Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

அகபா - இஸ்லாத்தின் ஏறுமுகம் - பகுதி 2

மதினாவாசிகளில் கஅப் (ரலி) பெசுகின்றார்.
செய்வோமா வேண்டாமா? என்னமாதிரி கஷ்டம் வரும். இப்படியெல்லாம் சிந்திக்க தெரியாதவர்கள் அங்கு வந்திருந்த மதினாவாசிகள். "சத்தியத்தை ஏற்றுக் கொண்டோம் அதற்காக எதையும் இழப்போம் அவ்வளவுதான்" என்ற  மன நிலை.
 ”அல்லாஹ்வுடைய தூதரே! எங்களிடத்தில் என்ன ஒப்பந்தம் எதிர்பார்க்குறீங்க?”

அண்ணலார் மதீனா வரவேண்டும் என்பதில் உறுதி. அதற்கு தேவையான அனைத்தும் செய்வோம் என்பதில் தெளிவு. பேசிய வார்த்தை அதை காட்டுகின்றது.
 அண்ணலார் (ஸல்):
”மதீனாவாசிகளே....!
நீங்கள் இன்பத்திலும் துன்பத்திலும்  எனக்கு செவிசாய்த்து, கட்டுப்படனும்.

வசதியிலும் வசதியின்மையிலும் செலவு செய்யனும்,
நன்மையை ஏவி தீமைகளைத்  தடுக்கணும்,
அல்லாஹ்வுக்காக நீங்கள் தியாகம் செய்யத் தயாராகணும்,
அல்லாஹ்வுடைய விஷயத்தில் யாராவது உங்களை பழித்தால் அந்த வார்த்தைகள் உங்களை பாதிக்க கூடாது,
ஆட்சி, அதிகார விஷயத்தில் சண்டையிடக் கூடாது,
நான் உங்களிடம் வந்து விட்டால் நீங்கள் எனக்கு உதவி செய்ய வேண்டும்; உங்களையும் உங்க குடும்பத்தினரையும் பாதுகாப்பது போல் என்னைப் பாதுகாக்க வேண்டும் ”
தூதரை மதிக்காத, அவர்களை பற்றி கவலைப்படாத வேதம் கொடுக்கப்பட்ட சமூகம் எப்படி போனது என்பதற்கு வரலாறு சாட்சியாக நிற்கின்றது. அதுபோன்று இந்த உம்மத் இருக்க கூடாது என்பது பெருமானாருடைய ஆவல். அப்புறம், இஸ்லாமென்றால், வணக்க வழிபாடுகளில், முஸ்லிம் சமூக கருத்து வேறுபாடுகளில், மஹல்லா…ஊர் பிரச்சினைகளில் காலம் தள்ளும் என் போன்ற மக்களுக்கு மேலே அண்ணலார் சொன்ன வார்த்தைகள் எந்தளவுக்கு புரிந்ததுன்னு தெரியல.
சத்தியத்திற்காக தியாகம், இழப்பு, செலவழித்தல் இவைதான் இஸ்லாத்தின் வாய்ப்பாடு. அசத்தியத்தின் வீழ்ச்சியை கண்ணெதிரே பார்க்கத்துடிக்கும் மனிதர்களை உருவாக்கத்தான் இஸ்லாம் விரும்புகின்றது.
அசத்தியமென்றால்.. 
சிலை வணக்கத்தை கட்டி காக்கின்றார்களே அது அசத்தியம். நபிகளாருக்கெதிராக விஷமமும் அவதூறும் செய்கின்றார்களே அது அசத்தியம். குர்ஆனின் ஓர் கருத்தும் மக்களிடத்தில் சென்று விடாமல் உலக மீடியாக்களை தன் பாதையில் செலுத்துகின்றார்களே அது அசத்தியம். உலக பொருளாதாரத்தை வட்டியின் கீழ் கொண்டு வந்து பலகீனர்களை கொடுமைக்கு உள்ளாக்கின்றார்களே அது அசத்தியம். தீவிரவாததிற்கு எதிராக என்னும் பெயரால் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் அழிக்கின்றார்களே அது அசத்தியம். இப்படி எத்தனையோ…

”அல்லாஹ்வின் தூதரே! ஒப்புக்கொள்கின்றோம்” – கஅப் அவர்களின் வார்த்தை மதின சமூக பொறுப்பாளராக.
இடைமறித்தார் ஓர் மதினத்து இளைஞர், சமூக அக்கறையும் பொறுப்புணர்வும் கொண்ட இளைஞர்.
--

பகுதி-3 (தொடரும்)
இன்ஷா அல்லாஹ்...
தகவல்
Gulam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக