Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 1 பிப்ரவரி, 2016

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் கோரிக்கை...


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் முகமது யூசுப் உள்ளிட்டோர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்

முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் ஷிர்க் ஒழிப்பு (மூடநம்பிக்கை எதிர்ப்பு) மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது. மாநிலப் பொதுச் செயலாளர் முகமது யூசுப் தலைமை வகித்தார். நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், மாநில உயர்நிலைக் குழுத் தலைவர் சம்சுல் லுஹா, செயலாளர்கள் அப்துல்
ரகுமான், தொண்டி சிராஜுதீன், தலைவர் அல்தாபி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பேசினர். இதில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மாநில துணைப் பொதுச் செயலாளர் தவ்பீக் தீர்மானங்களை வாசித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் முஸ்லிம்களுக்கு 6.1 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதாக நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை உடனடி யாக அமல்படுத்த வேண்டும். சச்சார் மற்றும் ரங்கநாத் மிஸ்ரா ஆணையங்களின் பரிந்துரைப்படி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வர வேண்டும். நாடு முழுவதும் புதிதாக மத்திய பல் கலைக்கழகங்களை சிறுபான்மை யினருக்காக ஏற்படுத்த வேண்டும். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களின் சிறுபான்மை அந்தஸ்தை ரத்து செய் யும் முடிவைக் கைவிட வேண்டும்.
தீபாவளி, பொங்கல் பண்டிகைக ளின்போது பொதுமக்களுக்கு அரசு சலுகைகள் வழங்குவதுபோல, முஸ்லிம் பண்டிகைகளின்போதும் சலுகைகளை வழங்க வேண்டும். 12 ஆண்டுகளுக்கு மேலாக சிறை களில் அடைக்கப்பட்டுள்ள கைதி களை விடுதலை செய்ய வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தேர் தலின்போது அளித்த வாக்குறுதி களை, வரும் தேர்தலுக்குள் நிறை வேற்ற தமிழக முதல்வர் ஜெய லலிதா முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தித் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், மூட நம்பிக்கைகளுக்கு எதிராக பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மூடநம்பிக்கைகளை விளக் கும் வகையில் மாநாட்டுத் திடலில் கண்காட்சியும் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் முகமது யூசுப் உள்ளிட்டோர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு சார்பில் திருச்சியில் நேற்று நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் நிறுவனர் ஜெய்னுல் ஆபிதீன், பொதுச் செயலாளர் முகமது யூசுப் உள்ளிட்டோர். படங்கள்: ஜி.ஞானவேல் முருகன்

நன்றி தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக