ஃபுகுஷிமா அணுஉலை வெடிப்பு: அணுக்கதிர் வீச்சின் பாதிப்பை உணர்த்தும் மரபுப் பிழை பூக்கள் மற்றும் பழங்கள்!
ஜப்பான் ஃபுகுஷிமாவில் சுனாமியால் அணு உலைகள் அழிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பு அங்கு பூக்கள் பூத்துக் குலுங்குவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும், அவைகளில் மரபுப் பிறழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'RED ZONE' பகுதி அதாவது மனிதர்கள் வாழ தகுதியற்ற பகுதி என ஜப்பான் அரசால் அறிவிக்கப்பட்ட பகுதியில் இந்த பூக்கள் பழங்கள் காணப்படுகின்றன்.
அணுக்கதிர்வீச்சு காரணமாக ஏற்ப்பட்டுள்ள ஜீன் மாற்றம் காரணமாக இது நிகழ்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதன் தாக்கம் எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்று தெரியாமல் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
உலகின் மோசமான அணு உலை அழிவாக அறியப்படும் இச்சம்பவத்திற்குப் பிறகு அங்கே வசித்து வந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அப்பகுதியில் மரபுபிறழ்ந்த விகாரமான உருவமுடைய பூக்கள் பூத்துள்ளன.
ஜப்பானியர் ஒருவர் சமீபத்தில் அங்கே பூத்திருந்த மரபு பிறழ்ந்த பூக்கள், பழங்களை படம் பிடித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த பூக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தனது இயல்பான தோற்றத்தை இழந்து விகாரமாக காட்சியளிக்கும் பூக்கள் மற்றும் பழங்களை பார்க்கும் போதே நமக்குள் ஏதேதோ நினைப்புகள் வருகின்றன. அணு உலை அழிந்து நான்கு ஆண்டுகளுக்கு பின்பும் அதன் பாதிப்பு இன்னும் அப்பகுதியில் இருப்பதை இந்த பூக்கள் நினைவுபடுத்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக