Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 26 ஜூலை, 2015

நிறைய பெறுங்க நிறைவாய் வாழுங்க! மக்கள் தொகையை அதிகரிக்க மத்திய அரசு பிரச்சாரம்!

நிறைய பெறுங்க நிறைவாய் வாழுங்க!
மக்கள் தொகையை அதிகரிக்க மத்திய அரசு பிரச்சாரம்!


மத்தியில் பாஜக,சிவசேனா மற்றும் சங்பரிவார் அமைப்பினர் குடும்பக் கட்டுப்பாட்டை வலியுறுத்தி சர்ச்சைகளை வளர்த்துவரும் நிலையில், இந்த செய்தியின் தலைப்பு சிறிய குழப்பத்தை நமக்கு ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. மேற்கண்ட அரசின் நடவடிககி குடும்பக் கட்டுப்பாடு திட்டத்துக்கு நிச்சயமாக எதிரானதுதான். ஆனால், குடும்பக் கட்டுப்பாட்டினை தீவிரமாக வலியுறுத்தும் 125 கோடி பேர் வாழும் நம் இந்தியாவில்தான் இதே பிரச்சாரமும் நடந்துவருகிறது என்பது விசித்திரமான முரண்.

மத்திய சிறுபான்மை துறை அமைச்சகம் 2013-14 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தியிருக்கும் திட்டத்தின் பெயர் ‘ஜியோ பார்ஸி’. இந்தியாவில் பார்ஸி இன மக்களின் தொகை வெகுவாக அருகிக் கொண்டிருப்பதால், அதை தடுக்கும் வண்ணம், அதாவது பார்ஸி தம்பதிகள் நிறைய குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் ந்ன்கிற அடிப்படியில் நடக்கும் திட்டம் இது. 12வது ஐந்தாண்டு திட்டத்தில் இதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
8 ஆம் நூற்றாண்டு வாக்கில் 'Zeroastrians' என்ப்படும் இனக்குழுவினர் ஈரானிலிருந்து பயணித்து வந்து இந்தியாவின் மேற்குப் பகுதியில் குடியமர்ந்தார்கள். அவர்களே பார்ஸி இன மக்கள். ‘பார்ஸ்’ என்கிற சொல்லுக்கு ‘பெர்ஷியன்’ என்று பொருள். 17 ஆம் நூற்றாண்டில் அவர்கள் மொத்தமாக இடம்பெயர்ந்து மும்பையில் குடியமர்ந்தார்கல். இந்தியாவில் தற்போது ஒட்டுமொத்த்மாகவே பார்ஸி இனத்தவர் அறுபதாயிரம் பேர் இருந்தால் அதிகம். சுதந்திரத்துக்கு முன்பு இந்த என்ணிக்கை அப்படியே இருமடங்காக இருந்தது. தொழிலதிபர்கள் டாட்டா, கோத்ரேஜ் போன்றவர்களும் பார்ஸி இனத்தைச் சார்ந்தவர்கள்தான்.
இன்று ஒரு பார்ஸி பிறந்தால், நானுகு பார்ஸி மரணிகிறார்கல் என்கிற பிறப்பு இறப்பு விகிதம் இருக்கிறது. முப்பது சதவிகித பார்ஸிக்கள் கடைசிவரை சிங்கிளாகவே இருக்கிறார்களாம். திருமணத்தில் விருப்பமில்லாமை, தாமத திருமணம், கலப்பு திருமணம் போன்ற காரணங்களால் பார்ஸிக்களின் தொகை குறைந்து வருகிறது. எனவேதான் இவர்களது என்ணிக்கையை பெருக்க இந்திய அரசு ‘ஜியோ பார்ஸி’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் படி,
* திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் பார்ஸிக்களை கண்டறிந்து, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பது.
* அவர்களது இனம் அருகிவருவதை குறித்து புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொல்வது.
* பார்ஸி மக்கள் பெருக்கத்தை ஓர் இயக்கமாக முன்னெடுப்பது.
* திருமணமாகியும் குழந்தைப்பேறு இல்லாத பார்ஸி தமதியினருக்கு மருத்துவ உதவிகள் செய்துக் கொடுப்பது உள்ளிட்ட உதவிகளை இந்திய அரசு செய்து வருகிறது.
நம் நாட்டில் நாமே அறியாமல் இப்படியொரு நிகழ்வு நடந்து கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக