இந்தியாவின் சுத்தமான நகரங்கள் பட்டியலில் திருச்சி மாநகரம் மூன்றாம் இடம் பிடித்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு இரண்டாம் இடத்தை பிடித்திருந்த திருச்சி தற்போது ஒரு படி இறங்கியுள்ளது. எனினும், கர்நாடகாவின் மைசூரு நகரம் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளது.
சுத்தமான நகரங்கள் குறித்து இந்திய தர ஆணையம் நடத்தி ஆய்வுகளை மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு இன்று வெளியிட்டார்.
அதன்படி, கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆய்வில் முதலிடம் பெற்ற கர்நாடகாவின் மைசூர் நகர் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.
பஞ்சாபின் சண்டீகர் நகர் இரண்டாம் இடத்தையும், தமிழகத்தின் திருச்சி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.கடந்த முறை திருச்சி இரண்டாம் இடம் பிடித்திருந்தது.
4ம் இடத்தை டெல்லியும், 5ம் இடத்தை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினமும், குஜராத் மாநிலம் சூரத் 6வது இடத்தையும், ராஜ்கோட் 7வது இடத்தையும் பிடித்துள்ளது.
சிக்கிம் மாநிலம் கேங்டாக் 8வது இடத்தையும், மகாராஷ்டிராவின் பிம்ப்ரி சின்ச்வாத் 9ம் இடத்தையும், மும்பை 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தூய்மையான 75 நகரங்கள் பட்டியலில் மதுரை 34வது இடத்தையும், சென்னை 36-வது இடத்தையும் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு திருச்சி 2-வது இடத்தை பிடித்திருந்தது. இந்தாண்டு 3வது இடத்துக்கு பின்நோக்கி சென்றுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டமான 'ஸ்வஜ் பாரத்' திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 51 நகரங்கள் உள்பட 73 நகரங்களில் இத்திட்டம் செயல்படுவது குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக