Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஆம்பூர் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆப்பாவி பொதுமக்கள் 118 பேருக்கு நிபந்தனை ஜாமீன் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் கடந்த ஜூன் 27ஆம் தேதி நடந்த கலவரம் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களின் சார்பில் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இதனை விசாரித்த சென்னை ஐகோர்ட், 118 பேருக்கும் ஜாமின் வழங்கியதுடன், அவர்கள் யாரும் வேலூர் மாவட்டத்தினுள் நுழையக் கூடாது என்று நிபந்தனை விதித்தது. சேலம், கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தங்கியிருக்க அனுமதி வழங்கியது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் பூந்தோட்டம், பர்ணகாரத் தெருவைச் சேர்ந்த ஷாஜகானின் மகன் ஷமில் அஹமத் (26). கடந்த மாதம் 15ம் தேதி பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட ஒரு பெண் காணாமல் போனது தொடர்பாக இவரை பள்ளிகொண்டா காவல் ஆய்வாளராக இருந்த மார்ட்டின் பிரேம்ராஜ் விசாரணைக்கு அழைத்துச் சென்றார். போலீஸ் விசாரணையின் போது ஷமீலுக்கு கடுமையான தாக்குதலுக்கு உள்ளான ஷமீல் அஹமது ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார் பின்னர் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து ஷமீலின் மரணத்திற்குக் காரணமாக பள்ளிகொண்டா காவல் ஆய்வாளர் மார்டினை பணியிடை நீக்கம் செய்யக்கோரி 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆம்பூர் நகரக் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
ஆனால், மார்ட்டினை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என போலீசாரைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து 500-க்கு மேற்பட்ட அதிரடிப்படை போலீஸார் ஆம்பூரிலும் பள்ளிகொண்டாவிலும் குவிக்கப்பட்டு வீடு வீடாக சென்று அப்பாவி பொதுமக்கள் பலரை கைது செய்தனர்.
இதற்கிடையே, போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்தது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு அறிக்கை அளிக்குமாறு, வேலூர் குற்றவியல் நீதிபதி ஏ.மும்மூர்த்திக்கு மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி எஸ்.சிவகடாட்சம் உத்தரவிட்டார். இதனடையத்து ஆய்வாளர் மார்ட்டின் தலைமறைவானார்.
உண்மையான குற்றவாளிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கிலேயே மேற்கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
தொடர்புடைய முந்தைய செய்திகள்:


1. http://www.thoothuonline.com/archives/74205

2.  http://www.thoothuonline.com/archives/74220

3. http://www.thoothuonline.com/archives/74167

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக