Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை


NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை

தேசிய புலனாய்வுத்துறையில் பணியாற்றி வந்த அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் தன்சில் அஹமதின் மனைவி படுகாயமுற்றுள்ளார். இந்த மொத்த நிகழ்வையும் அவரது இரண்டு குழந்தைகளும் காரின் பின் இருக்கையில் இருந்து பார்த்துள்ளனர். இவரது உடலில் 26 இடங்களில் குண்டு துளைத்துள்ளது.
தன்சிலின் மனைவி ஃபர்சானா விசாரணை அதிகாரிகளிடம் இது திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்ட தாக்குதல் என்று கூறியுள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எந்திர துப்பாக்கி மூலம் தங்களை நோக்கி சுட்டதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை அதிகாரி தெரிவிக்கையில் “அவர்கள் பதுங்கியிருந்து தாக்கிய விதம் மற்றும் அவர்கள் சுட்ட தோட்டாக்களின் எண்ணிக்கை இவை அனைத்தும் எக்காரணம் கொண்டும் தன்சில் உயிர் பிழைத்து விடக்கூடாது என்று தாக்கியதை உறுதி படுத்துகிறது” என்று கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான தன்சில் மொரதாபாத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டார் என்று அறிவித்துள்ளனர்.
தன்சில் அஹமத் குறித்து தேசிய புலனாய்வுத்துறையின் ஆய்வாளர் சஞ்சீவ் குமார் கூறுகையில், தன்சில் மிகவும் அற்பணிப்புள்ள மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரி என்று கூறியுள்ளார். அவர் எல்லை பாதுகாப்பு படையில் உதவி தளபதியாக பணியாற்றிவந்தவர். மேலும் பதான்கோட் தாக்குதல் தொடர்பான விசாரணையில் தன்சில் அஹமத் ஈடுபட்டு வந்தார் எனவும் இல்லை எனவும் இருவேறுபட்ட தகவல்கள் உலாவுகின்றது. பாகிஸ்தான் கூட்டு விசாரணை குழு இந்தியா வருகையின் போது தன்சில் அஹமத் தொடர்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவரின் கொலை குறித்து தேசிய பாதுகாப்பு படை, தீவிரவாத தடுப்பு படை மற்றும் உத்திர பிரதேச காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக