செவ்வாய், 10 ஜூலை, 2012
நம் உடலைப் பற்றிய உண்மைகள்
நம் உடலைப் பற்றிய உண்மைகள்
குழந்தை பிறக்கும்பொழுது அதன் உடலில் 300 எலும்புகள்
இருக்கும். ஆனால் வளர்ந்து பெரியவனானதும் மொத்தம் 206 எலும்புகளே
இருக்கும்.
நமது உடல் எடையில் 14% எலும்புகளால்
ஆனது.
நமது உடலில் உறுதியான
எலும்பு தொடை எலும்பு, அது கான்கீரிட்டை விட வலிமையானது.
நமது உடல் எடையில் 7% இரத்தம்
ஆகும். தினத்தோறும் 450 கேலன் இரத்தம் சிறுநீரகத்தால் சுத்தப்படுத்தப்படுகிறது.
பெண்களுக்கு சராசரியாக 4.5 லிட்டர்
இரத்தம், ஆண்களுக்கு சராசரியாக 5.6 லிட்டர் இரத்தம்
இருக்கும். நமது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள், அதுபோல்
ஒவ்வொறு நொடியில் சுமார் இரண்டு மில்லியன் இரத்த சிவப்பணுக்கள் நமது உடலில்
இறக்கின்றன.
நமது உடலில் உள்ள இரத்த
குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு
முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.
தூகனாங்குருவிகூடு
அஸ்ஸலாமு அழைக்கும்
ஒருகாலத்தில் நமதூரில்
தூகனாங்குருவியையும், அதன் கூட்டையும் அதிகம் பார்த்திருப்போம். அனால் இன்று அப்படிஎன்றால் என்ன என்று கேட்ககூடிய நிலை நம்மிடத்தில்.(இதற்கெல்லாம் காரணம் அலைபேசி
கோபுரங்கள்தான் காரணம் என்று விஞ்ஞானிகளின் கூற்று.)
நமதூர் ஏரிக்கரை ஓரம் அமைத்துள்ள பனைமரத்தில்
தூகனாங்குருவியையும் அதன் கூட்டையும் பார்க்கலாம்.
நமது நிருபர்
பாட்டில் தண்ணீர்
அஸ்ஸலாமு அழைக்கும்
ஒருகாலத்தில் நமதூர் கிணற்று தண்ணீர், ஆத்து (ஆற்று) தண்ணீர் போல் வேறு எங்கும் அதன் சுவையை பார்த்திருக்கமுடியாது.
ஆனால் இன்று குழாய் தண்ணீர் தூய்மை இல்லை என்று பாட்டில் தண்ணீர் வாங்க ஆரம்பித்துவிட்டனர்.
குழாய் தண்ணீர் காய்ச்சி வடிகட்டி குடித்தால் போதுமானது, அதன் ஊட்டச்சத்து (வைட்டமின், மினரல்) நமக்கு கிடைத்துவிடுகிறது. ஆனால்.
பாட்டில் தண்ணீர் கிருமிகளை நீக்குவதோடு மட்டும் இல்லாமல் ஊட்டச்சத்துகளும் (வைட்டமின், மினரல்களும்) நீக்கியே வருகிறது. தண்ணீரில் தான் முழு ஊதாச்சத்து இருக்கும் என்பது மருத்துவரின் குறிப்பாக உள்ளது.
தண்ணீர் இறைவனின் அருட்கொடை அதை வீண்விரயம் செய்யாமல் பாதுகாப்போம்.
வரும் தலைமுறைகளை வலிமையுள்ள தலைமுறைகளாக உருவாக்குவோம். இன்ஷா அல்லாஹ்
நமது நிருபர்
வணிகவளாகம்
மேற்கு வணிகவளாகம்
மேற்கு பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள மேற்கு பள்ளிவாசலுக்கு சொந்தமான வணிகவளாகம் முடியும் தருவாயில் உள்ளது.
இதில் கடைகளை வாடகைக்கு எடுக்க 200க்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. யார் யாருக்கு கிடைக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இதில் குறிப்பு என்னவென்றால் ஏற்கனவே பள்ளிவாசலுக்கு சொந்தமான கடை யார் வைத்திருந்தாலும் அவருக்கு இந்த இடம் கிடைக்காது.
நன்றி: நமதுநிருபர்
திங்கள், 9 ஜூலை, 2012
ஐக்கிய அரபு எமிரேட்டில் மாடர்ன் உடைகளுக்கு எதிர்ப்பு
ஐக்கிய அரபு எமிரேட்டில் வெளிநாட்டினர் மாடர்ன் உடைகள் அணிவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. வளைகுடா நாடான ஐக்கிய அரபு எமிரேட்டில் 80 லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இவர்களில் 10 சதவீதத்துக்கு மேல்தான் எமிரேட் குடிமக்கள். மற்றவர்கள் ஆசியா, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் உள்பட எந்த இடத்துக்கு சென்றாலும் வெளிநாட்டினர் அரை குறை ஆடையுடன் வலம் வருகின்றனர். இதற்கு உள்ளூர் மக்கள் டுவிட்டரில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மாவீரன் மருதநாயகம் (கமாண்டோ கான்)
மாவீரன் மருதநாயகம்
(கமாண்டோ கான்)
1724இல் இராமநாதபுரம்
பனையூரில் மருதநாயகம் பிள்ளையாகப் பிறந்து முகமது யூசுப் கானாக வளர்ந்து கமாண்டோ
கானாக உயர்ந்தவன். மதுரை மக்களால், “கமாந்தோ கான்’’ என அன்பாக
அழைக்கப்பட்டவன். இந்துவாகப் பிறந்து, கிறிஸ்துவர்களிடம்
கல்விப் பயின்று இஸ்லாமியனாக இறந்தவன். 40 வயதே வாழ்ந்தாலும்
நாடறிந்தவனாக மட்டுமல்ல இந்திய வரலாற்றில் சிறந்தப் போர் வீரனாக, இராணுவ
நிபுணனாக, தன்னை நிலைநிறுத்திக் கொண்டவன்
"கமாந்தோ கான்". இந்திய இராணுவ வரலாற்றில் ஹைதர் அலியும், முகமது
யூசுப் கானும் குறிப்பிடத்தக்கவர்கள். ஹைதர் அலி வேகத்திற்கு புகழ் பெற்றவர்
என்றால், முகமது யூசுப் கான் விவேகத்துடன் தாக்குதலில் சிறந்தவன்.
ஆற்காட்டு நவாபும், கிழக்கிந்திய கம்பெனியும் பாளையக்காரர்களை அடக்கிட யூசுப் கானை
முழமையாகப் பயன்படுத்திக் கொண்டனர்.
சரித்திர நாயகன் "காயிதே மில்லத்"
"காயிதே மில்லத்"..
"கண்ணியத்திற்குரிய
காயிதே மில்லத்" என்று போற்றப்படும் ஜனாப் காயிதே மில்லத் முகம்மது இஸ்மாயில்
சாகிப், இந்தியாவின் பெரும் முஸ்லிம் தலைவர்களுள் ஒருவர்.
திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் 5.6.1896-ல்
பிறந்தவர். காயிதேமில்லத் என்ற அரபி சொல்லுக்கு "மக்களின் வழிகாட்டி"
என்று பொருள்.
தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல்
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப்
போராட்டத்தில் ஈடுபட துவங்கினார்.
1936_ம் ஆண்டு
இஸ்மாயில் சாகிபு, முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். 1945_ம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு
முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார். 1948_ம் ஆண்டு
அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டார்.
"இந்தியா
தான் எங்கள் தாய் நாடு. இங்கிருந்து நாங்கள் போகமாட்டோம்' என்று அதிக
எண்ணிக்கையில் முஸ்லிம்கள் இங்கே தங்கிவிட்டதால், அவர்களுக்காக
கட்சி பெயரில் இருந்த "அகில' என்பதை நீக்கி விட்டு.. 1949-ல் 'இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீக் என்று மாற்றினார் காயிதேமில்லத். இதன் முதல் மாநாடே
சென்னையில் உள்ள ராஜாஜி ஹாலில் தான் நடந்தது.
1971 ல்
பாகிஸ்தான் இந்தியாவோடு போர் தொடுத்தபோது, "தனது ஒரே மகனை போர்க்களத்திற்கு அனுப்ப தயார்" எனக்கூறி
அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தார். நெய்வேலியில் எடுக்கப்படும் நிலக்கரியில்
மாநில அரசுக்கு உரிய பங்கு கோரி பெற்றுத் தந்தவர். இந்திய நாட்டு அரசின் தேசிய
மொழியாகும் தகுதி தமிழுக்கு மட்டுமே உண்டு என ஓங்கி முழங்கியவர்.
ஞாயிறு, 8 ஜூலை, 2012
சிரிப்பு – ஆரோக்கியத்தின் முதலீடு!
‘வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு ப்போகும்’- என்பது பழமொழி.
சிலருக்கு சிரிப்பு என்பது வாழ்க்கையின் முக்கிய பகுதியாக மாறும்பொழுது வேறு சிலருக்கோ சிரிப்பதற்கே நேரம் கிடைப்பதில்லை. ஆனால், சிரிப்பின் மகிமையை உணர்ந்தால் அறிமுகமில்லாத நபர்களைப் பார்த்தும் நாம் புன்னகைப்போம்.
சிரிப்பு வெறும் ஒரு முகபாவம் அல்ல. உடல் உறுப்புகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கான பல்வேறு என்ஸைம்களும், ஹார்மோன்களும் சிரிப்பின் மூலம் உற்பத்தியாகிறது.
சிரிப்பு மூளைக்கு அளிக்கும் செய்தியின் மூலமே இவை உற்பத்தியாகின்றன. உடலில் உள்ள செல்களை சிரிப்பு செயல்பட தூண்டுகின்றது. இதன் மூலம் இயற்கையிலேயே நமது உடலில் ஆண்டிபயாட்டிக்குகள் உற்பத்தியாகின்றன. இதன் மூலம் நமது நோய் எதிர்ப்பு சக்தி பலமடைந்து நோய்க் கிருமிகளை எதிர்க்கும் திறன் அதிகரிக்கிறது.
சிரிப்பின் மூலம் நாம் பெறும் பலன்கள்
கழிவுநீர் சாக்கடை

பாதாள சாக்கடைதான் கட்டித்தர மாடீங்க சாகடைய கூடவா சுத்தம் செய்ய மாடீங்க?

கிழக்கு பழைய பள்ளிவாசல் அருகே உள்ள கழிவுநீர் சாக்கடை சுத்தம் செய்யாமல் குப்பை கூடமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் உள்ளது. வந்தபிறகு முடிவு எடுப்பதைவிட வரும்முன்னே (தூய்மை) முடிவு எடுப்பார்கள சம்மந்தப்பட்ட கவுன்சிலர் (அ) துணை பிரசிடன்ட்.
நன்றி: நமது நிருபர்
சனி, 7 ஜூலை, 2012
ஒரு காலம் இருந்தது ...
ஒரு காலம் இருந்தது. அதில் ஊரை முன்னிருத்திதான் தலைவர்கள் வேலை செய்திறுந்தார்கள். அதில் காவல் துறையை சோ்ந்தவர்கள் கூட ஊர் உள்ளே வரவேண்டும் என்றால் மாட்டுப்பாலம் வந்து அங்கிருந்து ஜமாத் தலைவர் அனுமதி பெற்று தான் உள்ளே வருவார்கள். ஆனால் இன்று
அப்படியே தலைகீலாக மாறிவுள்ளது.இதற்கு யார் காரணம். ஜமாத்தார்களா அல்லது இன்று நாங்கள் தான் நபிவழியை பின்பற்றுகிறோம் என்று ஆலுக்கு ஆல் ஒரு பள்ளி வாசல் , மர்கஸ் என்று கட்டி இருப்பவர்களா? அல்லது சமுதாயத்தின் ஒற்றுமை என்று பேசி கொண்டு தங்களுக்குள்ளே அடித்து கொள்பவர்களா?
நமதூரில் பரபரப்பு

ஒரு காலத்தில் நமதூர் பெண்கள் ஊர் நிர்வாகத்திற்கும் ஜமாதிர்க்கும் கட்டுப்பட்டு தேவையில்லாமல் வெளியூர் செல்வதை கூட தவறு என்று நினைத்தார்கள். அப்படிதான் தங்கள் பிள்ளைகளும் வளரவேண்டும் என்பது நமதூர் மக்களின் ஆசையும் கூட.
அனால் ஒரு சிலர் செய்யும் தவறு நமது ஊர் அல்ல நமது சமுதாயத்தையே குறிக்கின்றன. இதற்கான காரணங்கள் தங்கள் அறிந்ததே.
- சினிமா மோகம் (அது போல வாழவேண்டும்).
- மற்றவர்களை போல மனோஇச்சையை பின்பற்றி அல்லாஹ்வை மறந்து வாழ்தல்.
- பெற்றோர்கள் கொடுக்கும் சுதந்திரம்.
- எதிரிகள் விரிக்கும் வலை.
- இன்றைய கலாச்சாரம் (கூட நட்பு)
- மரணத்தின் (நரகத்தின்) பயம் இல்லாமை. என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதற்க்கு முற்று புள்ளி வைக்ககூடிய பொறுப்பு முதலில் நிர்வாக தலைவருக்கே சார்ந்தது அது வீட்டின் தலைவராக இருந்தாலும் சரி ஊர் தலைவராக இருந்தாலும் சரி.
இன்றைய கால கட்டத்தில் நம்பிள்ளைகளை எச்சரிக்கையாக வளர்க்கவேண்டும் என்பது நம்மீது அல்லாஹ் விதித்த கடமை. இது இப்படி இருக்க இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் எதிரிகள் (கோழைகள்) சிந்தனை முழுவதும் இஸ்லாமிய பெண்களை சுற்றியே வருகிறது. அப்படிப்பட்ட சம்பவம் எடுத்துகாட்டாக காபிர்களோடு ஒரு இஸ்லாமிய பெண் ஒருத்தி உணவு அருந்திகொண்டு இருக்கிறாள், அவளிடம் கேட்டால் நான் முஸ்லிம் அல்ல என்று பதிலளிக்கும் நிலைதான் இன்று. அந்த காபிர்களிடம் கேட்டால் என்னுடைய Mobile எண் எப்படித்தான் அவளிடம் கிடைத்தது என்றே எனக்கு தெரியாது கடந்த 5 நாட்களாகதான் பழக்கம் அதனால் தான் இன்று சிறிய பார்டி வைத்தோம் நானும் என்னுடைய நண்பர்களும் ஒன்றாக உணவருந்தினோம் என்று கூறும் நிலை அவர்கள் மத்தியில் நிலவுகிறது.
இப்படிப்பட்ட சம்பவம் எந்த ஊரில் நடந்தாலும் சரி அது முஸ்லிம் மக்களைத்தான் குறிக்கிறது. ஆனால் இஸ்லாம் ஒருபோதும் இதற்க்கு வழிவிடாது என்பதுதான் அசைக்கமுடியாத உண்மை. இப்படிப்பட்ட சம்பவங்கள் களைந்தெறிய அந்தந்த ஊர் இஸ்லாமிய இயக்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது பாமர மக்களின் கேள்வியாக உள்ளது.
நன்றி: நமது நிருபர்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
ஜூலை 9ம் தேதி 2,50,000 லட்சம் கம்ப்யூட்டர்களை 'காவு' வாங்கப் போகும் வைரஸ்!
உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.
எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.
உலகம் பூராவும் இதே பேச்சாக இருக்கிறது. ஜூலை 9ம்தேதி திங்கள்கிழமையன்று உலகம் பூராவும் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் நடைபெறப் போவதாகவும், உலகம் முழுவதும் கிட்டத்தட்ட இரண்டரை லட்சம் கம்ப்யூட்டர்கள் காலியாகப் போவதாகவும் அந்த எச்சரிக்கைப் பேச்சு கூறுகிறது.
எந்த பிளாக்கைப் பார்த்தாலும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. அன்றைய தினம் கம்ப்யூட்டர்களின் பேரழிவு தினம் என்றும் பீதியைக் கிளப்புகிறார்கள்.
ஜமாலிநகர் மெயின் ரோடு
ஜமாலிநகர் மெயின் ரோடு


நமதூர் ஜமாலிநகர் முக்கிய சாலையான மெயின் ரோடு சிமெண்டு சாலை
போடப்பட்டு மிக குறிகிய காலத்திலேயே சாலை உடைசளும் விரிசலும் காணப்படுகிறது. இதனால்
அந்தவழியே செல்லகூடிய பள்ளிகுழந்தைகளுக்கும் பள்ளிவாசல் மற்றும் வீடுகளுக்கு
செல்லகூடிய பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் போக வர மிகவும் சிரமமாக உள்ளது.
இதைபார்த்த பொதுமக்கள் பலர் ஊர் பஞ்சாயத் துணை தலைவரிடம்
முறையிட்டும் அவர் அதை சரியான முறையில் பழுது பார்க்காமல் இருப்பது பொதுமக்களிடையே
மிகவும் அதிர்ப்தியை ஏற்படுதிள்ளது.
பொதுமக்களிடம்
அவர் கூறுகையில் சாலை போடப்பட்ட (contractor) ஒப்பந்ததாரர் காரனுடைய பணம் Rs:500000 நம்மிடையே இருக்கிறது. இதை அவர்கள் சரிபடுத்தி
விட்டால் மட்டுமே அந்த பணம் அவரிடம் கொடுக்கப்படும் என்றார்.
இதில்
ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த சாலையை முறையாக சரி செய்ய Rs 500000 மேல் ஆகும் என்பதுதான் நம்முடைய கருத்தாகவும் பொதுமக்களுடைய
கருத்தாகவும் உள்ளது.
இந்த நிலை பலவாரங்கள் கடந்தும், ஒப்பந்ததாரர் மூலம் இதை
சரிசெயவார்களா ? அல்லது அந்த பணத்தை கொண்டு இதை துணை தலைவர் சரி
செய்வாரா என்பது பொதுமக்களிடையே கேள்விக்குறியாக உள்ளது.
நன்றி: நமது நிருபர்.
வெள்ளி, 6 ஜூலை, 2012
வெறுப்புக்கு என்ன காரணம்?
அவர் கொஞ்ச தூரம் கடந்து சென்றவுடன் கூட்டத்திலிருந்த ஓர் ஆள் சொன்னார்: “அந்த மனிதரைக் கண்டால் எனக்கு வெறுப்பு தோன்றுகிறது.”
அங்கே கூடியிருந்தவர்கள் அவர் பேசியதை விரும்பவில்லை. “என்ன காரணம்?” என்று அவர்கள் எரிச்சலுடன் கேட்டனர். அவர்
வாய் மணக்க பேசலாம்...
இன்று நம்மில் பலரைப் படுத்தி எடுக்கும் பிரச்னைகளில் முக்கியமானது... வாய் துர்நாற்றம்!
யாரிடமும் சகஜமாகப் பேச முடியாது. யாருடனும் நெருங்கிப் பழக முடியாது. குற்ற உணர்வும் தாழ்வு மனப்பான்மையும் தலை தூக்கும். வெளிநாடுகளில், இந்தப் பிரச்னை விவாகரத்துவரைகூட போவது உண்டு. வாய் துர்நாற்றத்தைத் தவிர்த்து மணக்க மணக்கப் பேசுவது எப்படி என்பதுபற்றி இங்கே பேசுகிறார்கள் பிரபல மருத்துவர்கள்.
பல் மருத்துவர் யஷ்வந்த்: ''வாய் துர்நாற்றத்தை (Bad Breath ) 'ஹாலிடோஸிஸ்’
புதன், 4 ஜூலை, 2012
‘தெய்வீகத் துகளை(God particle)’ கண்டுபிடித்துவிட்டதாக ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் அறிவிப்பு!
ஜெனீவா:விஞ்ஞான உலகம் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பிரபஞ்சரகசியங்களின் முடிச்சுகளை அவிழ்க்கும் ‘தெய்வீக அணுத்துகளை(Godparticle)’ கண்டுபிடித்துள்ளதாக ஸேர்ன்(CERN – The EuropeanOrganisation for Nuclear Research) ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
அணு இயற்பியலின் புதிய ஆய்வு முடிவுகளை குறித்து விவாதிக்கும் சர்வதேச மாநாட்டிற்கு ICHEP (International conference for high energy Physics) முன்னோடியாக நடந்த சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பில் ஸேர்ன் ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறித்து அறிவித்தனர்.
உமர் பின் கத்தாப் – தொலைக்காட்சி தொடர் ரமலானில் ஒளிபரப்பாகிறது!
தோஹா:இஸ்லாத்தின் 2-வது கலீஃபா உமர் பின் கத்தாப் வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி தொடர் வருகிற ரமலான் மாதம் முதல் ஒளிபரப்பாகும் என கத்தர் தொலைக்காட்சியின் இயக்குநர் முஹம்மது பின் அப்துற்றஹ்மான் அல்கவாரி அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய வரலாற்றில் பரிபூரண ஆளுமையான வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்ட தொலைக்காட்சி தொடரை கத்தர் தொலைக்காட்சியும், எம்.பி.சி குழுமமும் இணைந்து தயாரித்துள்ளன.
வளைகுடாவை நோக்கி அமெரிக்க போர்க் கப்பல்கள்!
வாஷிங்டன்/இஸ்தான்புல்:இஸ்தான்புல்லில் உலகின் வல்லரசு நாடுகளின் அணுசக்தி நிபுணர்கள் ஈரான் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் வேளையில் அமெரிக்கா வளைகுடா பகுதியை நோக்கி கூடுதல் போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளது. இத்தகவலை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய்க் கப்பல்கள் செல்வதை ஈரான் தடுக்கும் என்ற பீதி உருவானதை தொடர்ந்து போர்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பியதாக நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது.
லேப் டெக்னீசியன் பணிக்கு மாநில பதவி மூப்பு பட்டியல்
பெரம்பலூர்: பெரம்பலூர் கலெக்டர் தரேஷ்அஹமது ö வெளியிட்ட அறிக்கை: சென்னை மருத்துவ கழகத்தால் கோரப்பட்ட லேப் டெக்னீசியன் பணியிடத்துக்கான மாநில பதிவு மூப்பு தேதி மற்றும் பரிந்துரைக்கப்பட்ட நபர்களின் பெயர் பட்டியல், பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக விளம்பர பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவு மூப்பில் குறிப்பிட்ட இனத்தை சேர்ந்த பதிவுதாரர்கள், பட்டியலில் தங்களது பெயரை சரிபார்த்து கொள்ளலாம்.
பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 2005ம்
பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு 2005ம்
செவ்வாய், 3 ஜூலை, 2012
சமுதாய வீழ்ச்சிக்கான ஐந்து காரணங்கள்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஹாஜிர்களை நோக்கி கூறினார்கள் "உங்களுக்கு மத்தியில் ஐந்து விஷயங்கள் நிகழ்ந்து விடாமல் இருப்பதற்கு அல்லாஹ்விடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
நமதூரில் மான் இறந்தது
நமதூர் ஜமாலி நகரில் ஒரு வாலிப பருவ மான் ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது நமதூர் மக்களிடையே பெரும் பரபரப்பு ஏர்படுத்தியது.
ஜமாலிநகர் ஏரிக்கு செல்லும் வழியில் மான் ஒன்று இறந்துகிடப்பதை அறிந்த பொதுமக்கள் நமதூர் பஞ்சாயத்து அலுவலகதிற்கு தகவல் தெரிவித்தனர். பின்பு அவர்கள் அதை நேரில்சென்று உறுதி படுத்தி காட்டு இலாக்காவிற்கு தகவல் தெரிவித்தனர்.
பின்பு அவர்கள் ஒரு ஆட்டோவில் அந்த மானை ஏற்றி V.களத்தூர் Forest Officerரிடம் ஒப்படைத்தனர்.
இதை நேரடியாக பார்த்த நமது வெப்சைட் நிருபர் கூறுகையில்
- இந்தமானின் குடும்பங்கள் இந்த ஏரியாவில்தான் வசித்துவருகிறது.
- இதற்க்கு சகோதர சகோதிரி மூன்று பேர் உள்ளனர்.
- இதன் தாய்மான் இதைத்தேடி இந்த இடத்திற்கு வர அதிகம் வாய்ப்பு உள்ளது.
- இந்த மானின் குடும்பங்கள் இதை தேடி அலைந்து கொண்டுஇருக்கும். என்று நமது நிருபர் பதிலளித்தார்.
- இந்த மானின் வயது எத்தனை இருக்கம் என்று கேட்ற்றதர்க்கு அதை இப்போதைக்கு வெளிட முடியாது என்று கூறிவிட்டார்.
நன்றி: நமது நிருபர்
TNPSC – GROUP IV – தேர்வு – சில தகவல்கள்
T.N.P.S.C – GROUP IV – தேர்வு சில தகவல்கள்
தமிழ்நாடு அரசுப் பணிகளில் இளநிலை பணியாளர் நிலையில் உள்ள 10,793
பணியிடங்களுக்கு தகுதியுடைவர்களை தேர்வு செய்வதற்காக, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC நடத்தும் GROUP IV தேர்வுகள் ஜூலை 7 ம் தேதி நடைபெறுகிறது. 244 ஊர்களில் 5 ஆயிரம் மையங்களில் 12.5 லட்சம் பேர் தேர்வை எழுது உள்ளார்கள்.
பணியிடங்களுக்கு தகுதியுடைவர்களை தேர்வு செய்வதற்காக, தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் TNPSC நடத்தும் GROUP IV தேர்வுகள் ஜூலை 7 ம் தேதி நடைபெறுகிறது. 244 ஊர்களில் 5 ஆயிரம் மையங்களில் 12.5 லட்சம் பேர் தேர்வை எழுது உள்ளார்கள்.
மிஸ்டுகால்- தவறிய அழைப்புகளில் தடம் புரளும் வாழ்க்கை!
மிஸ்டு கால்(Missed Call) – இது ஒரு அழையா விருந்தாளி. மீனைப் பிடிக்க தூண்டில் போட்டு காத்திருப்பவர் போலவே சிலர் மிஸ்டு கால்கள் மூலம் வலை வீசுகின்றனர். வலையில் சிக்குவதை கண்டு எங்கோ ஓரிடத்தில் மிஸ்டுகால்களை தொடுத்த சூத்திரதாரி மறைந்திருந்து ரசிக்க துவங்குகிறான்.
உலகமெங்கும் விரிக்கப்பட்டுள்ள மிஸ்டு கால் என்ற வலையில் சிக்குபவர்கள் இளம் பெண்களும், திருமணமான பெண்களுமாவர். மிஸ்டுகால்களை தொடுக்கும் பாலியல் வக்கிரப் புத்திக் கொண்டோரின் அம்புகளால் தாக்கப்படுபவர்களில் வளைகுடாவாசிகளின் மனைவிகளும் அடங்குவர் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
சிறுபான்மையின மாணவர்கள் உதவித்தொகை
பெரம்பலூர், ஜூலை 3: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள, சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11, 12-ம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக், பட்டயப் படிப்புகள், இளங்கலை மற்றும்
திங்கள், 2 ஜூலை, 2012
கண்ணை மறைக்கும் காவிப் புழுதி - உருது மொழியை அழிக்க ஆர்.எஸ்.எஸ் திட்டம்
”வேறு எந்த மொழிக்கும் கிடைக்காத சலுகை உருது மொழிக்குக் கொடுக்கப்படுகிறது. இது கொடுமையிலும் கொடுமை. அப்படி என்ன சிறப்பிருக்கிறது அந்த மொழியில்? உருது மொழியைக் கற்பிக்க அரசு ஆசிரியர்களை நியமிக்கிறது. அதுவும் அந்த ஆசிரியர்கள் முசுலீமாகத்தான் இருக்க வேண்டும் என்பது இன்றைய நிலை. உருது தெரிந்த இந்து ஆசிரியர்களை நியமிப்பதில்லை. ஆகவே அரிய எழுத்து உள்ள உருது மொழிக்குக் கொடுக்கப்படும் அங்கீகாரம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் என்று கோருகிறோம். வானொலியில் உருது மொழியில் செய்தி வாசிப்பாளர்களுக்கு முசுலீம்களை மட்டும் நியமிக்கிறார்கள். ஆனால், தமிழ் மொழி செய்தி வாசிப்பாளர்களிலும் முசுலீம்களுக்கு இடம் கொடுக்கப்படுகிறது… இதனுடைய ஆழத்தையும் அகலத்தையும் மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.”
வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக ஏழை மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரண்கள் வழங்கும் விழா!
வி.களத்தூர் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் சமுக மேம்பாட்டு துறை மூலம் ஏழை மாணவ ,மாணவிகளுக்கு கல்வி உபகரண்கள் வழங்கும் விழா கடந்த 28.06.2012 (வியாழக்கிழமை ) அன்று பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது .
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக தேசம் முழுவதும் கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்ற வருகிறது. இக்காலகட்டத்தில் சுமார் 1 லட்சம் மாண மாணவியர்களுக்கு கல்வி உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த பிரச்சாரம் தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது.
கல்வியில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் தங்குதடையில்லாமல் அடிப்படை கல்வியை தொடர தேவையான உபகரணங்கள் (school bag, pen, scale, pencil,sharpener, note books) தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
களவாணி ரேஷன் கடைகாரனுக்கு ஆப்பு வைக்கலாம் வாங்க…!
ரேஷன் கடைகளில் பொருள் ஒன்றை வாங்கச் சென்றால் சில கடைகளில், பொருளை பதுக்கி வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ”உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” ஓர் இலகுவான முறையை
ரேஷன் கடைக்கு சென்று பொருள் ஒன்றை கேட்கும் போது அவர்கள் அப் பொருள் ஸ்டாக் தீர்ந்து போச்சு… இனும் வரலை என்று பதில் சொல்கிறார்களா?
அவர்கள் உண்மை தான சொல்கிறார்களா, இல்லை பதுக்கி வைத்துக்கொண்டு கபடநாடகம் ஆடுகிறார்களா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ”உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை” ஓர் இலகுவான முறையை
பெரம்பலூரில் தடையை மீறி SDPI ஆர்ப்பாட்டம்!
கடந்த 29.06.2012 (வெள்ளிக்கிழமை )அன்று
பெரம்பலூரில் RDO ரேவதி மற்றும் சமுக நலத்துறை அதிகாரி பேச்சியம்மாள் ஆகியோரை கண்டித்தும் ,உயர் நீதி மன்ற தீர்ப்பை அமல் படுத்த கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இருந்தது. ஆர்ப்பாட்டம் நடத்த போலிசார் அனுமதி மறுக்கப்பட்டது இதனையும் மீறி SDPI ஆர்ப்பாட்டம் நடத்தினர் .
ஞாயிறு, 1 ஜூலை, 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















