அன்சாரிகள் என்று நாம் போற்றும், நேசிக்கும் ஓர் சமூகத்தை வரலாறு பதிவு செய்ய தங்களை தயார்படுத்திக் கொண்ட இடம்தான் அகபா. மக்காவிற்கு வெளியே உள்ள பள்ளத்தாக்கு பகுதி. படிக்கின்ற ஈமானிய உள்ளங்கள் அந்த 70 பேரில் நாம் ஒருவராக இருந்திருக்க கூடாதா? என்று ஏக்கமடைய செய்த நிகழ்வுதான் அகபா. எப்படி ஏக்கம் இல்லாமல் போகும் நபிகளாரிடத்தில் (ஸல்) சுவனத்தை வாக்குறுதியாக பெற்றவர்களாயிற்றே. வேறு என்ன வேண்டும் இந்த உலகில் இறையடியானுக்கு?
நபிகாளாரின் மக்கா நகர வாழ்க்கையில் 13ம் ஆண்டு. குறைஷிகள் கடும் நெருக்கடி போட்டாலும், அண்ணலாரை இரகசியமாக மதினாவாசிகள் சந்தித்தனர். நபிகளாரை மதினாவுக்கு புலம்பெயர்ந்து வருவதற்க்கான ஏற்பாடு எப்படி அமைய வேண்டும் என்ற ஆவல் அவர்கள் மக்கா நோக்கி கிளம்பியதிலிருந்தே தெரிகின்றது.
நடுநிசி இரவு, குறைஷி சமூகம் உறக்கத்தில். அசத்திய சமூகம் உறங்கட்டும், சத்தியம் எழுச்சி பெற வேண்டுமல்லவா?
பாலைவன பள்ளத்தாக்கில் அண்ணலார் அவர்கள் சிறிய தந்தை அப்பாஸோடு வருகை தர,
”மதினாவாசிகளே, முஹம்மத் எங்களிடத்தில் எப்படி கண்ணியமாய் இருக்கின்றார் என்று உங்களுக்கு தெரியும். அவரை நாங்க எவ்வாறு பாதுகாத்து வருக்கின்றோம் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்போது அவர் உங்களிடத்தில் வர விரும்புகின்றார்”
”நீங்க அவர்களை பாதுகாத்து உதவி செய்வீர்கள் என்றால் அழைத்து செல்லுங்கள், இல்லை எதிரிகளிடத்தில் ஒப்படைச்சி விடுவீங்கன்னா, அவர்களை எங்களோடு விட்டுவிடுங்கள்”
வார்த்தையில் தெளிவு, அப்பாஸ் பேசி முடித்தார்.
மதீனாவாசிகளில் கஅப் (ரலி) அவர்கள் பேச ஆரம்பித்தார்...
--
பகுதி-2 (தொடரும்)
இன்ஷா அல்லாஹ்...
மின்னஞ்சல் மூலமாக
குலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக