பத்திரிகையாளர்: நீங்கள் இப்னாவிற்கு மீண்டும் சென்றீர்களா?
ரந்திஸி: ஆம்! நான் மீண்டும் இப்னாவிற்கு சென்றிருந்தேன். அங்கே என் வீடுகளை பார்த்தேன், எனது வீட்டில் ஒரு வலது சாரி யூத குடும்பம் வசித்துக்கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளர்: அது உங்கள் மனநிலையை எவ்வாறு பாதித்தது?
ரந்திஸி: அது என்னை கடுமையாக பாதித்தது. அங்கே சென்றபோது எனக்கு என்னுடைய கிராமத்தின் எழில் மிகிந்த அழகுத்தோற்றம் என் நினைவுக்கு வந்தது. நான் சிறுவனாக இருந்த போது என்னை எனது பெற்றோர்கள் தங்களுடைய
இருகைகளில் ஏந்தியவாறு எங்கள் கிராமத்தை விட்டும் வெளியேறிய அந்த நாளும் என் நினைவில் வந்து ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு நிர்கதியான சூழ்நிலையில் அன்று எனது குடும்பம் இருந்தது.
ஆம்! இன்றும் ஃபலஸ்தீனியர்கள் ஆயுத முனையில் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள். சோதனைச்சாவடிகளில் ஒவ்வொரு ஃபலஸ்தீனருடைய தாயோ, சகோதரியோ அவமதிக்கப்படுகிறார்கள். தன் கண் முன்னால் தனது தந்தையோ அல்லது சகோதரனோ தாக்கப்படும்போது அவர்கள் நிர்கதியான மனோ நிலையை எட்டுவதில்லை. தங்களுக்கு எதிராக நடத்தப்படும் எல்லா கொடுமைகளுக்கும் ஹமாஸ் இயக்கம் தகுந்த பதிலடிகொடுக்கும் என்று அனைவரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு சமயம் ஏற்படும்போது தாமும் ஹமாஸுடன் சேர்ந்துகொண்டு தங்களுக்கு தீங்கிழைத்தவர்களுக்கு தகுந்த பாடத்தை கற்பிப்போம் என்ற இந்த எண்ணத்தை ஃபலஸ்தீன் மக்களிடத்தில் உருவாக்கி ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக எந்த சமரசத்திற்கும் இடம் தராமல் ஒரு முழு நீள யுத்தத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு அப்துல் அஜீஸ் அல் ரந்திஸிக்கு இருந்தது.
அப்துல் அஜீஸ் ரந்திஸி ஜப்பாவிற்கும் அஸ்கலானிற்கும் இடையில் அமைந்திருக்கும் யிபுனா என்ற எழில் மிகுந்த சிற்றூரில் 1947ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தார். 1948ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தத்தின் போது சுமார் இரண்டு லட்சட்திற்கும் அதிகமான ஃபலஸ்தீனியர்களுடன் அன்றைய எகிப்தின் ஆளுகைக்கு கீழிருந்த காசாவின் கான் யூனுஸ் அகதிகள் முகாமிற்கு ரந்திஸியின் குடும்பமும் இடம் பெயர்ந்தது. அங்கே இவர்கள் குடுயிருந்த முகாமிற்கு அருகில் தான் முஹம்மது தெஹ்லானின் வீடும் இருந்தது.
8 சகோதரர்கள் 2 சகோதரிகள் என இவரது பெரிய குடும்பம் அந்த அகதிகள் முகாமில் மிகுந்த சிரமத்துடனே காலத்தை கழித்தது. குடும்பத்தின் வறுமை நிலையை போக்க தனது 6 வயதிலேயே தந்தைக்கு உதவியாய் வருமானம் ஈட்ட வேலைக்கு செல்லும் நிலை ரந்திஸி அவர்களுக்கு ஏற்பட்டது. 1956ஆம் ஆண்டு இஸ்ரேலிய படையினர் கான்யூனிஸ் அகதிமுகாமிலும் தாக்குதலை நடத்தினர். இதில் ரந்திஸியின் மாமா மரணிக்க அது தன்னை மிகவும் பாதித்த நிகழ்வுகளில் ஒன்று என ரந்தஸியே பின்னாளில் கூறுகிறார்.
தனது சிறுவயதிலேயே அகதிகள் முகாமில் காலத்தை கழிக்கும் நிலமை, குடும்பத்திலும் கடுமையான வறுமை நிலை என்றிருந்த போதிலும் ஐநா மன்றத்தால் கான்யூனஸ் முகாமில் நடத்தப்பட்ட பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட அங்கே மிகவும் கவனமாக உலக கல்வியையும் மார்க்க கல்வியையும் படித்த ரந்திஸி வகுப்பில் முதல் மாணவனாகவும், சிறு வயதிலேயே குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவராகவும் வளர்க்கப்பட்டார். இப்பேற்பட்ட சூழ்நிலையிலேயே பள்ளிப்படிப்பை முடித்த ரந்திஸி அன்றைய எகிப்திய அரசால் கான்யூனஸ் அகதி முகாமில் இருக்கும் மாணவர்களின் மேற்படிப்பிற்காக வழங்கப்பட்ட உதவித்தொகையை கொண்டு அலக்ஸாண்டிரியா பல்கலைகழகத்தில் மருத்துவ படிப்பில் சேர்ந்தார். அன்றைய காலத்தில் அரசியலிலோ, போராட்டத்திலோ அதிக ஆர்வம் காட்டாதவராகவே இருந்த ரந்திஸி மருத்துவர் ஆவதிலேயே கவனம் செலுத்தினார்.
தனது கல்லூரி காலத்தில் போராட்ட அரசியலில் எவ்வித பெரிய நாட்டமும் இல்லாமல் இருந்த ரந்திஸிக்கு தனது சிறுவயதில் கான்யூனிஸ் அகதிகள் முகாமில் இருந்த மஸ்ஜிதில் இமாமாக இருந்த ஷேக் முஹம்மது ஈட் அவர்களை பல நாள் கழித்து அலெக்ஸாண்டிரியாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க, அந்நிய ஊரில் தனது சிறுவயது ஆசிரியரை கண்ட மகிழ்ச்சியும், அந்த ஆசிரியருடன் தொடர்ந்து நடந்த சந்திப்புகள் ஒரு நீண்ட நெடிய தொடர்ச்சியை நோக்கி ரந்திஸியை இட்டுச்சென்றது.
தொடரும்…
அப்பாஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக