Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 3

"என் மக்களே! நீங்கள் எதன் பக்கம் ஒப்புக்கொள்கின்றீர்கள் என்று தெரிந்துதான் ஒப்புக்கொள்கிறீர்களா? இவர் அல்லாஹ்வுடைய தூதர். இவர்களை அழைத்து சென்றால். ஒட்டுமொத்த உலகத்தையும் நீங்க எதிர்க்க வேண்டி வரும். கருப்பர் வெள்ளையர் என்றில்லாமல் அனைவரையும் எங்களை துண்டாட தயாரா என்று நீங்கள் அழைப்பது போன்ற காரியத்தை கையில் எடுக்கின்றீர்கள்.”

”விளைவு என்னவாகும் தெரியுமா? உங்களில் பலர் கொல்லப்படலாம். உங்கள் குடும்பங்கள், வீடுகள் சூரையாடப்படலாம். இதெல்லாம் தெரிந்துதான் செய்கின்றீர்களா?”
செய்யும் காரியத்தில் கவனத்தை மெருகேற்றும் இளைஞர். சமூகத்தை பற்றி கவலையில்லாமல் அலைந்து திரிபவர்கள் போன்று அல்ல. கருத்து வேறுபாடுகளில் சமூகத்திற்குள் அடித்து கொண்டு திரியும் அநிநியாயக்காரர் அல்ல.
“ஆம், அனைத்தையும் தெரிந்துதான் ஒப்புக்கொள்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதருக்காக நாங்கள் எதை இழந்தாலும் அது எங்களிடத்தில் மிச்சப்பட்டதைவிட சிறப்பானது; இதில் ஒருபோதும் பின்வாங்கமாட்டோம்”
 
”ஓகே, அல்லாஹ்வுடைய தூதரே! இதெல்லாம் செய்தால் எங்களுக்கு என்ன கிடைக்கும்?” – மதினாவாசிகளின் குரல்.

எதார்த்தமானவர்கள் அவர்கள், உள்ளொன்றும் வெளியொன்றும் என பேசத்தெரியாதவர்கள்.
 பளிச்சென்று கேள்வி.
 அருமையான பதில்…
 “சுவனம்..,
இவையெல்லாம் நீங்கள் நிறைவேற்றினால். அல்லாஹ் சுவனத்தை உங்களுக்கு தருவான்” – பெருமானாரின் நச்சென்ற வார்த்தைகள்.
பெருமானார் கருணையாளர், மக்களுடைய சுமைகளை இறக்கி வைக்க வந்தவர். மனிதன் சிலைக்கு, ஆட்சியாளனுக்கு, உலகத்திற்கு, பெண்ணிற்கு, மன இச்சைக்கு அடிமை ஆவதிலிருந்து விடுதலை பெற அனுப்பப்பட்டவர். இறைவனுக்காக எழுந்து நிற்கும் நல்ல உள்ளத்திற்கு ஆக வெகுமதியான பரிசிற்கு பொறுப்பேற்பதில் என்ன ஆச்சரியம் இருக்க போகின்றது.
 மதினாவாசிகள் உற்சாகத்தோடு எழுந்தார்கள்,
”ஆஹா..! இதைவிட வேறு என்ன சிறப்பான வியாபாரம் பூமிக்கு மேலே இருக்க முடியும்? இதோ ஒப்பந்தம் (பைஆ) செய்கின்றோம்.”
ஒவ்வொருவரும் அண்ணலாரின் கையைபிடித்து உறுதி செய்தனர். புதிய உலக அத்தியாயத்திற்கு அடித்தளமிட்டனர்.
மதீனாவாசிகளோடு முடிந்து விடுவதில்லை. சுவனத்திற்காக ஒப்பந்தம் செய்ய எல்லா காலகட்டத்திலும் பெருமானாரின் கரங்கள் நீண்டு இருக்கின்றன. நம் கரங்கள் முன் வருமா? அதுதான் கேள்வி.
--

(முற்றும்)
தகவல்,
Gulam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக