Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 10 மார்ச், 2016

உரக்கச் சொல்லாதீர்.....

உரக்கச் சொல்லாதீர்.....
பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது....!

9000 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்டு உலகம் முழுவதும் உல்லாச பயணம் வருகிறார் கார்பரேட் ஃபிராடு விஜய்ய மல்லையா.

2 இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீத தொகைக்கு அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல் பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து 
முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது வங்கி நிர்வாகம்........

பாப்பாநாடு விவசாயி...... பாலன் தனியார் நிதி நிறுவனத்தில் ( கந்து வட்டிக் கடை) வாங்கிய டிராக்டருக்கு 80% கடனை
வட்டியுடன் செலுத்தி மீத தொகைக்கு சற்று அவகாசம் கேட்டதால் வட்டிக்கடை குண்டர்களுடன் காவல் துறையும் சேர்ந்து அடித்து உதைத்துளனர்......
நமது கண்முன் நடக்கும் அநீதி
அனைத்து அடிமைத்தனங்களிலிருந்தும் மனித குலத்தை மீட்க வந்த நீதியாளர் முகம்மது (ஸல் ) அவர்களை பின்பற்றும் முஸ்லிம்களா நாம்.....?
உரக்கச் சொல்லாதீர்.....
பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக