சீராய்வு மனு விதிகள் தொடர்பான விளக்கங்களை உச்ச நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெளிவுபடுத்துமாறு, மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தேடப்படும் டைகர் மேமன் தலைமறைவானதை தொடர்ந்து அவருடைய தம்பி யாகூப் மேமன் வழக்கில் அரசிற்கு உதவி செய்வதற்காக இந்தியா வந்து
நீதிமன்றத்தில் ஆஜரானார் ஆனால் காவல்துறை அப்பாவியான அவர்மீது வழக்கு பதிவு செய்து 22-ஆண்டுகள் சிறையில் அடைத்து இறுதியாக யாகூப் மேமனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து யாகூப் மேமன் சார்பில் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டது. யாகூப் மேமனின் சீராய்வு மனு, உச்ச நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வரும் 30-ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட உள்ளார். இந்நிலையில், யாகூப் மேமன், தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தவே, குரியன் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, யாகூப் மேமன் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன், “மேமனின் சீராய்வு மனு தொடர்பான விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; அவரது சீராய்வு மனு விசாரணையில் இருந்தபோதே அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று வாதிட்டார்.
இதையடுத்து, சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து உரிய விளக்கங்களை செவ்வாய்க்கிழமை அளிக்குமாறு மத்திய அரசின் தலைமை சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதன் பிறகே, யாகூப் மேமனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக