சமீபகாலமாக தென் ஆப்ரிக்க கிரிக்கட் வீரர் ஹாஷிம் அம்லா இந்திய பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம் அவரின் ஆடை நாகரீகமாக இல்லை என்றும் அதனை மாற்றிவிட்டு வந்தால் மட்டுமே தான் அவருக்கு பேட்டியளிக்க சம்த்திப்பேன் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வலம்வந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து ஹாஷிம் அம்லா கருத்து தெரிவிக்கையில் “இதுவரை தான் எந்த ஒரு பத்திரிகையாளரையும் தனது விருப்பத்திற்கேற்ப ஆடை அணிய வற்புறுத்தியதில்லை” என்று அவர் கூறியுள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கவை சேர்ந்தவரான தான் மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கு மிகுந்த மதிப்பளிப்பவர் என்றும் தன்னுடைய நம்பிக்கைகளை மற்றவர் மேல் திணிப்பவர் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் அவரது டுவிட்டர் பதிவில் இணையதளம் பொய்களால் நிரம்பியுள்ளது என்றும் கூறியுள்ளார்.
மேலும் மதுபான நிறுவனமான காஸ்டில் நிறுவனத்தின் லோகோ அம்லாவின் ஆடையில் பதிக்கப்படாததற்கு அம்லா அபராதம் செலுத்திவருகிறார் என்ற செய்தியும் பொய்யானது என்றும் இத்தகைய செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அம்லா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக