Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

நமதூர் தாருஸ்ஸலாம் பொது அறிவிப்பு ...



அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொது அறிவிப்பு  +2 தேர்வுகள் முடித்து வீட்டில் விடுமுறையில் இருக்கும் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும்  தாங்கள் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக் கொள்ளவும் குர்ஆனை தங்கு தடையின்றி அழகாக ஓதவும் இந்த விடுமுறை நாளை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளியில் ஆண்களுக்கும் பெண்கள் சிறார்கள் மதரஸாவில் பெண்களுக்கும் காலை 7 மணி முதல் 8 மணி  மார்க்கக் கல்வியும்  அழகான முறையில் குர்ஆனை ஓதவும் கற்றுத் தரப்படுகிறது.

🏿இந்த விடுமுறை நாளை  மறுமையில் நமக்காக பரிந்துரை செய்யக்கூடிய குர்ஆனை நல்ல முறையில் நாமும் கற்றுக்கொண்டு கற்றுக் கொண்ட நற்செய்திகளை பிறருக்கு எடுத்துரைக்கவும்  குர்ஆனை கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள அனைவரையும் 

அன்புடன் அழைக்கிறோம் By என்றென்றும் இறைப் பணியில் தாருஸ்ஸலாம் பள்ளி நிர்வாகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக