வருடாந்திர “Akhil Bharathiya Pracharya Sammelan” என்றழைக்கப்படும் கருத்தரங்கிற்கு வருகை தரும் சுமார் 1300 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குடன் வருகிற பிப்ரவரி 12 ஆம் தேதி உரையாற்ற இருக்கிறார் பிரதமர் மோடி. இந்த பள்ளிகள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இன் கட்டுபாட்டிற்குள் இயங்குபவை என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிர்த்தி இராணியும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 11 இல் இருந்து 14 வரை இந்த
கருத்தரங்கு நடைபெற இருக்கிறது. இந்த கருத்தரங்கில் மோடி, இராணி தவிர்த்து NCTE தலைவர் சந்தோஷ் பாண்டா, NCERT இயக்குனர் ஹிருஷிகேஷ் சேனாபதி மற்றும் சில பள்ளிகளின் முதன்மை ஆசிரியர்களும் உரையாற்றுவதாக கூறப்படுகிறது.
கல்வி காவிமயமாக்கப்படுவது குறித்து Akhil Bharatiya Shiksha Sansthan இன் தேசிய பொதுச் செயலாளரிடம் கேள்வி எழுப்பிய பொழுது, இந்த கூட்டமில் இயங்கும் கல்வி நிறுவனங்கள் CBSE மற்றும் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டங்களை கற்பிக்கின்றன. அதனால் இந்த கேள்வியை அரசாங்கத்திடம் கேட்பதே சரியாக இருக்கும் என்று கூறியுள்ளார். நாங்கள் காவிமயமக்குவது குறித்து சிந்திப்பதில்லை, அதே சமையம் இந்தியாவை மையப்படுத்தி எங்கள் பாடங்களை அமைத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் நடக்க இருக்கிற கருத்தரங்கத்திற்கும் தேசிய மனிதவலதுறையின் புதிய கல்வி முறை மாற்றத்திற்கும் எந்த தொடர்புமில்லை என்று கூறியுள்ளார். தற்பொழுது மோடி இந்த கருதரங்கதிற்கு வருகை தந்து உரையாற்றுவது போல 2001 ஆம் ஆண்டு வாஜ்பாயியும் கருத்தரங்கத்தில் உரையாற்றினார் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் மொத்தம் 12,363 பள்ளிகள் இயங்குகின்றன. மேலும் சமீபத்தில் கல்வி முறை மாற்றத்திற்கான திட்டங்களை மனித வள மேம்பாட்டு துறை கருத்துகளை வரவேற்றதும் அதற்கு ஆர்.எஸ்.எஸ். 12 மேனி நேர கல்வி திட்டத்தை பரிந்துரை செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக