ஆடை கட்டுப்பாடு பெண்ணியத்தை காக்கும் என்று நாம் சொன்னால் நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்.
முற்போக்கு சிந்தனை கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தனிமைப்படுவதே இயல்பாகி விடுகிறது.தமது தனிமையை மறைக்க சில புதுமையை வெளிக்கொணரும் திறமையை பெற்று விடுகிறார்கள்.
ஆண்களை போல பெண்களுக்கும் சமவுரிமை உண்டு என்னும் ஆயுதத்தை நம்பி பல்வேறு ஒவ்வாமை கருத்தை விவாதப் பொருளாக்கி வருகின்றனர்.
அதில் ஒன்று ஆடை கலாச்சாரம்.பெண்களுக்கு மட்டும் பர்தா என்னும் ஆடை கட்டுப்பாடு விதிக்கும் ஆண்வர்க்கம் தங்களுக்கு மட்டும் அதில் விலக்களிப்பது ஏன்?என்றெல்லாம் பிதற்றி வருகின்றனர்.
அரை,குறை ஆடைகளால் தான் பாலியல் வன்புணர்வு நடைபெறுமென்றால்…புர்கா அணிந்து தன்னை மறைத்து வாழும் சவூதி போன்ற நாடுகளில் பாலியல் வன்புணர்வே நடைபெறுவதில்லையா?என்ற கேள்வியை முன்வைக்கின்றனர்.
அரபு நாடுகளின் மீதான குற்றச்சாட்டை முன்வைத்து ஆடை சுதந்திரம் கேட்கும் பெண்கள் அங்கே நடைபெறுவதாக சொல்லும் பாலியல் வன்புணர்வு தொடர்பான ஆதாரங்களையும் குறிப்பிட வேண்டும்.
‘ஆடை கட்டுப்பாடு பெண்ணியத்தை காக்கும் என்று நாம் சொன்னால் நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்’.
தன் கவர்ச்சியை வெளிக்காட்ட துடிக்கும் பெண்ணுக்கு ஆடை கட்டுப்பாடு தேவையில்லையே?சினிமாக்களில் நடிக்கும் சில பெண்களின் அரை,குறை ஆடை கொண்டே அவர்களை கவர்ச்சி புயல்,கவர்ச்சிக்கன்னி என்றெல்லாம் அடைமொழி கொண்டு அழைக்கின்றனர்.
பெண்ணின் மார்பிலே தான் அவளது கவர்ச்சி முழுமை பெறுகிறது என்ற நம்பிக்கையில் தானே இயற்கையில் மார்பு சிறுத்தவர்கள் கூட செயற்கையாய் தன்மார்பை பெரிதாக்க துடிக்கின்றனர்.
அத்தகைய மார்பை போதிய ஆடை கொண்டு முழுமையாய் மூடி வாழுங்கள் என்று நாம் சொன்னால்…நமக்கு பெயர் ஆணாதிக்க திமிர் பிடித்தவனாம்.
பர்தா வேண்டாமென்று விரும்பும் பெண்களை யாரும் கட்டாயப்படுத்துவதில்லை.அதற்காக டூ பீஸ் ஆடையில் சுற்றி தெரிவதை யாரும் விரும்புவதுமில்லை.
பர்தாவுக்கு எதிரான வன்ம பிரச்சாரத்தை வைத்து தன்னை முற்போக்கு வாதியாக அடையாளப்படுத்த துடிப்பவர்கள் கலாச்சார சீர்கேடர்களே.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக