Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 21 ஜூலை, 2015

ஒரு குடிகாரனுக்கு இருக்கும் மன உறுதி குடிபழக்கமில்லாத சராசரி மனிதர்களிடம் இருக்கிறதா?

எனக்கு தெரிந்த சில குடிகாரர்களிடம் குடிலை கெடுக்கும் குடியை விட்டொழிக்க முடியாதா?என்று கேட்பதுண்டு.இதே கேள்வியை செயின் ஸ்மோக்கர் என்று சொல்லப்படும் சிகரெட்,பான் பராக் பிரியர்களிடமும் கேட்பதுண்டு.
எனது கேள்விக்கு அவர்கள் சொல்லும் ஒரே பதில் பழகி விட்ட ஒன்றை உடனே நிறுத்த முடியாது பாய்.கையெல்லாம் நடுங்கும்,மூளை வேலை செய்யாது அதனால் வேறு வழியில்லாமல் குடிக்கிறேன் என்பார்கள்.
இதே கேள்வியை முஸ்லிம் பெயர் தாங்கி குடிகாரர்களிடமும் கேட்டு பார்த்தேன்?அவர்களும் மற்றவர்களை போலவே பதில் கூறினர்.நீங்களெல்லாம் முஸ்லிம்களாக இருந்து கொண்டு இப்படி சொல்லலாமா?அப்படியானால் நோன்பு காலத்தில் நோன்பெல்லாம் பிடிக்க மாட்டீர்களா?என்றேன்.
அதில் ஒருவர் நான் முழு நோன்பும் பிடித்து விடுவேன் பாய் என்றார்.(இது உண்மையா? என்பதை இறைவனே அறிவான்)நோன்பு நேரத்தில் குடிக்காமல் இருந்தால் கையெல்லாம் நடுங்காதா?மூளையெல்லாம் செயலிழந்து போகாதா?என்றேன்?
முதலிரண்டு நாட்களுக்கு ஒரு மாதிரியாகத்தான் இருக்கும்.பிறகு போக,போக சரியாகிடும் என்றவரிடம் பிறகு ஏன் நோன்பு முடிந்து மீண்டும் குடிக்க ஆரம்பிக்கிறீர்? என்றேன்.
நீண்ட நாள் பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது பாய் என்று மீண்டும் பழைய பல்லவியையே உறுதியோடு பாடினார் குடிகாரர்.
ஒரு குடிகாரனுக்கு இருக்கும் மன உறுதி குடிபழக்கமில்லாத சராசரி மனிதர்களிடம் இருக்கிறதா?
ஐந்து நேர தொழுகையாளிகளாக ஊருக்கு சிலர் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.சிலர் ஜும்ஆ தொழுகையாளிகளாக மட்டுமே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வர்.
இப்படிப்பட்ட சீசன் தொழுகையாளிகள் நோன்பு காலத்தில் ஒரு மாதம் மட்டும் தவறாமல் ஐந்து நேர தொழுகை மற்றும் தராவீஹ் தொழுகையை தொழுது முடித்து பெருநாள் கழிந்ததும் பள்ளியின் பக்கம் நெருங்குவதில்லை.
ஒரு முறை குடித்தவன் ஆயுள் முழுவதும் குடித்து சாவதற்கு ஆசைப்படுகிறான்.ஒரு மாதம் முழுவதும் ஐந்து நேரம் தொழுது பழகிய நாம் ஆயுள் முழுவதும் தொழுது மரணிக்க ஆசைப்பட வேண்டாமா?
ஒரு குடிகாரனுக்கு இருக்கும் மன உறுதி கூட குடிபழக்கமில்லாத சராசரி மனிதர்களிடம் இல்லையே என்று நினைக்கையில் வேதனையே மிஞ்சுகிறது.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக