Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 ஜூலை, 2015

யாகூப் மேமனுக்கு தூக்கு – வார்த்தைகளால் விவரிக்க முடியாத கீழ்மை!

யாகூப் மேமன் இன்னொரு அப்சல் குரு. முஸ்லிம்கள் காவு கொடுக்கப்படுவது புதிதுமல்ல, இது முதன் முறையுமல்ல. சிறையில் இருக்கும் தூக்கு தண்டனைக் கைதிகளில் 94% பேர் முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்கிறது தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் ஆய்வு. முஸ்லிம்களைக் கொன்றதற்காக ஒரு இந்து வெறியனோ, தலித்துகளைக் கொன்றதற்காக ஒரு சாதி வெறியனோ இதுவரை இந்த நாட்டில் தூக்கிலிடப்பட்டதில்லை.

இன்று தீபக் மிஸ்ரா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, “தத்து நடத்திய விசாரணை முறையானதுதான்” என அங்கீகரித்து, தூக்கில் போட பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.
“பவானிசிங்கின் நியமனம் செல்லாது, ஆனால் அவரை அரசு வழக்குரைஞராக வைத்து நடந்த விசாரணை செல்லும்” என்று தீர்ப்பளித்த நீதி அரசர் இவர்தான் என்பதை நினைவிற்கொள்க.
யாகூப் மேமன் நம்பவைத்துக் கழுத்தறுக்கப்பட்ட ஒரு பலியாடு. மோடியின் அபிமானியான முன்னாள் உளவுத்துறை அதிகாரி ராமன்தான் இதற்கு சாட்சி. யாகூபுக்கு நிறைவேற்றப்படவிருக்கும் மரண தண்டனை வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு கீழ்மை! அநீதி, இந்துவெறி, நயவஞ்சகம், நம்பிக்கைத் துரோகம் என எந்தவொரு சொல்லுக்குள்ளும் இதனை அடக்க முடியாது.
இது இந்தியாவின் இழிபுகழ் பெற்ற “கூட்டு மனச்சாட்சி”க்குக் கொடுக்கப்படும் இன்னொரு ரத்தக்காவு. ஆனால் இதை நீதி என்று சொல்கிறது உச்ச நீதிமன்றம். “எய்தவன்” யாகூப் தான் என்றும் குண்டு வைத்தவர்கள் அம்புகள் என்றும் கூறுகிறது நீதிமன்றம். டைகர் மேமனின் தம்பி என்ற ஒரு காரணத்தைத் தவிர எய்தவன் என்று யாகுபை குற்றம் சாட்டுவதற்கு வேறு எந்தச் சாட்சியமும் இல்லை என்பதைப் பல சட்ட வல்லுநர்களும் கூறி விட்டார்கள்.
பாபர் மசூதி இடிப்பு, 1992-93 மும்பை படுகொலைகள் ஆகியவற்றின் “எய்தவர்கள்” அமைச்சர் நாற்காலிகளை அலங்கரிக்கிறார்கள். குஜராத் இனப்படுகொலையை “எய்தவர்” பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மும்பை குண்டு வெடிப்புக் குற்றத்துக்கு ரத்தக்காவு வேண்டும் என்று கேட்கும் துவிவேதிகளும் சதுர்வேதிகளும் மிஸ்ராக்களும் இதற்குப் பதில் சொல்வதில்லை.
நேற்று யாகூபின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தவே, தனது முடிவை நியாயப்படுத்த நீதிமன்றத்தில் ஒரு சுலோகத்தைச் சொன்னாராம். அந்த சுலோகம் இடம்பெற்ற நூல் மனுநீதி.
1994 இல் சி.பி.ஐ-இன் பிடியில் இருந்த யாகூப் மேமனை முதன் முதலில் சந்தித்த பத்திரிகையாளர் மஸீ ரஹ்மான், அவுட் லுக்கில் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார் – “இந்திய நீதியின் மீது அப்பாவித்தனமாக பெரு நம்பிக்கை வைத்திருந்த குற்றத்துக்காக யாகூப் தூக்கில் தொங்க வேண்டியவன்தான்!”
நெஞ்சைப் பிழியும் இந்தச் சொற்களா, ஈரம் கசியாத இந்து மனச்சாட்சியை அசைத்துவிடும்?
(வினவின் பக்கம் )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக