வலிமை யாரிடத்தில்?அசத்திய சமூகம் அதிகாரத்தை கட்டமைத்து, ராணுவ பலத்தில் மிகைத்தவர்களாக இருக்கலாம்.
பொருளாதார வளம் அவர்களிடத்தில் கொட்டி கிடக்கலாம். தொழில் நுட்பங்களில் வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கலாம்.
அரசியல் அதிகாரத்தில் வல்லரசுகளாக, அல்லது வல்லரசு கனவுகளோடு வலம் வரலாம்.
இவையெல்லாம் தங்களுக்கு சாதகமாக இருப்பதால் "எங்களைவிட வலிமை மிக்கவர் யார்" என்று கேட்கலாம்.
இவர்களுக்கு குர் ஆன் பதிலளிக்கிறது:
"ஆத் சமூகத்தாரின் நிலைமையும் இதுதான். அவர்கள் பூமியில் எவ்வித நியாயமுமின்றி பெருமையடித்துக் கொண்டிருந்தார்கள்."
“எங்களைவிட வலிமை மிக்கவர் யார்?” என்றனர்.
"அவர்களைப் படைத்த இறைவன் அவர்களைவிட வலிமை மிக்கவன் என்பது அவர்களுக்குப் புலப்படவில்லையா? அவர்கள் நம் சான்றுகளை மறுத்துக் கொண்டிருந்தார்கள்."
َ
"இறுதியில், அபாக்கியமான சில நாளில் கடும் புயற்காற்றை அனுப்பினோம். உலக வாழ்விலேயே இழிவான வேதனையை சுவைக்க வேண்டும் என்பதற்காக!"
"மேலும், மறுமையின் வேதனை இதைவிடவும் இழிவு தரக்கூடியது. அங்கு அவர்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யாரும் இருக்கமாட்டார்."
(41:15,16)
அந்தோ பரிதாபம்... சத்தியத்தை ஏற்காத இந்த வல்லரசுகளின் நிலை கைசேதமே.
சத்தியத்தை எதிர்கின்ற எந்த அதிகார வர்க்க சமூகமும் இழிவானவர்களே. இழிவானவர்கள் இழிவையே சந்திப்பார்கள்.
இழிவடைய காத்திருப்போரை பார்த்து வாய் பிளப்பது. அவர்களுடைய வளர்ச்சியை பிரமிப்போடு பார்ப்பது முஸ்லிமின் அழகு அல்ல. ஈமான் கற்றுத்தரும் பாடம் அல்ல.
மின்னஞ்சல் மூலமாக
Gulam Asath
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக