அமீரகத்தில் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் "சங்கமிப்போம்" என்கிற சங்கம விழா 12/02/2016 அன்று துபை அல் கிஸைஸ் கிரசெண்ட் பள்ளியில் இரவு 7:30 மணிக்கு அமீரக தலைவர் அலியார் சாஹிப் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது,
* பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
* தமிழ், மலையாளம், கன்னடம், உருது மொழியில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சியும் நடைபெற்றது.
* SDPI கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்களான முஹம்மது ஷாஃபி அவர்களுக்கும் மொய்தீன் குட்டி ஃபைஜி அவர்களுக்கும் மற்றும் SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்களுக்கும் பொன்னாடை அனிவித்து நினைவு பரிசும் வழங்கப்பட்டது.
பின்பு உரையாற்றிய SDPI கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது ஷாஃபி அவர்கள் இந்திய தேசத்தில் முஸ்லீம்களுக்கு எதிராகவும், தலித்களுக்கு எதிராகவும் நிலவி வரும் சகிப்பின்மையை பற்றி விவரித்து இதனை எதிர்த்து மக்கள் ஒருங்கினைய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அடுத்தாக உரையாற்றிய SDPI கட்சியின் தமிழ் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முஹைதீன் அவர்கள் சுதந்திர இந்தியாவின் முன்பும் பின்பும் இந்திய முஸ்லீம்களின் நிலையை சுட்டி காட்டி அதிகார சபைகளில் முஸ்லீம்களின் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து வருகின்ற 4 மாநில தேர்தல்களில் SDPI கட்சிக்கு முழு ஆதரவை தர வேண்டும் கேட்டுகொண்டார்.
இறுதியாக உரையாற்றிய SDPI கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மொய்தீன் குட்டி ஃபைஜி அவர்கள் வளர்ச்சி என்று சொல்லி கொண்டு ஆட்சி கட்டிலில் அமர்ந்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களின் வளர்ச்சியை பற்றி கவனம் செலுத்தாமல் அம்பானிகள் மற்றும் அதானிகளின் வளர்ச்சிக்கு இந்த அரசு பாடுபடுவதை தோலுரித்து காட்டினார்.
நிகழ்ச்சியின் இறுதியாக இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டியின் தமிழ் மாநில தலைவர் திருச்சி முபாரக் அவர்கள் தீர்மானங்களை வாசித்தார்.
தீர்மானம்:
1. தலித் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் கவலையளிக்கிறது. கடந்த 1 1/2 ஆண்டு காலமாக சிறுபான்மை மற்றும் தலித்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக வன்முறை செயலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மத்திய அரசு மீது சந்தேகங்களை எழுப்புகிறது. ஆதலால் இது போன்ற செயல்களை எதிர்த்து ஜனநாயக சக்திகள் ஒன்றினைய வேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி வேண்டுகோள் விடுக்கின்றது.
2. வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீட்டையும் நீதியையும் விரைந்து வழங்கிட வேண்டும் என்று இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கேட்டு கொள்கிறது.
3. இந்திய மக்கள் வருகின்ற 4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் இந்துத்துவ BJP போன்ற மதவாத சக்திகளை ஜனநாயக உணர்வோடு புறந்தள்ள வேண்டும் என இந்தியன் கல்ச்சுரல் சொசைட்டி கேட்டு கொள்கிறது.
நிகழ்ச்சியில் அமீரகத்தின் பல்வேறு திசைகளிலுருந்ந்தும் பல்வேறு மாநில மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
மின்னஞ்சல் மூலமாக
SDPI LBK
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக