Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சென்னையில் SAVE INDIA FORUM சார்பாக நடைபெற்ற குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம்!

சென்னையில் SAVE INDIA FORUM சார்பாக நடைபெற்ற குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம்! 

2002 ஆம் ஆண்டு நடந்தேறிய குஜராத் இனப்படுகொலை நாட்டின் கூட்டு மனசாட்சியையே உலுக்கியது. தேச பிரிவினைக்கு பிற்பாடு, 2000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட மிகவும் மோசமான இனப்படுகொலை இதுவேயாகும். 250 நபர்கள் காணாமல் போயினர். பெண்கள் கொடூரமாக கற்பழிக்கப்பட்டனர். பெண்களையும், குழந்தைகளையும் குறிவைத்தே திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை இது. கலவரம் தொடங்கிய ஒன்றறை மாதத்திற்குள்ளாக ஏறத்தாழ 1,50,000 முஸ்லிம்கள் அகதிகள் முகாம்களுக்கு தள்ளப்பட்டனர். 100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.
SAVE INDIA FORUM சார்பாக இன்று (28-02-2016) ஞாயிறு மாலை 04.00 மணிக்கு ஜவஹர் கிராண்ட் பேலஸ், டவுட்டன், புரசைவாக்கத்தில் குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
இந்த நினைவேந்தல் கூட்டத்திற்கு Save India Forum தலைவரும், ஆவணப்பட இயக்குனருமான கோபால் மேனன் அவர்கள் தலைமை தாங்கினார். ஆவணப்பட இயக்குனரும், சமூக ஆர்வலருமான அமுதன் RP அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
Former IAS Officer and former Director of Action Aid India மற்றும் எழுத்தாளர் ஸ்ரீ ஹர்ஷ் மந்தர் அவர்கள் “குஜராத் இனப்படுகொலை நினைவேந்தல்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் M. முஹம்மது இஸ்மாயில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் M.H. ஜவாஹிருல்லாஹ், NCHRO தேசிய தலைவர் பேராசிரியர் அ.மார்க்ஸ், CPI(M) மாநில செயற்குழு உறுப்பினர் K. கனகராஜ், சமூக ஆர்வலர் திவ்யபாரதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக