Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 20 ஜூலை, 2012

சிதறிக் கிடக்கும் பெரும்படை....!


பொதுக் கருத்தில் ஒன்றுபடவே  முடியாது என்ற கருத்து இருக்குமானால்  '  நீங்கள் பிரிந்து விடாதீர்கள்'   என இறைவன் சொல்வது  ஏன்? 'உங்களுக்கும் எங்களுக்கும் பொதுவான கருத்தின் பால் உடன் படுவோம் வாருங்கள்'  யூத கிறிஸ்தவர்களையே அல்லாஹ் அழைக்க சொல்வது ஏன்?  யூத கிறிஸ்தவர்களோடு பொதுவான கருத்தில் ஒன்று பட முடியும் என்றால் பொதுவான கருத்தில் முஸ்லிம்களாகிய நாம் ஏன் ஒன்று பட முடியாது!  

அல்லாஹ்வை நம்பாத மறுமையை நம்பாத அரசியல் கட்சிகளான, இரு வேறு  துருவங்களான கம்யுனிஸ்ட் ,பாரதிய ஜனதா பெட்ரோல் விலை விசயத்தில் ஒன்றிணையும் போது, பல்வேறு கருத்துடைய தமிழக கட்சிகள்  இலங்கை தமிழர் விசயத்திலும், முல்லைப் பெரியாறு விசயத்திலும் ஒன்றிணைய முடியும் என்றால் அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பும் முஸ்லிம்களாகிய நாம் ஏன் ஒன்று பட முடியாது?   சிந்தியுங்கள்!  செயல் படுங்கள!  ஒன்றுபடுங்கள். 

நன்றி: onlinesengiskhan

நோன்பாளிகள் கவனத்திற்கு..


நோன்பு 
  • “மறுமைக்கு மட்டும்ல்ல, உடல் ஆரோக்கியத்திற்கும்”
  • “வசந்த காலத்தின் வாயிற்படி தான் நோன்பு”
  • “உள்ளத்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும்”
நுரையீரல் அதிகபடியாக இயங்கும் நேரம் காலை 3-5. ஸஹர் நேரத்தில் நாம் நோன்பு வைப்பதற்காக அதிக நேரம் விழித்திருப்பதால் நமது நுரையீரல் மிகுந்த பத்துணர்வு பெற்று சிறப்பாக செயல்படுகின்றது.இதன் மூலம் மற்ற உறுபுக்கள் புத்துணர்வு பெறுகின்றன.
காலை மதியம் இரவு வழக்கமாக சாப்பிட்டு பழகி போன நமது வயிரு, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல் போன்றவை 1 மாத காலம் இந்த நேரம் மாறி ஸஹர் நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் இந்த உறுப்புக்களின் வழக்கமான இயக்க முறையில் ஓய்வு கிடைத்து வழக்கத்திற்கு மாறாக, அதிகாலை நேரத்தில் சாப்பிடுவதன் மூலம் அவை புத்துணர்ச்சி பெற்று இயங்க ஆரம்பிக்கின்றன. இதன் மூலம் இந்த உறுப்புக்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் நலமாகின்றன.

வியாழன், 19 ஜூலை, 2012

நோன்பின் சட்டங்கள்!


உங்களில் நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அதற்குச் சக்தியுள்ளவர்கள் ஓர் ஏழைக்கு உணவளிப்பது பரிகாரமாகும். நன்மைகளை மேலதிகமாகச் செய்வோருக்கு அது நல்லது. நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பதே சிறந்தது. [அல் குர் ஆன் 2:184]

நோன்பு என்பது இஸ்லாமிய மாளிகையை தாங்கி நிற்கும் தூண்களில் ஒன்றாகும். இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்றாக விளங்கும் நோன்பை முஸ்லிம் சமுதாயம் சரியான முறையில் விளங்கிப் பேணிக் கொள்வது இஸ்லாத்தை நிலைநாட்டுவதும், ஈமானை பலப்படுத்திக் கொள்ளவும் உதவும் அருட்கொடையாகும். 

வளைகுடாவில் ரமதான் துவக்கம்!


20.07.2012 முதல் ரமதான் துவங்குவதாக ஸவுதி, யு.ஏ.ஈ, கத்தார், குவைத் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் அறிவித்துள்ளன. 
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (2: 182)


ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது; ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்; எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்; அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை; குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்). (2: 184)

பேரூராட்சியில் நமது உறுப்பினர்கள்...


 

நமதூர் பேரூராட்சியில் சாதாரண கூட்டம் நடந்தது. பேரூராட்சி தலைவர் சம்சுல் பஜ்ரியா முஹம்மது தஸ்லீம் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவ லர் பரமேஸ்வரி, துணைத்தலைவர் முகமது பாரூக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் மீராமொய்தீன், ஜாகீர் உசேன், ராணி, தாஜ்தீன், மெஹருன்னிசா, சுதாதேவி, ஷேக்தாவூத், பதுருன்னிசா, நூருல்ஹூதா, ஜூனாபாபு, ரபியதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

நம்பாதீர்கள் சகோதரர்களே!

மானம்கெட்ட அரசியல்வாதிகளையும் பொட்டத்தனம் கொண்ட மீடியாக்களையும் நம்பாதீர்கள் சகோதரர்களே!
ஷரியத் பாதுகாப்புக்கு வேண்டி நாம் கூடியது சுமார் 6000 துக்கு மேல் இருக்கும். மேடையில் இருப்பவர்கள் அறிவித்தது சுமார் 10000 பேர்கள்.
நாம் மேடையில் வைத்த கோரிக்கையை பற்றி இதுவரை ஒரு அரசியல் தலைவர்களும் பேசவில்லை, ஒரு மீடியாக்களும் போடவில்லை. தெரிந்தும் தெரியாமல் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. நடுநிலையான ஆட்கள் இருந்தும் அவர்கள் RSS, VHP எனப்படும் பயங்கரவாத கைகும்ம்பலில் இந்த அரசியல்களும், மீடியாக்களும் சிக்கிகொண்டது என்பது உலகம் அறிந்தது ஆனால் ஒருசில முஸ்லிம்களை தவிர ஏனென்றால் அவன் தான் யாருக்கும் தீங்கு இல்லாமல் வாழவேண்டும் என்று நினைக்கிறான். நன்மையை எவுகின்றனே தவிர தீமையை கண்டு விலகிகொல்கிறான்.
இப்படிப்பட்டவர்கள் உலகை ஆண்டிருக்க முடியாது. எப்படிப்பட்ட சமுதாயம் உலகை ஆண்டது என்றால். நன்மையை ஏவி தீமையை தடுத்த கூட்டம்தான் இந்த உலகை ஆண்டது. அப்படிபட்டவர்களிடம்தான் நமது நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.
முஸ்லிம்களே விழித்துகொள்வோம்!. இனியும் நாம் ஒன்றினையாமல் பிரிந்தே கிடந்தால் நமக்காக குரல்கொடுக்க யாரும் வரமாட்டார்கள்.
அல்லாஹ்தால கொடுத்த அறிவை முழுமையாக பயன்படுத்துவோம். எதிரிகளை நடுங்க செய்வோம்.
இயக்க தலைவர்கள் பிரிந்துகிடந்தால் அவர்களுக்கு இந்தவிசயத்தில் கட்டுபடாதீர்கள். ஒருசில தவறு உள்ளே இருக்கத்தான் செயும் அதை கருத்தில்கொண்டு பிரிவைனாடினால், பிரிந்துகொண்டே செல்லவேண்டியதுதான்.
நம்முடைய பலத்தை வாழ்ந்துகொண்டிருக்ககூடிய இந்த சமுதாயம் பார்த்ததில்லை, ஆனால் எதிரிகள் நம்முடைய பலவீனத்தை நன்றாக தெரிந்திருக்கிறார்கள்.
நம்முடைய பலத்தை இந்த உலகத்திற்கு காட்ட ஒன்றிணைவோம். 
முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்களே!
நன்றி : நமதுநிருபர்

ரமலான் மாத நிகழ்வுகள்


ramdan-blessings
இது ஹிஜ்ரா காலண்டரின் 9வது மாதம்.
ஸல்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்: ஷஅபானின் இறுதி நாளில் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “மக்களே, இதோ இப்பொழுது உங்கள் முன் ஒரு மாபெரும் மாதம் வருகிறது. இது அதிகமதிகம் அருள் சொரியப்பட்ட மாதம். இதில்தான் 1000 மாதங்களை விடச் சிறந்த ஓர் இரவு அடங்கியிருக்கிறது. இந்த மாதத்தில் பகல் வேளை முழுவதும் நோன்பு நோற்க வேண்டும். இது அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்டுள்ளது.”

புண்ணியமிக்க மாதத்தை சந்தைமயமாக்கிவிடாதீர்கள்!


images
மனித வாழ்வின் எல்லா துறைகளிலும் சந்தையியல் சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. சந்தை வசப்படுத்துவது தயாரிப்புகளையும், சேவைகளையும் மட்டுமல்ல. மாறாக, ஆட்டம், பாட்டம்,கொண்டாட்டமாக வீட்டு முற்றத்தில் உற்றாரும், உறவினர்களும் சேர்ந்து நடத்தும் திருமணங்களை கூட நகைக்கடைகளும், துணிக்கடைகளும் தங்களின் சரக்குகளை விற்றுத்தீர்க்கும் களமாக மாற்றிவருகின்றன.

2009 ஜூலையை மறக்க முடியுமா ?ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி...

ஹிஜாபிற்காக தன் உயிரை நீத்த பெண்மணி !!!

நீதிமன்றில்..
நீதிபதிகள் பார்த்திருக்க...
அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...
காவல் துறை கண்முன்பு 
ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட 
சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....?
இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்'நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது.

பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!


முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.
முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

புதன், 18 ஜூலை, 2012

ஹஜ் வழிகாட்டி + தொழுகை நினைவூட்டல்



முஸ்லிம்களின் புனித கடமைகளுள் ஒன்றான ஹஜ்ஜின் போது, அந்த புனிதக் கடமைகளை வரிசைக்கிரமமாக நினைவூட்டவும், மக்கா நகரிலும், அதன் சுற்றுப்புறங்களிலும் வழி தொலைந்து போகும் புனிதப் பயணிகளுக்கு உதவும் வகையிலும் புதிய திறன்பேசி பயன்பாட்டு நிரலி (Smart Phone Application) ஒன்றை ஜெர்மானிய கணினி அறிஞர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.

ஜெர்மனியின் ஸ்டட்கார்ட் பல்கலைகழகத்தில் கணிப்பொறி அறிவியலில் பட்டம் பெற்ற ஹபீபுர்ரஹ்மான் தஸ்தகீரி என்னும் அந்த இளம் அறிஞர் இரு நாள்களுக்கு முன் "The Global Post" நாளிதழுக்கு அளித்த செய்தியில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். "ஹஜ்ஜுக் காலத்தில் யாத்ரிகர்களுக்கு வழியறிய உதவுவதாகவும், மார்க்கக் கடமைகளை நினைவூட்டக் கூடியதாகவும் கருவியொன்று வடிவமைக்க விரும்பினேன்" என்றார் அவர் "கடந்த 2006 ஆம் ஆண்டில் குடும்பத்துடன் உம்ரா செய்ய வாய்ப்பு கிடைத்த போதிலிருந்து இது பற்றி சிந்தித்து வந்துள்ளேன்".

தனது பயன்பாட்டு நிரலிக்கு "அமீர்" என்று பெயர் சூட்டியுள்ளார் ஹபீபுர் ரஹ்மான். பொதுவாக, ஒரு பயணத்தில், இயக்கத்தில் தலைமைத் தாங்கிச் செல்பவருக்கு அரபுமொழியில் 
அமீர் என்று கூறுவார்கள்.
உம்ரா, ஹஜ் ஆகிய புனிதக் கிரியைகளின் போது, தங்கியிருக்கும் இடம் திரும்புவதில் புனிதப் பயணிகள் படும் சிரமத்தைக் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹபீபுர் ரஹ்மான், "நாங்கள் எங்களை நன்கு தயார்படுத்திக்கொண்டிருந்தோம்; அப்படியிருந்தும் தங்கியிருந்த இடத்தை அடைவதில் சிரமம் கண்டோம்" என்று நினைவு கூர்ந்தார்.

ஆஃப்கானிஸ்தானத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஹபீபுர் ரஹ்மான், பெற்றோர் தம் ஜெர்மானிய குடியமர்வுக்குப் பின்னர் மெய்ன்ஸ் நகரில் பிறந்தவர்.

அமீர் என்கிற இப்புதிய நிரலியின் மூலம், கலந்துரையாடலாக ஹஜ்ஜு, மற்றும் உம்ரா கிரியைகளின் சரிபார்ப்புப் பட்டியலையும் காணமுடியும்.

இரண்டு வருட கால ஆய்வின் முடிவின் இந்நிரலியை தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஹபீபுர் ரஹ்மான், தன் ஆய்வில் ஆஸ்திரேலிய முஸ்லிம் அறிஞரும், ஹஜ்ஜு பற்றி நிறைய நூல்கள் எழுதியுள்ளவருமான அபூமுனீர் இஸ்மாயில் டேவிட்ஸ் என்பவரை கலந்தோலோசித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு க்ளிக்கில் கிப்லா (தொழ வேண்டிய திசை) காட்டும் அல் கிப்லா என்ற இன்னொரு நிரலியையும் இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய பயன்பாட்டு நிரலி இஸ்லாமிய மார்க்க வகையிலும் நுட்ப வகையிலும் பிழைகள் ஏதுமில்லாமல் அமைவதில் கவனம் செலுத்தியதாகக் கூறும் ஹபீபுர் ரஹ்மான் தனது கருவி தற்போது துருக்கி, ஆங்கிலம், அரபு, ஜெர்மன் மொழிகளில் செயலாற்றுகிறது என்பதையும் தெரிவித்துள்ளார். " மற்ற மொழிகளிலும் ஆய்வு தொடர்கிறது"

"ஆப்பிள் நிறுவனத்தின் ஐ ஃபோனில் இந்நிரலி செயல்படத் தக்கதாக உள்ளது" என்றும் 'ஆண்ட்ராய்ட்' வகை பேசிகளிலும் விரைவில் செயற்படத் தொடங்கும் என்றும் 32 வயதேயான ஹபீபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

-சத்தியமார்க்கம்

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்ட மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்து அனைத்து முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய போராட்டம்


3
பெரம்பலூர்:பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது.

செவ்வாய், 17 ஜூலை, 2012

ரமலானை வரவேற்போம்!!!


ரமலானை வரவேற்போம்!!!
புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.
ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

இஸ்லாம் எங்கள் உயிருக்கு சமம்.



நமதூரில் நமது உயிரிலும் மேலான ஷரியத்சட்டத்தை பாதுகாக்கவேண்டி இன்று பெரம்பலூர் புதிய பேருந்து அருகே மாவட்ட கலக்டர் , RDOரேவதி, மற்றும் சுகாதாரத்துறை பேச்சியம்மா ஆகியோரை கண்டித்து ஆர்பாட்டம் செய்தனர்.

உலமாக்கள் பேரவை மற்றும் அணைத்து இயக்கங்கள் இணைந்து அழைப்பு கொடுத்தமையால் நமது இரண்டு மகால்லம் ஒருமனதாக முடிவெடுத்து அணைத்து இயக்கங்களின் ஆதரவோடு ஊரிலிருந்து சுமார் 15 மேற்பட்ட வாகனங்கள் கிளம்பி சென்றது. அதுசமயம் நமதூர் கடைகாரர்கள் தமது கடைகளை அடைத்து ஆர்பாட்டத்திற்கு கிளம்பி சென்றனர். ஒருசிலர் கடைகளை அடைத்து இங்கிருந்தே ஆதரவு தெரிவித்தனர்.
இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், பாபுலர் பிரான்ட் ஆப் இந்திய மற்றும் முஸ்லிம் லீக் ஒன்றிணைத்து ஷரியத்சட்டத்தை பாதுகாத்திட ஒற்றுமையோடு செயல்பட்டது சிலருக்கு வெறுப்பாக அமைந்தாலும் என்டேன்றும் ஒற்றுமையோடு செயல்பட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
நமது நிருபர்

அல்லாஹ் அக்பர் ... இணைந்தது எங்கள் சமுதாயம்....


பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கண்டித்து அனைத்து இஸ்லாமிய அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!


ஆர்ப்பாட்டத்தில் கண்ட அருமையான காட்சிகள்

துபாய்:அமெரிக்க கப்பற்படையின் வெறிச்செயல் – துப்பாக்கிச்சூட்டில் தமிழர் பலி!


Indian(Tamil)  fisherman killed in US Navy firing off Dubai
துபாய்:அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.
ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்க கப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.

திங்கள், 16 ஜூலை, 2012

நமதூர் ரிஸ்வான் பட்டமளிப்பு விழா

 நமதூர் ரிஸ்வான் பட்டமளிப்பு விழா

 இன்று 16.07.2012 லப்பைக் ஜாமியா ரவ்ளதுஸ் ஸாலிஹாத் நிஸ்வான் (பெண்கள் அரபிக் கல்லூரி) யின் 26 வது ஆண்டு நிறைவு விழாவும் , 23 வது பட்டமளிப்பு விழா கிழக்கு ஜீம்ஆ பள்ளி கீழ்வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு ஜமாத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். மேலும் 5 மாணவிகளுக்கு ஸனது பட்டம் (முபல்லிகா) வழங்க பட்டது.

குறிப்பு இந்நிகழ்ச்சி வாயிலாக நாளை நடைபெறும் பெரம்பலூரில் கன்டண ஆர்பாட்டத்திற்கு இரண்டு ஜமாத் வாயிலாக அழைப்பிதல் கொடுக்கபட்டது.



நமதூரில் காணப்படும் கண்டனப்போஸ்டர்கள்


மழை ....

இன்று நமதூரில் (16.07.2012) மாலை நேரத்தில்  அல்லாஹ்வின் அருட்கொடை (மழை) இறங்கியது. அல்ஹம்துலில்லாஹ் .

இதனால் ஊரில் உள்ள மக்கள் சிறிது வெப்பம்  தனித்து இரவு முழுதும் சுகமாக இருக்கும் என நம்பலாம்.

தகவல் நமது நிருபர்





கல்லீரல்


குடியினால் வரும் உடல் ரீதியான நோய்களில் கொடுமையானது 'லிவர் சிரோஸிஸ்’(Lever cirrhosis). இதுதான் க்ளைமாக்ஸ். குடிநோய்களின் தலைவன் இவன். சுமார் 10 ஆண்டுகளாக தினமும் மது அருந்துபவருக்கு கட்டாயம் இந்த நோய் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள். நம் உடலின் வயிற்றுப்பகுதியின் வலது பக்கத்தில் சுமார் ஒன்றரைக் கிலோ எடையில் முக்கோண வடிவத்தில் கம்பீரமாக அமர்ந்து இருக்கும் உறுப்புதான் கல்லீரல். மூளை மற்றும் இதயத்துக்கு இணையான முக்கியத்துவம் பெற்ற உறுப்பு இது. ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?

பத்திரிக்கை செய்தி


மது, பன்றி இறைச்சி, மரணம்- பர்மா முஸ்லிம்களுக்கு பெளத்த பயங்கரவாதிகள் அளிக்கும் சாய்ஸ்!


Myanmar's ethnic Rohingya Muslim
கெய்ரோ:கிட்டத்தட்ட 10 மில்லியன் முஸ்லிம்களை இன அழித்தொழிப்புச் செய்ய மியான்மரில் சதித்திட்டம் தீட்டப்பட்டு முயற்சிகள் நடப்பதாக அந்நாட்டைச் சார்ந்த முஸ்லிம் இளம் பெண்மணி ஆயிஷா ஸூல்ஹி கூறுகிறார். எகிப்தில் உள்ள ஷரீஆ கல்லூரியில் பயின்று வருகிறார் ஸூல்ஹி.
முஸ்லிம்களுக்கு எதிராக கொடூரங்களை குறித்து ஆயிஷா ஸூல்ஹி அல் வதனுல் மிஸரிய்யா பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்  கூறியது: “பெளத்த மதத்தைச் சார்ந்த பயங்கரவாதிகள் அங்குள்ளமு ஸ்லிம்களுக்கு மதுபானம், பன்றி இறைச்சி அல்லது மரணம்- இதில் எதை தேர்ந்தெடுக்கப் போகின்றீர்கள் என்று சாய்ஸ் வழங்குகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மரணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள்.

ஞாயிறு, 15 ஜூலை, 2012

பெரம்பலூரில் த.மு.மு.க மற்றும் ம.ம.க பொதுக்குழு



பெரம்பலூர்: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நேற்று 14.07.2012 நடந்தது.
கூட்டத்துக்கு த.மு.மு.க.மாவட்ட தலைவர் மீராமொய்தீன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ரஷீத்அஹமத் வரவேற்றார். மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான்மொய்தீன், மாவட்ட பொருளாளர் முஹம்மதுஇலியாஸ், மாவட்ட துணை செயலாளர்கள் குதரத்துல்லா, முஹம்மதுசித்திக், தொண்டணி செயலாளர் சித்திக் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மதுரபீக் பேசினார். இதில் பெரம்பலூர் ஒன்றிய அ மைப்பாளராக 

சனி, 14 ஜூலை, 2012

ஷரிஅத் சட்டத்தில் அத்துமீறி தலையிடும் அரசு அதிகாரிகளுக்கு இஸ்லாமிய இயக்கங்கள் கண்டனம்


Islamic movements condemned illegally interfering sharia law Government officials
சென்னை:ஷரிஅத் சட்டத்தில் (முஸ்லிம் தனியார் சட்டம்) அத்துமீறி தலையிடும் தமிழக அரசு அதிகாரிகளை கண்டித்து தமிழ்நாடு ஜமாத்துல் உலமா தலைவர் மௌலவி AEM அப்துர் ரஹ்மான் தலைமையில் அனைத்து முஸ்லிம் சமுதாய அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூட்டாக தெரிவித்ததாவது; ‘பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையத்தை சார்ந்த ராஜா முகம்மதுவின் மகன் சாகுல்ஹமீது என்பவருக்கும், அரும்பாவூரை சார்ந்த அப்துல் கபூரின் மகள் யுரேஷா பேகத்திற்கும் கடந்த 25.06.2012 அன்று

சுவர்க்கமும் நரகமும் செய்த தர்க்கவாதம்




சுவர்க்கமும் நரகமும் ஒரு முறை தர்க்கவாதத்தில்இறங்கின.
நரகம் நவின்றது: “உன்னத தலைவர்களும் பிரபல பிரமுகர்களும் வீற்றிருப்பது என்னிடம்தான்!”
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களின் சமூக அந்தஸ்தைக் கண்டு அகங்கரித்து நரகம் இவ்வாறு சொன்னது. சக்கரவரத்திகளும், பிரபுக்களும், தலைவர்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தனர்.
தன்னிடம் தங்கியிருக்க வருபவர்களை நோக்கியது சுவர்க்கம். அறிமுகமில்லாதவர்களும், ஊரில் இருக்கிற இடமே தெரியாதவர்களும், ஊரில் அவர்களைக் காணவில்லையென்றால் அவர்கள் எங்கே சென்றார்கள் என்று கேட்கப்படாதவர்களும், ஊரில் இருந்தால் கூட ஒரு நிகழ்ச்சிக்கும் அழைக்கப்படாதவர்களும்தான் சுவர்க்கத்தில் இருந்தனர்.

காந்தி கொலையும் இந்துத்துவா அரசியலும்...



Add caption


ரமளானை வரவேற்போம்!


welcome_ramadan[152x149]
நன்மைகளை அள்ளித் தரும் புனித ரமளான், மீண்டும் ஒரு முறை நம்மை சந்திக்க வருகின்றது. இது தொழுகை மற்றும் நோன்பின் மாதம். இறையச்சத்தை இதயத்தில் ஏற்றும் மாதம். தேவை உடையோருக்கு ஈந்துதவி, இறை உவப்பை பெறும் மாதம். தன்னையே அழித்துக் கொள்ளும் பாவம் புரிந்தாலும் அதற்காக பச்சாதாபப்பட்டு பாவமன்னிப்பைத் தேடி பெற்றுக் கொள்ளும் மாதம்.
இந்த மாதத்தையும், அதன் முக்கியத்துவத்தையும், அது ஏற்படுத்த வேண்டிய மாற்றத்தையும் பற்றி இறைமறையாம் அருள்மறை இவ்வாறு எடுத்தியம்புகின்றது:
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப் பட்டிருந்தது போல் உங்கள் மீதும் (அது) விதிக்கப்பட்டுள்ளது. (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். (அல் குர்ஆன் 2 : 183)

கொலஸ்ட்ரால் பற்றி தெரிந்துகொள்வோம்


கொலஸ்ட்ரால் என்றால் என்ன?
கொலஸ்ட்ரால் என்பது ஒரு வேதிக் கூட்டுப்பொருள். அது இயற்கையாக நமது உடலில் உருவாக்கப்படுகிறது.
Lipid + steroid = Cholestrol
80 % கொலஸ்ட்ராலை நம்முடைய கல்லீரல் (Endogenus cholesterol) உற்பத்திசெய்கிறது. மீதமுள்ளவை நாம் உண்ணும் உணவின் மூலம் (Exogenus cholesterol) கிடைக்கிறது. அசைவ உணவுகளில் மட்டுமே கொலஸ்ட்ரால் பெறப்படுகிறது. சைவ உணவுகளில் கொலஸ்ட்ரால் இல்லை. சாப்பிட்ட உணவு ஜீரணமாகி சத்துக்கள் ரத்தத்தில் கலக்கின்றன. அப்போது கொலஸ்ட்ரால் குடலினால் உறிஞ்சப் பட்டு கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. கல்லீரல்தான் தேவைப்படும் போது கொலஸ்ட்ராலை வெளிவிடவும், அல்லது உற்பத்தி செய்யும் உறுப்பாகவும் செயல்படுகிறது.

வெள்ளி, 13 ஜூலை, 2012

முகலாய மன்னர்களின் நீதி


 முகலாய மன்னர்களின் நீதி            

பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது. போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அவர் எழுதியதாவது:
என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள். இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும். கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.
1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு. மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.

ஜமாலியா நகர் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் ?




லெப்பைக்குடிக்காடு ஒர் பாலஸ்தீனம் போல் ஆக்கிறமிப்பு நடைபெறுகிறது. அன்று எப்படி இந்த உலக மகா ரவுடியான யுதர்களை உலக மொங்கும் கொலைசெய்யபட்டு தங்குவதற்கும் கேட்பதற்கும் நாதியற்றவர்களாக இருந்தவர்களை பாலஸ்தீன் மக்கள் அறவனித்தார்கள். ஆனால் இன்று அவர்களுடைய நிலமை உலகில் வேறு எங்கும் இதை போன்ற ஓர் அனிதீ நடைபெற்றது இல்லை . செந்த நாட்டில் அகதிகலாகவும்  ,  அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.


இதை ஏன் இங்கு நாம் சுட்டிகாட்டுதற்கு காரணம் என்ன வெனில் ,  நமது மக்கள் அன்று எப்படி பாலஸ்தீன் மக்களுக்கு இடம் கொடுத்தார்களே அதை போல் இன்று வாடகை வீடு என்ற பெயரில் ஊரில் பல வருடங்களாக குடிஇருப்பவர்கள் அவர்களுக்கு உங்கள் வீட்டில் முகவரியில் ஓர் ரேசன் (குடும்ப அட்டை) கார்டு வாங்குகிறார்கள் . இதில் வேடிக்கை என்ன வெனில் தொடர்ந்து 20 வருடம் இருந்தவர்கள் எல்லாம் இன்று தனக்கு ஓர் இடம் வேனும் என்று கலெக்டர் இடம் சென்று மனு கொடுத்து உள்ளனர்.  இது ஓர் ஜனநாயக உரிமை . ஆனால் ஊரில் உள்ள புறம் போக்கை இடத்தை எனக்கு தாங்கள் நான் இத்தனை வருடம் இந்த ஊரில் வாழ்ந்து வருகின்றோன் என்று உங்கள் வீட்டு முகவரியை வைத்து உரிமை கொண்டாடுகின்றனர்.  இதில் தான் பிரச்சனை ஆரம்பம் ஆகின்றன.  ஏனெனில் புறம் போக்கு இடம் பார்தால் ஜமாலியா நகரில் அமைந்துள்ளது. அன்று ஜமாலியா நகர் மனை போடும் போது இந்த இடமும் சேர்ந்து உள்ளது.

வியாழன், 12 ஜூலை, 2012

நிறுத்திடு...


கிராம நிர்வாக அலுவலர் தேர்வுகள் (VAO) அறிவிப்பு...


சஹர் நேர நிகழ்ச்சி பாப்புலர் ஃப்ரண்ட்


நமதூரில் மழை பொழிந்தது


 நமதூரில் பரவலாக மிதமான மழை பொய்த்து. இதனால் பொதுமக்கள் அனைவரும் சந்தோசத்துடனும் மகிழ்ச்சயுடனும் காணப்பட்டார்கள்.


நமதூரில் சுமார் மாலை 5 மணி அளவில் வானம் மேகமூட்டதோடு காட்சியளித்தது. பொதுமக்கள் அனைவரும் வழக்கம்போல மேகம் வரும் போகும் என்று அலட்சியமாக இருந்தனர். மாலை 6:30 மணிக்கு மேல் மலை பொளியத்துவங்கியது. 
இதனால் பஸ் ஸ்டாப்பில் உள்ளவர்கள் கடை ஓரங்களில் ஒதிங்கினார்கள். மாடியில் துணி காயப்போடவர்கள் அவசர அவசரமாக காய்ந்ததுணியை எடுத்துக்கொண்டு ஓடினார்கள். அணைத்து தெருக்களிலும் குழந்தைகள் சத்தம் சற்று குறைவாகவே காணப்பட்டது.
நன்றி:நமதுநிருபர்.

பர்மா முஸ்லிம்களின் அவல நிலையை தயவுசெய்து பிறருக்கு எத்தி வையுங்கள்.


Muslims in Burma Are Killed.....Whole Media is Silent.....



அணைத்து இயக்கங்களின் ஆர்ப்பாட்டம்

சர்க்கரை நோய் பரிசோதனை.

பொதுமக்களின் நலனைக்கருத்தி பொதுசேவை அடிப்படையில் SSB மெடிக்கல் (BUS STAND) மிகக்குறைந்த விலையில் சேவை செய்து வருகின்றனர்.
பொதுமக்கள் இந்தநல்ல வாய்ப்பினை பயன்படுதிகொல்லுமாறு நமது Website சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
நன்றி: SSB மெடிக்கல்

பாலஸ்தீன நாட்டின் வரைபடம்


ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு


நமது நிர்வாகிகள் நல்லவர்களா ? கெட்டவர்களா?

Al-Muminah School featured on Headlines Today, India

அல்லாஹ் அக்பர்  ... அல்லாஹ் அக்பர்... அல்லாஹ் அக்பர்...

நமதூர் ஜமாத் என்ன செய்து கொண்டு இருக்கிறது. பெண்கள் வழி தவறி சென்று கொண்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் ஓர் முன்மாதிரியான இஸ்லாம் மற்றும் உலக கல்வியை மும்பையில் உள்ள Al-Muminah School பெண்களுக்காக செய்து வருகின்றது. அல்ஹம்துலில்லாஹ்

இப்போது நமதூருக்கு வருவேம். வழி தவறும் பெண்பிள்ளைகள் , முஸ்லிம் அல்லாத ஆண்களுடன் பெண்பிள்ளைகள் என்று நாளுக்கு நாள் வரும் செய்தியாக உள்ளது. இந்த செய்திகள் நம் அனைவரையும் முகசுலிக்க வைக்கிறது. இதில் பசங்களும் விதி விளக்கு அல்ல. 
ஆனால் எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் தன்னுடைய பெறுப்பை பற்றி மறுமையில் கோள்வி கேட்க படும் என்பதை கூட அறியாமல் இன்று நமதூர் மஹல்லா நிர்வாகிகல் உள்ளனர்.எப்படி அங்கே பிள்டிங் கட்டலாம் இங்கே கட்டலாம் என்றுதான் நிர்வாகிகள் இருக்கிறார்கள்.ஊரில் நடக்க கூடிய அனாச்சாரங்களை கண்டும் காணாமல் .

ஊரில் ஒரு கல்வி நிறுவனம் அமைக்க வேண்டும் என்று என்றாவது சிந்தித்தது உண்டா? ஹந்திரிக்கு எவ்வளவு சோரு ஆக்கலாம் , கல்யாணத்திற்கு எவ்வளவு பணம் வாங்களாம் என்று தான் இவர்களுடைய நிர்வாகம் சொன்று கொண்டு இருக்கிறது. 

புதன், 11 ஜூலை, 2012

வேலைவாய்ப்பு அலுவலகம் அறிவிப்பு


கிழக்கு பள்ளிவாசல்



அஸ்ஸலாமு அழைக்கும்
நமதூர் கிழக்கு பள்ளிவாசலில் நடைபாதைக்கு வசதியாக கற்கள் பதிக்கும் பணி மிகத்துரிதமாக நடைபெற்றுகொண்டிருக்கிறது.

நமது நிருபர்

எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்திற்கு அல்ல! இஸ்லாத்தின் எழுச்சியை கண்டு! – ஈரான்!


டெஹ்ரான்:எதிரிகள் அஞ்சுவது அணு ஆயுதத்தை கண்டு அல்ல என்றும் இஸ்லாத்தின் வளர்ச்சியே அவர்களின் அச்சத்திற்கு காரணம் என்றும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஸஈத் ஜலீலி கூறியுள்ளார்.
மேற்காசியாவிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் மக்கள் விரோத அரசுகளை வீழ்த்திய இஸ்லாமிய எழுச்சிக்கு துனீசியாவின் புரட்சியே வழி காட்டியது. இஸ்லாமிய நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்

இன்று உலக மக்கள் தினம்!


World Population Day 2012 today
புதுடெல்லி:”அனைவருக்கும் ஆரோக்கியமான மகப்பேறு” என்ற தொனிப்பொருளுடன் இன்று உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 11-ஆம் தேதி உலக மக்கள் தொகைதினமாக கடைப்பிடிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட ஆளுகை கவுன்சில் தீர்மானித்தது.
மக்கள் தொகைப் பெருக்கத்தினால் உருவாகும் பிரச்சனைகள், குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம், அன்னையரின் ஆரோக்கியம், பால் சமத்துவம் உள்ளிட்ட காரியங்களில் கவனம் செலுத்த உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

முஸ்லிம் வேட்டை:கண்ணீரும், கண்டனங்களும் நிறைந்த அரங்காக மாறிய பொதுக்கூட்டம்!


politics of terror- targeting muslim youths
புதுடெல்லி:மலேகான், சம்ஜோதா எக்ஸ்பிரஸ்,மக்கா மஸ்ஜித், காட்கோபர் குண்டுவெடிப்புகள், பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர், கத்தீல் சித்திக்கியின் படுகொலை, ஃபஸீஹ் மஹ்மூதின் மர்மமான கைது… தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டம் என்ற பெயரால் முஸ்லிம் இளைஞர்களை பாதுகாப்பு ஏஜன்சிகள் குறி வைத்து வேட்டையாடிய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள ஏற்பாடுச்செய்த பொதுக்கூட்டத்தில் கண்ணீர் கதைகளை கேட்டு அரசு மீது கோபக்கனல் வீசியது.

செவ்வாய், 10 ஜூலை, 2012

தேசதந்தை காந்தியின் கனவு இந்தியாவிலூம் (இரண்டாம் கலீபாவின் ஆட்சி)நடைபெறுமா?




ஓர் மாற்றத்தின் ஆரம்பம்..
2012 ஜூன் 24
எங்கும் ஒளி வெள்ளம் சூழ, ஓர் மாற்றத்தின் ஆரம்பம்.......
இமாம் ஹஸனுல் பன்னா ஷஹீதின் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இன்று எகிப்தின் ஆட்சியாளர்கள்.!!


எகிப்திய மக்கள் "இஃக்வானுல் முஸ்லிமீன்" இயக்க வெற்றியின் அறிவிப்பினை தொடர்ந்து நன்றி தெரிவிக்கும் வண்ணம் கெய்ரோ நகரின் தஹ்ரீர் சதுக்கத்தில் பல மில்லியன் மக்கள் சஜ்தாவில் விழுந்து அல்லாஹுவுக்கு நன்றி செலுத்தும் அருமையான ஓர் நிகழ்வு.


நீங்கள் வெளிநாடு செல்பரா எச்சரிக்கை...




எச்சரிக்கை!!!

அனைவரும் கவனமாக இந்த கட்டுரையை படிக்கவும்.

நமது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) பக்கங்களை கிழித்து எரியும் விமான நிலைய அதிகாரிகள்!.... கவனமாக இருக்கவும்!.

நீங்கள் பன்னாட்டு விமானத்தில் பயணம் செய்பவராக இருந்தால் பன்னாட்டு விமான நிலைய குடிபுகல்அதிகாரி (IMMIGRATION OFFICER) /சுங்க அதிகாரி (CUSTOMS OFFICER) /காவல்துறை அதிகாரி (POLICE OFFICER) மற்றும் விமான நிலைய ஊழியர் (AIRPORT STAFF) யாரிடம் உங்களது கடவுச்சீட்டை