Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

இணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு தடை


இணையதள சுதந்திரத்தை பாதிக்கும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு தடை

இணையதள சுதந்திரத்திற்கு ஒரு வெற்றியாகவும் ஃபேஸ்புக்கின் Free Basics திட்டத்திற்கு பெரும் தோல்வியாகவும் TRAI இன் இந்த முடிவு அமைந்துள்ளது. செல்போன் பயனாளர்களின் அத்தியாவசிய தேவையாக இணையதள இணைப்பு ஆகிவிட்ட நிலையில் அதை வைத்து லாபத்துக்கும் மேல் கொள்ளை லாபம் அடிக்க சில தொலைதொடர்பு நிறுவனங்கள் முடிவு செய்தன. அந்த அடிப்படையில் இந்தியாவில் முதலில் ஏர்டெல் நிறுவனம் இணையதளத்திற்கு என்று ஒரே கட்டணமாக அல்லாமல் வாட்ஸப்,
ஸ்கைப், யுடியூப் போன்ற பயன்பாட்டுகளுக்கு தனித்தையே கட்டணம் வசூலிக்கும் திட்டம் ஒன்றை நடைமுறை படுத்த முயன்றது. இதற்கு மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பவே தனது முயற்சியை கைவிட்டது. அதே போன்றதொரு முயற்சியை ஃபேஸ்புக்கும் Free Basics என்கிற பெயரில் ஒரு திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது. அதற்கும் எதிர்ப்பு கிளம்ப தனக்கு வரவேற்ப்பை அதிகரிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய முறைகளை பயன்படுத்தியதாக ஃபேஸ்புக் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
செய்தித்தாள்களில் முழுப்பக்க விளம்பரங்களில் ஆரம்பித்து பொதுவாக இந்தியர்களுக்கே உரிய பலவீனத்தையும் தனக்கு சாதகாமாக பயன் படுத்திகொண்டது ஃபேஸ்புக். ஏர்டெல் நிறுவனத்தின் திட்டத்தை முறியடிக்க மக்கள் மத்தியில் ஃபேஸ்புக் வழியாக பெருமளவு பிரச்சாரங்கள் செய்யப்பட்டது. அதையே தனக்கு சாதகமாக்கிக் கொண்டது ஃபேஸ்புக். தனது Free Basics திட்டத்தை ஏதோ மக்களின் அடிப்படை உரிமை போன்றும் அதனை TRAI பறிக்கப் பார்க்கிறது என்பது போன்றும் ஒரு மாயையை ஏற்படுத்தி தனது பயனாளர்களிடம் ஆதரவு கேட்டது ஃபேஸ்புக்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு லைக்குகள் மூலமாகவும் ஷேர்கள் மூலமாகவும் பிராத்தித்து பழகிய சமுதாயம் இதனை என்ன வென்று தெரியாமல் ஆதரித்தனர். பல விபரமானவர்கள் கூட இதனை ஆதரித்துவிட்டு பின்னர் விஷயமறிந்து மனம் வருத்தினர்.
மீண்டும் பல தரப்பில் இருந்தும் ஃபேஸ்புக்கின் இத்தகைய நடவடிக்கைகளை குறித்து விவரிக்கப்பட்டு அதற்கு எதிராக இணையதள சுதந்திரத்தை காக்க TRAI அமைப்பிற்கு மின்னஞ்சல் அனுப்ப செய்தனர் சமூக ஆர்வலர்கள். தற்பொழுது இதற்கு ஒரு முற்றுபுள்ளியாக ஃபேஸ்புக் மற்றும் இதர அமைப்புகளின் இணையதள சுதந்திரத்தை கெடுக்கும் எந்த ஒரு திட்டத்திற்கும் தடை வித்தித்துள்ளது TRAI.
அதாவது TRAI இன் உத்தரவு படி இனி இணையதள பயன்பாட்டிற்கு மட்டும் தான் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் எனவும், அவை பயன்படுத்தப்படும் முறைக்கு (வாட்ஸப், ஃபேஸ்புக், யுடியூப், ஸ்கைப்) அல்ல என்று TRAI உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு 50,000 ரூபாய் முதல் 50,00,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவிற்கு மாறாக செயல்படுத்தபடும் எந்த திட்டமும் இன்னும் 6 மாதங்களில் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக