தன்னுடன் யாரும் விளையாட முன்வராத நிலையில் சல்மான் என்னும் சிறுவன் ஆப்பிள் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.இவன் அழுகை குரலை கேட்ட அந்த ஆப்பிள் மரம் சிறுவனிடம் “ஏன்பா தம்பி அழுகுர ?” என்று கேட்டது.
அதற்கு அந்த சிறுவன் சல்மான்”என்னோடு யாரும் விளையாட வர மாட்டேங்குறாங்க,தனியா விளையாட என்னட்ட விளையாட்டு பொருளும் இல்ல” என்று சோகத்தோடு கூறினான்.
இதனை கேட்ட ஆப்பிள் மரம் “என்ட உள்ள ஆப்பிலை எடுத்து வித்து அதுல விளையாட்டு பொருள வங்கிக்கோ அப்புறம் என்னோடு விளையாட வா“என்று கூறியது.
மகிழ்ச்சியாக ஆப்பிளை எடுத்து கொண்டு “திரும்பி வர்றேன்னு சொல்லிட்டு” சிறுவன் சென்றுவிட்டான்.
சில ஆண்டுகளுக்கு பிறகு அதே ஆப்பிள் மரத்தின் கீழ் சோகத்தோடு அமர்ந்தான் அந்த சிறுவன்.
அந்த சிறுவனை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த அந்த மரம் மிகவும் மகிழ்ச்சியோடு “வா தம்பி என்னோடு விளையாட வர்றியானு” கேட்டது.
அதற்கு அந்த பையன்”எனக்கு குடும்பம் இருக்குது அவங்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய என்னால முடியல “ என்று கூறினான்.
இதனை கேட்ட மரம் “என்னிடம் உள்ள மர கிளைகளை வேட்டி அதை வித்து பணம் சேத்துக்கோ,இப்பயாவது என்னோடு விளையாடுவியா ” என்றாது.
மீண்டும் மகிழ்ச்சியோடு “கண்டிப்பா வருவேன்” என்று கூறி சென்றான்.
சில ஆண்டுகள் அந்த இளைஞன் அங்கு வரவில்லை.
திடீர் என்று அந்த இளைஞன் வயது முதிர்ந்து வயோதியனாக அந்த மரத்திடம் வந்தான்.
பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த நபரை பார்த்தவுடன் மரம் அலாதியான சந்தோஷத்தில் மூழ்கியது.
இளமை காலத்தில் உன்னுடன் விளையாட ஆசை இருந்தது ஆனால் நேரம் கிடைக்கவில்லை வயது முதிர்ந்த காலத்தில் இப்போது என்னால் உன்னுடன் விளையாட முடியவில்லை என்று கூறினார் அதன் முதியவர்.
என்னாலும் உங்களுக்கு எதுவும் கொடுக்க ஒன்றும் இல்லை என்று கவலையோடு கூறியது,ஆனால் என்னுடைய அடைந்த வேர்கள் மட்டும்தான் இருக்கிறது அதில சற்று சாய்ந்து ஓய்வெடுத்து கொள்ள” என்றது மரம்.
தன்னால் இந்த மரத்திற்கு எந்தவொரு பயன் இல்லாதபோதும் இந்த மரம் தமக்கு இந்த நிலையிலும் உதவி செய்கிறது என்பதை உணர்ந்த முதியவர் கணினிரோட்டு அந்த மரத்தின் அடியில் அமர்ந்து பழைய நினைவுகளை எண்ணி நாட்களை கழித்தார்.
இக்கதையில் வரும் மரம் பெற்றோராகவும்,அந்த நபர் பிள்ளையாகவும் ஒப்பிடு செய்து பார்க்கவும்.என்னாதான் பெற்ற பிள்ளைகள் ஒதுக்கினாலும் அவர்களுக்காக வாழும் ஒரே உறவு பெற்றோராக தான் இருக்கும்.
--ஆரூர்.யூசுப்தீன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக