பார்ப்பனத்துவ ஆதிக்கம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழகத்திலும், சமூக-அரசியல்-கலாச்சார நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தெளிவான, உறுதியானக் கொள்கையை அந்தக் கட்சியின் துவக்க விழாவில் செப்டம்பர் 18, 1949 அன்று அறிஞர் அண்ணா அழகாக படம்பிடித்துக் காட்டினார்: “திராவிடர் கழகமாகட்டும் – திராவிட முன்னேற்றக் கழகமாகட்டும் படை வரிசை வேறு என்றாலும் கொள்கை ஒன்றுதான். கோட்பாடு ஒன்றுதான், திட்டமும் வேறு அல்ல, என்ற நிலை இருந்தே தீரும். படைவரிசை இரண்டு பட்டுவிட்டது என்று எக்காளமிடும் வைதீகபுரிக்கும், வட நாட்டு ஏகாதிபத்யத்துக்கும் சம்மட்டியாக விளங்க வேண்டும். இரு கழகங்களும் இரு திக்குகளிலுமிருந்து வட நாட்டு ஏகாதிபத்யத்தை ஒழித்து, வைதீகக்காட்டை அழித்துச் சமதர்மப் பூங்காவை திராவிடத்தைச் செழிக்கச்























