Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

நமதூரில் மகளிர் வாக்குச்சாவடிகளில் பெண்களை பூத் ஏஜென்டுகளாக நியமிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் க. நந்தகுமார்.



பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் 8 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. நந்தகுமார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள வாக்குச்சாவடிகளில் வேப்பந்தட்டை வட்டம், உடும்பியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி,குன்னம் தொகுதியில் மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஆலத்தூர் வட்டம்,மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நக்கம்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, காட்டியான் குடிகாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளிட்ட 8 வாக்குச்சாவடிகள் மாதிரி வாக்குச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வாக்குச் சாவடிகளில் நுழைவு வாயிலில் வாழை மரங்கள், மா இலைத் தோரணங்கள் கட்டி வாக்காளர்களை வரவேற்கும் விதமாக மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதேபோல,பெரம்பலூர் மற்றும் குன்னம் தொகுதிக்குள்பட்ட லப்பைக்குடிகாட்டில் அமைக்கப்பட்டுள்ள மகளிர் வாக்குச்சாவடிகளில் பெண்களை பூத் ஏஜென்டுகளாக நியமிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக