ஜூலை 29 – காலை 11 மணி – 14 பக்க கருணை மனு ஒன்று யாக்கூப் மேமன் சார்பில் குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கப்படுகிறது
ஜூலை 29 – மாலை 4 மணி – குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கிறார்
ஜூலை 29 – இரவு 8.30 மணி – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராஷ்டிரபதி பவனுக்கு வருகிறார். குடியரசுத்தலைவரிடம் கருணை மனு விவகாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசின் முடிவை சொல்கிறார்.
ஜூலை 29 – இரவு 9.30 மணி – உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் மற்றும் சாலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆகியோர் ராஷ்டிரபதி பவனுக்கு(குடியரசுத்தலைவர் மாளிகை) வருகின்றனர்.
ஜூலை 29 – இரவு 10.45 மணி – குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கருணை மனுவை நிராகரிக்கிறார்.
ஜூலை 29 – இரவு 10.50 மணி – முக்கிய வழக்கறிஞர்கள் பிரசாந்த் பூஷன் மற்றும் ஆனத குரோவர் ஆகியோர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து இல்லத்திற்கு செல்கின்றனர். அங்கு துக்கு தண்டனையை நிறுத்தி வைக்கும்படி புதிய மனு ஒன்றை தாக்கல் செய்கின்றனர்.
ஜூலை 29 – இரவு 11.30 மணி – மேலும் பல்வேறு வழக்கரிஞர்களும் நீதிபதி தத்துவின் இல்லத்தில் குவிகின்றனர்.
ஜூலை 30 – நள்ளிரவு 1 மணி – களம் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா இல்லத்திற்கு மாற்றப்படுகிறது.
ஜூலை 30 – நள்ளிரவு 1.30 மணி – அனைத்து வழக்கரிஞர்களும் நீதிபதி தீபக் மிஷ்ராவின் இல்லத்தில் விரைகின்றனர்.
ஜூலை 30 – நள்ளிரவு 1.35 மணி – நீதிபதி தீபக் மிஸ்ரா , பிரபுல்லா சந்திர பண்ட் மற்றும் அமித்தவா ராய் ஆகிய முன்று நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தில் விசாரிக்க ஒப்புக்கொள்கிறது.
ஜூலை 30 – இரவு 2.10 மணி – நாக்பூர் சிறைச்சாலை காவலர் ஒருவர் யாக்கூப் மேமனின் உறவினரிடம் அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை ஒப்படைக்கிறார்.
ஜூலை 30 – இரவு 2.30 மணி – மூன்று நீதிபதிகளும் உச்சநீதிமன்றத்திகு வருகின்றனர். ஆனால் அட்டர்னி ஜெனரல் முகுல் ராய் வருவதற்கு தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது
ஜூலை 30 – அதிகாலை 3.20 – மீளாய்வு மனு மீதான விசாரணை துவங்குகிறது
ஜூலை 30 – அதிகாலை 4.50 மணி – நீதிபதிகள் மனுவை நிராகரித்து தீர்ப்பளிக்கின்றனர்
ஜூலை 30 – காலை 6.35 மணி – யாக்கூப் மேமன் தூக்கிலிடப்படுகிறார்
ஆனால் இந்த நாடகங்கள் எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே இரவு 3.17 மணியளவில் யாக்கூப் தூக்கு தண்டனைக்கு தயார் செய்யப்பட்டுவிட்டதாகவும். அது தொடர்பான தகவல்கள் அவருடைய உறவினர்களுக்கு வழங்கப்பட்டு விட்டதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக