Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 2 மார்ச், 2016

லெப்பைக்குடிகாடு அன்னை ஆயிஷா கலை அறிவியல் மகளிர் கல்லூரி திறப்பு விழா சிறப்பாக நடைப்பெற்றது !


பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அன்னை ஆயிஷா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா. பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தில் புதியதாக கட்டப்பட்டுள்ள அன்னை ஆயிஷா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் திறப்பு விழா 28.02.2016 (ஞாயிறு) அன்று நடைபெற்றது. விழாவிற்கு, அப்துல் சுபஹான் அவர்கள் தலைமை வகித்தார்கள். சம்சுதீன் அவர்கள் வரவேப்புரை வழங்கினார். திரு. முஹம்மது இஸ்மாயில், சுல்தான் மொய்தீன், ரவிச்சந்திரன் ஆகியோர் மின்னிலை வகித்தனர். திரு. அப்துல் சமது அவர்கள் கல்லூரியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இஸ்லாமியப் பாடத்தையும் உலகியல் பாடத்தையும் ஒருசேர கற்ற ஆயிரக்கணக்கான பெண் கல்வியாளர்களை தமிழக முஸ்லிம் உம்மத்தில் உருவாக்க வேண்டும் என்ற இலக்கோடு உருவாக்கப்பட்டுள்ள இரண்டாவது பெண்கள் கல்லூரி 28/02/2016   துவக்க விழா நடைபெற்றது

































1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலை க்கும்.
    நமதூர் மக்கள் ஒன்றிணை ந்து நமது பகுதி பெண்களுக்காக உருவாக்கியுள்ள கல்லூரியின் துவக்க விழா செ ய்தி வெ ளியிட்டதற்கு எங்கள் மனமார்ந்த நன்றி.
    அப்துல் சுபஹான்.
    தலவைர்
    LBK சங்கம்.

    பதிலளிநீக்கு