லப்பைக்குடிகாடு அருகே திருமாந்துறை கிராமத்தை சேர்ந்தவர்கள் செல்லக்கருப்பன் மகன் ஸ்ரீகாந்த் (13), ராஜேந்திரன் மகன் கபில்தேவன் (15), விஜயன் மகன் கிள்ளிவழகன் (14) மற்றும் ராஜேந்திரன் மகன் காமராஜ் (12) ஆகிய 4 மாணவர்களும், பெரம்பலூர் புறநகரான துறைமங்கலத்தில் உள்ள நடுநிலைப் பள்ளி விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இதில், ஸ்ரீகாந்த், கபில்தேவன், கிள்ளிவழகன் ஆகியோர் 8-ம் வகுப்பும், காமராஜ் 6-ம் வகுப்பும் படித்து
வருகின்றனர். இந்த மாணவர்களுக்கு விடுதியில் தங்கி படிக்க விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்தும் அவர்கள் கேட்கவில்லையாம். இதனால் மனமுடைந்த 4 மாணவர்களும் திங்கள்கிழமை எலி மருந்து பிஸ்கட்டை உட்கொண்டனராம். இதனால், விடுதியில் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்ட மாணவர்கள் நால்வரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக