமானதாக மதிப்பிடப்பட்டாலும் 
அற்புதமான நபிமொழி அது!.

'இறைவா! எந்த நிலையிலும் ஒரு காஃபிருக்கு நன்றி 
செலுத்தக்கூடிய நிலையில் என்னை வைத்துவிடாதே!' 
என அண்ணலார் பிரார்த்தனை புரிந்தார்கள்.

1999 ஆம்ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து 
சிறைகளிலும் முஸ்லிம்கள் கைதிகள் பயங்கரமாக 
தாக்கப்பட்டார்கள். வர்ணிக்கவே முடியாத சித்ரவதைகள்!.

திமுக, பாஜக-வோடு கூட்டுச்சேர்ந்த நேரம் அது!. 
புதிய கூட்டாளிகளின் மனம் கொள்ள அரசாண்ட கட்சியினர் 
செலுத்திய கப்பம்!.

அச்சயமத்தில் நாங்களும் கைதானோம். பத்திரிக்கை வழக்கில்!. 
எங்களுக்கும் சரியான கவனிப்பு. பயங்கரமான அடி!.

நான்கு மாதங்கள் கழித்து வெளிவந்தோம். 
சிறை என்றால் அதுதான் சிறை. பலமுறை சிறை சென்றபோதிலும் 
அந்த சிறைவாசம் ஒன்றுதான் நினைவில் நின்றுள்ளது.

வெளியே வந்தபின் சென்னை சென்றால் ஒரு பொதுக்கூட்டம். 
முத்தமிழ் அறிஞரை கௌரவிக்கும் கூட்டம். 
நாடறிந்த முஸ்லிம் புலவர் ஒருவர் இப்படித்தான் என்றில்லாமல் 
புகழ்ந்து தள்ளுகின்றார்.

'ஒரு முனாஃபிக்/ காஃபிர் புகழப்படும்போது அர்ஷ் 
நடுங்குகின்றது'  என்னும் நபிமொழிதான் என் நினைவிற்கு வந்தது. 
கூட வந்தவரிடம் போகலாம், வாருங்கள் இங்கே இறைவனின் 
சாபம் இறங்கிக் கொண்டுள்ளது என்றவாறு கிளம்பிவிட்டேன்.

இறைவனைப் புகழவேண்டிய நாவில் இன்னொருவரைப் 
புகழவே கூடாது. இறைவா, எங்களைக் காப்பாற்று 
அந்நிலையில் இருந்து!.

இறைவனைப் புகழும் வாயால் அவன் தகுதிக்கு ஒத்துவராத 
எதனையும் செய்யலாகாது!.

- சையத் அப்துர் ரஹ்மான் உமரி
மின்ன்சல் மூலமாக
குலாம் ஆசாத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக