இனி பேரூராட்சி அதிகாரம் செயல் அலுவருக்கே
ஆத்திரம் அதிகமாகும்போது
அறிவு மழுங்கி விடுவது இயற்கை. இதற்கு உதாரணமாக பணை மரத்தில் பரவசமாகக் பறந்து திறிந்த பச்சகிளி பாம்பு பொந்துக்குள் விழுந்தது
போல , அது என்னதான் பாசாங்கு காட்டினாலும் , படமெடுக்கும் பாம்பிடம் பாசத்தை எதிர்பார்க்க
முடியாது என்பதுதான் எதார்த்தமான உண்மை. இந்த நிகழ்வு போலதான் இன்று நமதூர் பேரூராச்சியின்
( அரசியல் ) நிலவரமும்.
பேரூராட்சி தலைவராக
கடந்த நான்கு ஆண்டுகளாக அழகு பார்த்த இந்த கவுன்சிலர்கள் , தற்போது கடந்த மூன்று மாதமாக
பேரூராட்ச்சி தலைவருக்கு எதிரான நடந்த சம்பவத்தை
வார்டு உருப்பினர்களின் அனுகுமுறை மூலம் தெளிவுபடுகிறது.
இல்லையெனில் ,
மேற்கு ஜமாத்தின் ஆதரவோடு வெற்றி பெற்ற தலைவரை இந்த கவுன்சிலர்கள் குறிப்பாக மேற்கு
பகுதியில் உள்ள கவுன்சிலர்கள் மேற்கு ஜமாத்திற்கு உள்ள செல்வாக்கை புறம் தள்ளி விட்டு
இத்தகைய சூழ்ச்சியும் , துரோகமும் செய்யத் துணிவார்களா ?
அப்படியே , இவர்கள்
கூறும் குற்றச்சாட்டுள் உண்மை ஏனெனில் இதை ஏன் ஆரம்பத்திலேயே செய்ய வில்லை. இப்போது
செய்தால் மட்டும் தீர்ந்துவிடக்கூடிய காரியமா பேரூராட்சியின் நிலை !
இப்படி பட்ட பல
என்னங்களும் மனக்குமுறல்களும் நமதூர் மக்களின் செவிக்கெட்டாத சிந்தனையாக உள்ளன.
குறிப்பாக பாமர
மக்களின் தற்போதைய நிலைதான், இன்று இருதலை
கொள்ளி எரும்பு போல உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக