வியாழன், 21 ஏப்ரல், 2016
திங்கள், 18 ஏப்ரல், 2016
இவர்கள் ஏன் சட்டமன்றம் சென்றாக வேண்டும் – 01 (சுப. உதயகுமாரன்)
கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன் அதிகம் பேசப்பட்ட தமிழர். ஒற்றை மனிதனாக மக்களை திரட்டி தங்கள் பகுதி மக்களுக்கு பாதிப்பை விளைவிக்கும் அணு உலைகளை நிறுவிய வல்லாதிக்க அரசுகளை எதிர்த்தவர். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக நீண்ட காலம் நடைபெற்ற மக்கள் திரள் போராட்டம் அது.
தமிழக மண்ணின் பெரும்பான்மையிரான மீனவர்களை ஒன்று திரட்டி அந்த மக்களுக்கு போராட்ட உணர்வை ஊட்டி அவர்கள் தண்ணீருக்குள் நின்று எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு போராடிய காட்சிகள் இன்னும் நம் கண்களில் இருந்து மறையவில்லை.
ஆளுமை ஓர் அறிமுகம் – பாகம் 1
பத்திரிகையாளர்: நீங்கள் இப்னாவிற்கு மீண்டும் சென்றீர்களா?
ரந்திஸி: ஆம்! நான் மீண்டும் இப்னாவிற்கு சென்றிருந்தேன். அங்கே என் வீடுகளை பார்த்தேன், எனது வீட்டில் ஒரு வலது சாரி யூத குடும்பம் வசித்துக்கொண்டிருக்கிறது.
பத்திரிகையாளர்: அது உங்கள் மனநிலையை எவ்வாறு பாதித்தது?
ரந்திஸி: அது என்னை கடுமையாக பாதித்தது. அங்கே சென்றபோது எனக்கு என்னுடைய கிராமத்தின் எழில் மிகிந்த அழகுத்தோற்றம் என் நினைவுக்கு வந்தது. நான் சிறுவனாக இருந்த போது என்னை எனது பெற்றோர்கள் தங்களுடைய
ஞாயிறு, 3 ஏப்ரல், 2016
நமதூர் தாருஸ்ஸலாம் பொது அறிவிப்பு ...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பொது அறிவிப்பு +2 தேர்வுகள் முடித்து வீட்டில் விடுமுறையில் இருக்கும் சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் தாங்கள் உலகக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் இஸ்லாமிய மார்க்கத்தை கற்றுக் கொள்ளவும் குர்ஆனை தங்கு தடையின்றி அழகாக ஓதவும் இந்த விடுமுறை நாளை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
லெப்பைக்குடிக்காடு தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளியில் ஆண்களுக்கும்
நமதூரில் மகளிர் வாக்குச்சாவடிகளில் பெண்களை பூத் ஏஜென்டுகளாக நியமிக்க அரசியல் கட்சிகள் முன்வர வேண்டும் க. நந்தகுமார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர்களை வரவேற்கும் வகையில் 8 மாதிரி வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான க. நந்தகுமார்.
சுப. உதயகுமார் வெளியிட்ட வித்தியாசமான தேர்தல் வாக்குறுதி!..
தேர்தலில் வெற்றி பெற்றால் தொகுதியிலேயே தங்கி மக்களுக்காக பணியாற்றுவேன். யாரிடமிருந்தும் எந்தக் காரணத்துக்காகவும், எந்தவிதத்திலும் கையூட்டு பெற மாட்டேன். எம்எல்ஏ பதவி முடியும் காலம் வரை ஆண்டுதோறும் சொந்தக் கணக்கையும், வருமான வரிக் கணக்கையும் பொதுவெளியில் வெளியிடுவேன். வாக்குக்கு லஞ்சம் தரமாட்டேன். சாதி, மத உணர்வுகளுக்கு இடம் அளிக்க மாட்டேன். கூடங்குளத்தில் உள்ள முதல் 2 அணு உலைகளையும் மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
NIA அதிகாரி தன்சில் அஹமத் உத்தர் பிரதேசத்தில் சுட்டுக்கொலை
தேசிய புலனாய்வுத்துறையில் பணியாற்றி வந்த அதிகாரி தன்சில் அஹமத் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு திருமணத்திற்கு சென்று திரும்பும் போது மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் சரமாரியாக சுடப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த தாக்குதலில் தன்சில் அஹமதின் மனைவி படுகாயமுற்றுள்ளார். இந்த மொத்த நிகழ்வையும் அவரது இரண்டு குழந்தைகளும் காரின் பின் இருக்கையில் இருந்து பார்த்துள்ளனர். இவரது உடலில் 26 இடங்களில் குண்டு துளைத்துள்ளது.
சுப்பிரமிய சுவாமியின் தலைவலிக்கு யார் காரணம்?
பா.ஜ.க தலைவர் சுப்பிரமணிய சுவாமியின் பெரும் தலைவலியாக இருப்பவர் தனது இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞர். சுப்பிரமணிய சுவாமியின் பதிவுகளை கிண்டல் செய்யும் விதத்தில் பதிவுகளைப் போட்டு அசத்தி வரும் அவரின் “Unofficial: Subramaniam Swamy” பக்கத்திற்கு கிட்டதட்ட
செவ்வாய், 29 மார்ச், 2016
ஏன் அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் சிறுபான்மை அடையாளம் தக்க வைக்கப் பட வேண்டும்? – அ.மார்க்ஸ்
சட்டத்துறை வல்லுனரும், இரு மத்தியப் பல்கலைக்கழகங்களின் வேந்தராகவும் உள்ள என்.ஆர். மாதவமேனனின் முக்கிய கட்டுரை.
மாதவ மேனனின் Draft National policy on Criminal Justice (2007) குறித்து நான் கடுமையாக விமர்சித்துள்ளேன்.
எனினும் குற்ற நீதி மற்றும் அது தொடர்பான சட்டங்கள் குறித்த வல்லுனர் அவர். ‘தேசிய சட்டப் பள்ளிப் பல்கலைக் கழகத்தை’ நிறுவியவர். இரு பல்கலைக் கழகங்களில் துணைவேந்தராகச் செயல்பட்டவர். பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்.
மாதவ மேனன் அலிகர் முஸ்லிம் பலகலைக் கழக மாணவர் என்பதையும், அங்கு சில காலம் பேராசிரியராகப் பணியாற்றீயவர் என்பதையும் இந்தக் கட்டுரையை வாசித்த போதுதான் அறிந்து கொண்டேன்.
இந்தத் தேர்தலில் முஸ்லிம்கள் – அ. மார்க்ஸ்
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக முஸ்லிம்களின் மத்தியில் செயல்படும் முக்கிய அரசியல் இயக்கங்களான முஸ்லிம் லீக், த.மு.முக (ம.ம.க), SDPI ஆகிய மூன்றும் திமுக கூட்டணியில் உள்ளன. தேர்தலில் பங்கேற்காத இன்னொரு முக்கிய அமைப்பான தவ்ஹீத் ஜமாத் தன் ஆதரவாளர்களை தங்களின் விருப்பம்போல வாக்களிக்கலாம் எனச் சொல்லியுள்ளது.
ஆக இம்முறை தமிழக முஸ்லிம்களின் வாக்குகள் பெரும்பான்மையும் சிந்தாமல் சிதறாமல் திமுக கூட்டணிக்குச் செல்கிறது. இதை நான் மனதார வரவேற்கிறேன்.
ரஞ்சன்குடி கோட்டையில் பராமரிப்புக்கு முட்டுக்கட்டை! சினிமா சூட்டிங்கிற்கு அனுமதி ! தொல்லியல்துறை பாரபட்சம்!

ரஞ்சன்குடி கோட்டையில் சுற் றுலாத்துறை பராம ரிப் புக்கு முட் டுக் கட்டை போடும் தொல் லி யல் துறை, சூட் டிங் கிற்கு மட் டும் அனு மதி அளித் தது வர லாற்று ஆர் வ லர் களை அதிர்ச் சி யை டய செய் துள் ளது..
வியாழன், 24 மார்ச், 2016
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள்!
திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறது. கூட்டணி ஏற்கெனவே முடிவாகிவிட்ட நிலையில், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்று தொடங்கியது.
கண்கலங்க வைத்த ஒரு சகோதரியின் பேஸ்புக்'கில் இருந்த வாசகம்!!!
யா அல்லாஹ் கண்ணீரோடு முறையிடுகின்றேன்
ஓலை குடிசையில் கூலி வேலை செய்யும் பெற்றோர்களின் வயிற்றில் பெண்ணாக பிறக்க வைத்த என் ரப்பே!
என் மன வேதனையை உன்னிடம் தான் தினம் தினம் சொல்லி அழுகின்றேன் விடிவு வராவிட்டாலும் பரவாயில்லை மரணம் என்ற முடிவு வந்தால் போதும் என்ற நிலையில் வாழுகின்றேன் யாருக்கும் பாரமில்லாமல் சென்று விடுவேன் அல்லவா !
சனி, 19 மார்ச், 2016
ஏன் இப்படி?
அவர் ஒரு முஸ்லிம் எழுத்தாளர்.
சில சிறுகதைகளை எழுதியுள்ளார் என்றெண்ணுகின்றேன்.
அவரது முகநூலில் ஒரு பதிவு.
தன்னுடைய ரோல்மாடல் 'வாத்தியார்' (எம்ஜிஆர்)
அவரை மறக்கவே இயலாது என எழுதியிருந்தார்.
மனிதனுக்கு கொடுக்கப்பட்ட மீப்பெரும் அருட்கொடை பேச்சு.
புதன், 16 மார்ச், 2016
வெற்றிபெறப்போவது யார்? - வி.களத்தூர் சனா பாரூக்

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகின்ற மே மாதம் 16 ம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தில் எப்போதும் நிகழாத பல்முனைப்போட்டி இத்தேர்தலில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.
அதிமுக, திமுக, தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் கட்சி, அப்துல் கலாம் கட்சி, காந்திய மக்கள் கட்சி போன்ற இன்னும் பல கட்சிகள் இத்தேர்தலில் தனி தனியாக களம் காணும் முனைப்பில் இருக்கின்றன. இதில் சில கட்சிகள்
ஆப்பிள் மரம்!(சிறுகதை)

தன்னுடன் யாரும் விளையாட முன்வராத நிலையில் சல்மான் என்னும் சிறுவன் ஆப்பிள் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள ஒரு ஆப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து அழுதுகொண்டிருந்தான்.இவன் அழுகை குரலை கேட்ட அந்த ஆப்பிள் மரம் சிறுவனிடம் “ஏன்பா தம்பி அழுகுர ?” என்று கேட்டது.
அதற்கு அந்த சிறுவன் சல்மான்”என்னோடு யாரும் விளையாட வர மாட்டேங்குறாங்க,தனியா விளையாட என்னட்ட விளையாட்டு பொருளும் இல்ல” என்று சோகத்தோடு கூறினான்.
வியாழன், 10 மார்ச், 2016
உரக்கச் சொல்லாதீர்.....

உரக்கச் சொல்லாதீர்.....
பாதிக்கப்பட்ட மக்களின் வாயிலிருந்து உமிழ் வந்து நமது முகத்தில் வி்ழப்போகிறது....!
9000 ஆயிரம் கோடியை ஏப்பம் விட்டு உலகம் முழுவதும் உல்லாச பயணம் வருகிறார் கார்பரேட் ஃபிராடு விஜய்ய மல்லையா.
2 இலட்சம் கல்வி கடன் வாங்கி அதில் ஒரு இலட்சத்தை ஒழுக்கமாக செலுத்தி மீத தொகைக்கு அவகாசம் கேட்ட நீலகிரி கிருஷ்ணன் மற்றும் பொறியியல் பயிலும் அவரது மகளின் புகைப்படத்தை பேனர் அடித்து
முச்சந்தியில் வைத்து கேவலப்படுத்தியுள்ளது வங்கி நிர்வாகம்........
பாப்பாநாடு விவசாயி...... பாலன் தனியார் நிதி நிறுவனத்தில் ( கந்து வட்டிக் கடை) வாங்கிய டிராக்டருக்கு 80% கடனை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

