யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!
வயதுக்கு வந்து பல வருடங்கள் கழிந்து விட்டது கனவுகளை மட்டும் மனதில் சுமந்து கணவன் என்ற உறவுக்காக ஏங்காத நாளில்லை. என்னோடு படித்த தோழிகலெல்லாம் தன் குழந்தைகளுடன் வீதியால் வரும் போது வெட்கத்தில் வீட்டுக்குள் ஓடி ஒழிந்து கொள்ளும் என் நிலையை பார்த்து கதறி அழும் என் தாயின் கண்ணீரை துடைக்க முடியவில்லையே !
பக்கத்து வீட்டு பெண் வந்து உனக்கொரு வாழ்க்கை இன்னும் கிடைக்க வில்லையே என்று முகத்தை பார்த்து பரிதாப படும் போதெல்லாம் என் நிலையை பார்த்து உன்னிடம் தான் கை ஏந்துகின்றேன்.
யாஅல்லாஹ் என் நிலையை போல் இன்னொரு பெண்ணுக்கும் இந்நிலையை கொடுத்து விடாதே என
ஆண்களை விட பலகீனத்தை கொண்டு படைக்க பட்ட பெண்ணிடம் வீடும் ,பணமும் கேட்டால் எங்கே செல்வோம் யா அல்லாஹ்.
உன்னுடைய சகல கட்டளையையும் பின்பற்ற முடிந்த எங்களுக்கு திருமணம் என்ற கட்டளையை மட்டும் பின்பற்ற முடியாமல் போய் விடுமோ !என்ற அச்சம் எங்களின் உள்ளத்தை வாட்டுகின்றது.
யா அல்லாஹ் என்னை பெண் பார்க்க வந்த எல்லோருக்கும் என் அழகு ,அடக்கம் ,பணிவு ,வெட்கம் இறையச்சம்,நேர்மை பிடிக்க வில்லையே மாறாக ஒரு வீடும் பணமும் இருந்தால் போதுமே இப்போதே உன்னை மருமகளாக்கி கொள்வேன் என்று சொல்லி சென்ற எத்தனை மாமி ,மதினிமார்களை பார்த்து விட்டேனே இவ்வுலகில். இதை விட ஒரு சோதனை இனிமேலும் எனக்கு உண்டா ?
யா அல்லாஹ் ஆண்களை விலை கொடுத்து வாங்க முடியாத நிலையிலும் விலை பேச கூடிய மண்ணிலும் எங்களை படைத்து சோதனையாக ஆக்கி விட்டாயே !
என் ரப்பே ! உன்னுடைய கட்டளையை நிராகரித்து விட்டு, வீடு வாங்கி திருமணம் செய்யும் ஆண்களும் சொர்க்கம் செல்வார்கள் என்றிருந்தால் என்னை போல் வாழ்நாளில் வீடு இல்லை என்ற ஒரு காரணத்திற்காக திருமணமே செய்ய முடியாமல் முதிர் கன்னிகளாக காலம் கழித்த பெண்களுக்கு என்ன நியாயம் உள்ளது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக