நமதூர் நூலகத்திற்கு வழங்கப்பட்ட அறிவுப்புதையல்
ஒரு முஸ்லிமுக்கு அவன் வாழும் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு. அவன் அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும். அதன் மூலம் அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டும்.
அண்ணல் நபிகள் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அறிவிக்கிறார்கள்:
"ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்யவேண்டும்”.
நபித்தோழர்கள் வினவினார்கள்: “ அல்லாஹ்வின் தூதரே, ஒருவருக்கு தர்மம் செய்ய ஒன்றுமே இல்லையென்றால் அவர் என்ன செய்வார்?”
அண்ணலார் விடையளித்தார்கள்: “ அவன் தன் கரங்களால் உழைக்க வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் தர்மம் செய்ய வேண்டும்”.
நபித்தோழர்கள் விடவில்லை. மீண்டும் வினவினார்கள். “அப்படியும் அவனுக்கு ஒன்றும் கிடைக்காவிட்டால் ...?
அண்ணலார்: “அவன் உதவி கேட்டு வருபவர்களுக்கு உதவ வேண்டும்.”
நபித்தோழர்கள்: “ அதுவும் அவனுக்கு முடியவில்லை யென்றால்...?”
அண்ணலார்: “அவன் நல்ல செயல்கள் புரிய வேண்டும். தீயவற்றிலிருந்து விலகியிருக்கவேண்டும். இதுவே தர்மமாகக் கருதப்படும்.” (புகாரி)
ஆக, சமூகக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, சமூக சேவைகள் செய்வதற்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக