Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 13 பிப்ரவரி, 2016

தேனியில் மலர்ந்த ஒற்றுமை போராட்டம் ...

தேனியில் மலர்ந்த ஒற்றுமை போராட்டம் , தமிழகம் முழுவதும் மலர பிராத்திக்கவும் 

10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் முஸ்லிம் மற்றும் 


அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் கருணையின் அடிப்படையில் 

விடுதலை செய்ய கோரியும் சிறையில் நடைபெறும் 

கொடுஞ்சித்ரவதைகளை தடுத்து நிறுத்திடவும், மனித உரிமை மீறலில் 

ஈடுபடும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், தமிழக 

அரசிற்கு கோரிக்கை வைத்து தேனி மாவட்ட அனைத்து முஸ்லிம் 

ஜமாஅத்தார்கள் இன்று (13.2.2016) காலை 10 மணி அளவில் தேனி பங்களா 

மேடு பகுதியில் ஆர்ப்பாட்ம் நடத்தினர்.

நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துபவர்களாக,


K.K.D பொன்ராஜ் கொத்தாலம் ஸாஹிப்



(பொதுச் செயலாளர், தேனி மாவட்ட ஐக்கிய மேம்பாட்டு கூட்டமைப்பு)



மெளலவி.MMமுஹம்மது ஹுசைன் மன்பஈ



(தேனி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை)



அல்ஹாஜ்.சாகுல் ஹமீத்



(தலைவர் தேனி மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்)



மெளலவி.E.சாகுல் ஹமீத்



(இந்திய தவ்ஹீத் ஜமாஅத் )



ஜனாப்.A.ஹாலித் முஹம்மது 



(பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா)



ஜனாப்.S.M ரபீக் அஹமது



(மாநில செயற்குழு, SDPI கட்சி )



ஜனாப்.K.M முஹம்மது மைதீன் உலவி



(மாநில துணை பொதுச்செயலாளர்,மமக)



ஜனாப்.கோவை.பல் நாசர்



(மாநில பேச்சாளர், இந்திய தேசிய லீக்)



ஜனாப்.பேட்டை முஸ்தபா



(மாநில கொள்கை பரப்பு செயலாளர்,மமக)



மெளலவி.M.அலாவுதீன் மிஸ்பாஹி



(தலைவர் தேனி புதுப்பள்ளி)



ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் 


போராட்ட முடிவில் கோரிக்கை கோஷங்கள் கூறிவிட்டு பின் தேனி மாவட்ட 

ஆட்சியர் அவர்களிடம் சென்று சிறைவாசிகள் விடுதலைக்காக மனு 

அளிக்கப்பட்டது.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக